உத்தம வில்லன்Production: Kamal Haasan, N Lingusamy
Cast: Andrea, K Balachander, K Viswanath, Kamal Haasan, Parvathi Menon, Pooja Kumar
Direction: Ramesh Arvind
Screenplay: Kamal Haasan
Story: Kamal Haasan
Music: M Ghibran
Background score: M Ghibran
Cinematography: Shyam Dutt
Dialogues: Kamal Haasan
Editing: Vijay Shankar

கொஞ்சநாள்களாக இம்சையான பாராட்டுக்களின் முன் அமர்ந்திருக்கும் கமலைக்கண்டு கமல் ரசிகையான எனக்கே கொஞ்சம் அலுப்புத்தட்டியதால் எப்படி இருக்கப்போகிறதோ என்ற மனத்துடனே உத்தமவில்லன் பார்க்க சென்றிருந்தேன்.

முதலாவது காட்சி கமல் அரிதாரம் பூசி வலுக்கட்டாய இளமையை வரவழைத்துக்கொண்டு, இயந்திரத்தனமான நடன அசைவுகளுடன் லவ்வா என்று பூஜா குமாருடன் ஆட ஆரம்பிக்கிறார். அவ்வளவு தான் முடிந்தது என்று எண்ணிக்கொண்டு விட்டேன். பிறகு ஒவ்வொரு காட்சியாக திரையில் விரிய விரிய அப்படியே எங்களை இழுத்து கட்டிபோட்டு விட்ட வித்தையை இன்னும் என்னால் இனம்பிரிக்க முடியவில்லை.

இது வழக்கமான மசாலா நகைச்சுவை படம் அல்ல.நகைச்சுவை என்று தனியாக எதுவுமே இல்லை. திரைக்கதை என்றால் காதல், பல தாரம் என்று வாழும் ஒரு நடிகனின்(மனோரஞ்சனாக கமல்) வாழ்க்கையைத்தான் திரைப்படம் சொல்கிறது . குறிப்பிட்டு சொல்ல எதுவுமே இல்லை, இருப்பினும் மனம் நெகிழ்ந்து என் கண்ணிலும் ஒரு சொட்டுக்கண்ணீர் வந்தது. திருப்பங்கள் உண்டு ஆனால் அதில் எதை அவிழ்த்தாலும் உங்களுக்கு படம் பார்க்கும் ஆர்வத்தையே இல்லாமல் செய்து விடும். ஆகவே மேலோட்டமாகவே சொல்லி சென்று விடுகிறேன்

கமல் வசனங்கள் என்பதால் அவருக்கேயுரிய குசும்புடன் புத்திசாலித்தனமாக அங்கங்கே ஷொட்டு வைத்து போகிற போக்கில் நகைச்சுவையை அள்ளித்தெளித்து அங்கங்கே கத்தி போலவும் கீறிசெல்கின்றன. நதியில் அலையாய் நகைச்சுவை சோகம் உணர்வுகள் என்று எழுந்து எழுந்து அடங்குகின்றன.

இயக்குனர் சிகரத்துக்கு இதை விட சரியான tribute வேறு எதுவாகவும் இருக்க முடியாது! படத்தில் வரும் நடிகன் கமலாக கேபியை தான் நான் பார்த்தேன். கலைஞர்கள் சாகாவரம் பெற்றவர்கள் என்பதுதான் எவ்வளவு உண்மையானது!

மனோரஞ்சன் என்ற மிகப்பெரும் புகழ்வாய்ந்த நடிகனின் கதையில் ஒரு நடிகன் இழந்த தனிமனித சுதந்திரம், பிள்ளைகளுடனான அவனுடைய நேரம் எல்லாமே அலட்டலில்லாமல் போகிற போக்கில் சொல்லி சென்றார்.

பந்து விளையாடும் மகனிடம் நீ என்னவாக ஆகப்போறே என்று கேட்பாரே! அந்த இடம்… ஓ… கமல்!

மார்க்கதரிசி(கேபி) இயக்கும் திரைப்படத்தில் அவர் பூஜா குமாருடன் நடிக்கும் அந்த அரச கதையை மனோரஞ்சனின் வாழ்வுடன் தொடர்புபடுத்தும் விதம் ரொம்ப பிடித்திருந்தது! ஆனால் அங்கே கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்..ரொம்பவே நீளம்!!!


ஊர்வசி மனோரஞ்சனின் மனைவியாக ஒரு சராசரி பெண்ணாக அருமையாய் நடித்திருந்தார். அண்ட்ரியா ஒரு டாக்டராக தனக்கு தரப்பட்டதை நிறைவாய் செய்திருந்தார். ஜெயராம் கொஞ்சமே வந்தாலும் gentleman ஆகவே வந்து சென்றார். M. S பாஸ்கர் தவிர்க்கவே முடியாத பாத்திரம், நிறைவாக செய்திருக்கிறார்.

நாசர் அந்த மார்க்கதரிசி திரைப்படத்தில் வில்லன், நகைச்சுவை பகுதியை அப்படியே நிரப்புகிறார். பூஜா குமார் இளவரசி! நடனம் அழகு நடிப்பு என்று இவருக்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. சாவை வென்றவனாய் அப்பாவி உத்தமனாய் கமல் செய்வதெல்லாம் ஒரே சிரிப்பு. அப்படியே அந்த திரைப்பட பகுதிகள் மனோரஞ்சனின் வாழ்வுக்கு திரும்பும் போது நெஞ்சம் கனக்க வைத்தது.

சாவை வெல்ல உத்தமன் மூன்று வழிகள் சொல்கிறார்.

1. முக்காலமும் உணர்ந்த ஞானியாவது
2.
காவியம் எழுதுவது
3.
ஒரு கலைஞனாவது

ரசித்தேன்!

பார்வதி மேனன் ஷார்ட் பாப்பில் ரொம்ப அழகாக இருப்பது மட்டுமல்ல கொஞ்சமே வந்தாலும் அவரது கண்களே கதை சொல்லின. whatever என்று மனோரஞ்சனை சந்தித்ததும் கோபமாய் பேசுவதும் பிறகு உருகுவதுமாய் நடித்திருந்தார். கமல் மகனுடன் இவரது உறவு கவிதை, அந்த ஹேர்ஸ்டைலில் தான் இவர் வருவார் என்று முதல் பகுதியிலேயே நான் ஊகித்து விட்டேன் ஹி ஹி ஹி ஹி

இரண்டாவது கதாநாயகன் ஜிப்ரான்! பாடல்களில் அவ்வளவு கவரவில்லை. முதல் பாடல் படத்துக்கு சம்பந்தமே இல்லாத பெப்பியான ஒரு டூயட் அதையும் நீங்களே பாடவேண்டுமா கமல் சார்? அதையாவது வேறு யாரிடமும் தந்திருக்கலாமே! ஹா ஹா பின்னணி முழுதுமே கமல் குரல் தான் ஆக்கிரமித்திருக்கிறது படம் முழுதும்! பாடல்கள் எதுவும் என்னை கவர வில்லை முதலில். இருந்தும் நவயுக மனோரஞ்சனின் வாழ்க்கை, ராஜா ராணி கால கதை என இரண்டு காலகட்டத்திலும் பின்னணி இசையில் அப்படியொரு மிரட்டல் இசை! வாழ்த்துக்கள் ஜிப்ரான்! படம் பார்த்தபின் காதலென்னும் கடவுளின் பாடல் உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

எனக்கு படத்தில் மிகப்பிடித்த விடயம் குறியீடுகள்..மூன்றை மட்டும் சொல்கிறேன்

அந்த ராஜா ராணி படத்தி பெயர் உத்தம வில்லன், அதை டைரக்டர் எடிட் செய்ய ப்ரொஜெக்டரில் போட்டு விட்டு டைட்டில் தெரியும் படி திரையை வைத்தபடி கமல் அந்த முக்கியமான லெட்டரை படிப்பார். அப்போது சரியாக கமலின் தலையின் நிழல் அங்கே பொருந்தும்!

இன்னொரு இடம் உத்தமனாக நடிக்கும் போது கேபி பயந்து போய் கட் சொல்வார். ஒன்றுமே இல்லை என்று சமாதானம் சொல்லியபடி வந்து கமல் ஒரு கப்பலை பார்க்க இறுதி மூச்சுக்கு துடிக்கும் மீன்கள் அப்படியே ஸ்க்ரீனில் வரும்!

மூன்றாவது மகனையும் மகளையும் முக்கியமான லெட்டரை படிக்க அழைத்து செல்லும் போது அவர் இரணியன் வேடத்தில் தெய்யம் நடன மேக்கப்களை முகத்தில் பூசிக்கொண்டிருப்பார். பிறகு அவர்கள் இருவரும் லெட்டர்களை படிக்கும் போது அருகில் இவர் சாவகாசமாக மேக்கப்பை கலைக்க ஆரம்பித்து அவர்கள் முடிக்கும் போது மொத்த வேஷத்தையும் கலைத்திருப்பார்!

இப்படி படம் முழுதுவதும் பலப்பல விடயங்கள்!

கடைசியில் இரணிய நாடகம் கமல் என்னும் நடிகன் எப்படிப்பட்டவன் என்பதற்கு இன்னொரு உதாரணம்!

எனக்கு மனதில் நெருடிய ஒரே ஒரு விடயம் அண்ட்ரியா

அன்ட்ரியாவுடனான அவரது உறவு மனோரஞ்சன் எந்த கட்டுக்களுக்கும் உட்பட்டவர் அல்ல. வெகு இலகுவாக போகிற போக்கில் வாழ்பவர் என காட்டுகிறதே. பிறகு யாமினியுடனான காதலுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு முக்கியத்துவம் அந்த கதாபாத்திரத்தால் தர முடிந்தது? கமல் தனது சொந்த வாழ்க்கையை திணித்து விட்டாரா என்று ஒரு கணம் எண்ணத்தோன்றியது, வேறு விதமாக கூட இருக்கலாம் ஆனால் எனக்கு புரியவில்லை.

மொத்தத்தில் படம் எனக்கு நிரம்ப பிடித்தது! வித்தியாச முயற்சிகளை தொடர்ந்து கொடுத்து வரும் கமலுக்கு என் வணக்கங்கள்.

இது என்டேர்டைன்ட்மென்ட் படம் அல்ல, நகைச்சுவைப்படமும் அல்ல, இது இல்லாமல் உங்களால் படத்தை ரசிக முடியாது என்றால் நீங்கள் செல்லாமல் இருப்பது உத்தமம். புகழ் ஏணியின் உச்சத்தில் இருப்பவன் ஒருவனின் வாழ்க்கையை எந்த வொரு சமரசமும் செய்யாமல் ஆங்காங்கே உணர்ச்சி குவியல்களுடன் செல்லும் படத்தை ஒரு வித்தியாச அனுபவத்துக்காக நிச்சயம் ரசிக்கலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: