ஈஸ்டர்

பெண்மை e-magazine கட்டுரை

எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து தங்களை இறைவன் மீட்டதை நினைவு கூரும் முகமாக யூத மக்கள் பாஸ்கா பண்டிகையை கொண்டாடுவார்கள். கிறீஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளானது பாஸ்காவின் பின் வரும் முதல் ஞாயிறு ஆகும். யூத நாட்காட்டி நிலவின் சுழற்சியை மையப்படுத்தி கணிக்கப்படுவதால் ஈஸ்டருக்கும் குறிப்பிட்ட தினம் என்று ஒன்று இல்லை!

ஈஸ்டர் என்பது என்ன?
சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்று நாட்களின் பின்னர் உயிர்த்தெழுந்த தினம்! சிலுவையில் அறையுண்ட இறைமைந்தன் மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பது பைபிள் வாக்கு அதுவே உலகெங்கும் உள்ள கிறீஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் உள்ளது! ஈஸ்டருக்கு முதல் வரும் நாற்பது நாட்கள் (lent) இயேசு பாலைவனத்தில் சாத்தானால் சோதிக்கப்பட்ட போது உணவும் தண்ணீரும் இன்றி உபவாசம் இருந்ததை நினைவு கூர்ந்து கிறீஸ்தவர்களும் அந்த நாற்பது நாட்களையும் ஒறுத்தல் காலமாக ஆடம்பரங்களை குறைந்து அனுஷ்டிக்கின்றனர். சிலரிடம் உபவாசம் இருக்கும் வழக்கமும் உண்டு!

சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் புதன் கிழமையில் ஆரம்பிக்கும் நாற்பது நாட்கள் (lent) இயேசு சிலுவையில் அறையப்பட்ட பெரிய வெள்ளிக்கிழமையில் நிறைவடைய தமக்காய் தம் பாவங்களுக்காய் சிலுவையில் ஒரே பலியாய் உயிர் நீத்த ஆண்டவர் இயேசுவை நினைவு கூர்ந்து பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் மக்கள் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையை உயிர்த்தெழுந்த தினமாக கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்!

இந்தப்பண்டிகை உலகம் முழுதும் வேறு விதமான பாரம்பரியங்களோடு கொண்டாடப்படுவது அதன் சிறப்பு! ஈஸ்டர் உலகெங்கும் உள்ள மக்களால் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்!

உலகின் மிகப்பெரிய கார்னிவெல் கொண்டாட்டங்களில் ஒன்றான பிரேசிலின் இந்த கோலாகலம் ரியோடி ஜெனிரோவில் சாம்பல் புதனுக்கு முதல் நாளே ஆரம்பம் ஆகிவிடும். கண்ணைப்பறிக்கும் வர்ணங்களில் பட்டாம் பூச்சி முதலான உருவங்களில் உடையணிந்த படி அணியணியாக மக்கள் நடக்க ஆரம்பித்து விடுவர் ஆடல் பாடல்களுடன்! இதில் வானில் மிதக்கும் உருவங்கள் வாகனங்களில் பிணைக்கப்பட்டு அந்த பவனியில் இணைவது கண்கொள்ளாக்காட்சி!

எத்தியோப்பியா

Lent நாட்களில் எத்தியோப்பிய கிறீஸ்தவர்கள் அசைவ உணவுகள் மற்றும் பால் பொருட்களை வாங்கவோ உண்ணவோ செய்வதில்லை. ஈஸ்டர் ஞாயிறுக்கு முதல் ஞாயிறான குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைகளில் செய்யப்பட்ட அணிகலன்கள், மோதிரங்களில் சிலுவைகளை பொறித்து அணிந்து கொள்வது அவர்கள் வழக்கம். ஈஸ்டர் வழிபாடு முதல்நாள் சனியிரவு எட்டு மணிக்கு ஆரம்பித்து ஞாயிறு மாலை மூன்று மணி வரை நீளுமாம்! மக்கள் தங்களிடமுள்ள ‘Yabesha Libs’ எனப்படும் சிறப்பான வெள்ளை ஆடைகளை அணிந்து ‘twaf’ எனப்படும் மேழுவர்த்திகளை ஏந்தியபடி வழிபாட்டில் கலந்து கொள்வர். வழிபாடு முடிந்ததும் மறுநாள் காலை dabo எனப்படும் ஒருவகை பாணை குடும்பத்தலைவர் வெட்டிப்பகிர அதை உண்டு தங்கள் நாற்பது நாள் lent காலத்தை முடித்துக்கொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

பிரான்ஸ்

பெரிய வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தேவாலய மணிகள் அடிப்பது இல்லையாம். மணிகள் எல்லாம் போப்பாண்டவரை காண சென்றுவிட்டதாக சிறுவர்களுக்கு வேடிக்கையாக சொல்லப்படுவதும் உண்டு! இன்னொரு சுவாரஸ்யம் அந்த நாட்டு மக்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையில் வீட்டின் கதவுகளின் மேல் குருத்தோலைகளை வைத்திருப்பார்களாம்.


Oberammergau என்ற ஜெர்மன் கிராமம் 1633 ஆம் ஆண்டு பிளேக் நோய் தாக்கி எண்ணிலடங்கா மரணங்களை சந்திக்கவே அந்த ஊரின் மதத்தலைவர்கள் இறைவனிடம் தங்கள் ஊரை காப்பாற்றும் படியும் தாங்கள் தப்பித்தால் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறையும் கடவுளை துதித்து பிரமாண்டமான நாடகம் நடத்துவதாகவும் பொருத்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஊரும் தப்பியது. அன்றிலிருந்து நாடகமும் அங்கே நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஊரிலுள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் அந்த நாடகத்தில் பங்கு கொள்வார்களாம். விருந்தினர்களையும் அழைப்பது உண்டாம்!
ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த நாடகம் தினமும் காலை ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்து இரவு பன்னிரண்டரை மணிக்கு நிறைவடையுமாம்!
கிரீஸ்

கிரீக்கின் பாரம்பரிய தேவாலயங்களில் பெரிய வெள்ளியன்று கல்லறை ஒன்று நடுவில் வைக்கப்பட்டு மக்கள் மரண வீட்டுக்கு செல்வது போலவே வழிபாட்டுக்கு செல்வர். சனி மாலை அனைவருக்கும் குருக்கள் மெழுகுதிரிகளை வழங்க நள்ளிரவில் அதை ஏற்றி வாணவேடிக்கைகளோடு ஈஸ்டர் தினத்தின் ஆரம்பத்தை குறிப்பாக சொல்வர். ஈஸ்டர் காலை விஷேட காலை உணவு குடும்பமாக அருந்தப்படும்! பாரம்பரிய கிறீக் ஈஸ்டர் கேக் ஆரஞ்சு மற்றும் பாதாம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு மேலே ஸ்பைசியான ஆரஞ்சு சோர்ஸ் ஊற்றப்படுவது வெகு பிரபலம்!


இத்தாலி

வத்திக்கான் நகர சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மாபெரும் வழிபாடு பாப்பரசரால் நடாத்தப்பட்டு உலகம் முழுவதும் ஒளிபரப்பபபடுவது குறிப்பிடத்தக்கது.
குருத்தோலை ஞாயிறன்று குருத்தோலைகளுக்கு பதிலாக ஒலிவ மரக்கிளைகள் அங்கே உபயோக படுத்தப்படும்.


போர்த்துக்கல்

மிகப்பெரிய நெருப்பு உருவாக்கப்பட்டு இயேசுவை காட்டி கொடுத்த யூதாசின் வைக்கோல் கொடும்பாவிகளை அந்த நெருப்பில் இட்டு மக்கள் பரவலாக எரிப்பது வழக்கம்.

இங்கிலாந்து


ஈஸ்டர் முட்டைகளை (Easter egg) அலங்கரிப்பது இங்கிலாந்தில் பரவலாக மக்களால் செய்யப்படுகிறது! கிறீஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் இரத்தம் சிந்துதலை நினைவு படுத்து முகமாக முட்டைகளை சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கும் பழக்கம் ஆபிரிக்க மக்களிடம் இருந்து கிறீஸ்தவர்களுக்கு வந்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. முதலாவது ஈஸ்டர் முட்டை பாப்பரசரால் எட்டாம் ஹென்றி மன்னருக்கு வழங்கப்பட்டதில் இருந்து இந்த வழக்கம் இங்கிலாந்தில் இருந்து வருகிறது. இப்போது வெறும் அலங்கார முட்டைகளுக்கு பதிலாக சாக்லேட் முட்டைகளும் காணக்கிடைக்கிறது!


உலகின் வேறு சில பகுதிகளில் முட்டையிடும் முயலான ஈஸ்டர் முயல் (Easter bunny) santa போலவே ஈஸ்ட்டர் தினத்தில் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் உருவகமாக சித்தரிக்கப்படுகிறது!

இறுதியாக……….Easter தினத்தை கொண்டாடுவதில் உலகம் முழுதும் மக்கள் வேறுபாடு காண்பித்தாலும் அதன் உண்மை காரணம் ஒன்றே ஒன்றுதான். மரணத்தை வென்று மீண்டும் எழுந்த இயேசுவைப்போலவே நாமும் பாவமும் கேடுகளும் நிறைந்த நம் வாழ்க்கையில் இருந்து அன்பினால் மீண்டும் பிறப்போம்!

Our Lord died on Good Friday,
But the cross did not destroy
His resurrection on Easter morn
That fills our hearts with joy!!!!
(taken from the poem Easter joy by Joanna Fuchs)

Happy Easter!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: