பத்து எண்றதுக்குள்ள

படம் பார்க்க போலாம் வா வான்னு தம்பியும் என் வீட்டுக்காரரும் சேர்ந்து வருந்தி அழைச்சப்போவே நான் அலர்ட் ஆகியிருக்கணும்! என்ன பண்றது? விதி வலியது! பயபுள்ள இருபது வருஷ கோபத்தையும் காமிச்சிட்டான்! மக்களே இப்படி ஓபனாவே சொல்றேனேன்னு குழம்பறீங்களா? அந்தளவு நொந்து போய் வந்திருக்கேன் மக்கா! வெகு சராசரி ரசிகையான என் பார்வைல படத்தை பற்றி சொல்றேன். எப்படியிருக்குன்னு பார்த்துரலாமா?

உத்தரகண்ட்ல ஒரு கிராமம், அங்கே ஜாதி குறைஞ்ச மக்கள் நாற்பது பேரை வெட்டிடறாங்க அந்த இன்சிடென்ட் தான் பர்ஸ்ட் சீனே. ஆனா இந்த இன்சிடெண்டோட தான் மீதியை கனெக்ட் பண்ணப்போறேன்னோ/ ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் பசுபதிக்கும் இதுல எந்த கனெக்ஷனும் இல்லை என்று சொல்லவோ/இல்லை தனக்கே ரிமைன்ட் பண்ணிக்கவோ படத்துல இந்த நியூசை பல தடவை பலர் படிக்கற போல டைரக்டர் சீன் வச்சுருக்கார்! அதுனாலயே டேய் இங்கே நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் நோர்த் இந்தியாலக்கு அதாவது கதைக்கு போங்கடான்னு நாங்க டெண்ஷனாகறோம்!

படத்துல விக்ரம் கார் ஓட்டறவரா வர்றார். அவர் எல்லாத்தையுமே பத்து எண்றதுக்குள்ள முடிச்சிருவார். அவருக்கு பேரே கிடையாது! BOND பேர்ல தான் நெறைய நேரம் வர்றார். ரொம்ப வீரமான தீரமான சாகசம் பண்ற ஆளு! படத்துல அவரோட காரக்டர் ஸ்கெட்ச் இதுதான்! விக்ரமோட ஓபனிங் சீன் வரும் பாருங்க! ஸ்பீட் படத்துல ஒரு உடைஞ்ச பிரிட்ஜை பஸ் தாண்டணும்னு எவ்ளோ நேரம் பிளான் போடுவாங்க! அங்கே நம்ம Bond ஐ விட்டிருந்தா அசால்டா பஸ்ஸை ரெண்டு தரம் பல்டி அடிச்சு டிரைவர் சீட்ல இருந்து கீழே பாய்ஞ்சு பாமை தூக்கி வீசிட்டு பத்து செக்கன்ல மேல வந்துருப்பார்! அப்படியொரு ஓபனிங்! சப்பான்னு நான் இருக்க என் பக்கத்துல இருந்தவர் புண்ணியம் தேடி காசிக்கு போனோம்னு கண்ணு தெரியாத விக்ரமா ஆக்ஷன் போட்டுட்டு இருந்தார்! ஹா ஹா ஆனா ஒண்ணு சொல்லியே ஆகணும் மனுஷன் செம்ம யூத்தா அழகா இருக்கார்! பணத்துக்காக ஸ்மக்ளிங் பண்ணற பசுபதி காங்குக்கு அப்பப்போ ஹெல்ப் பண்ணறார். ஏன் எதுக்கு என்றதெல்லாம் படத்துல பாருங்கே!!!

சமந்தா!!! இவங்க படத்துல மென்டலா நடிக்கிறாங்க. ஆனா அந்த விஷயம் டைரக்டருக்கு தெரியாது! அனேகமாக சமந்தாக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்! அவங்க என்னவோ ஜெனிலியான்னு நினைச்சு நடிக்க நமக்கு ஐயோ பாவம் யார் பெத்த புள்ளையோன்னு பீலிங் ஆகுது! பட் சமந்தாவும் செம கியூட்டா அழகா இருக்காங்க. அப்பியறன்ஸ்ல மட்டும்! ஹாஸ்டல்ல தங்கிருக்கற இவங்க வாழ்க்கையை ஜாலியா அனுபவிச்சு வாழ்றாய்ங்களாம்! நான் சொல்லலைங்க! அவங்களே சொல்லிக்கிராய்ங்க! டிரைவிங் எக்சாம்ல பதினாலு தடவை பெயில் ஆகி அடுத்த தடவை விக்ரம் கிட்ட கத்துக்க வர்றாங்க. ஏற்கனவே ரெண்டு மூணு பார்வைக்கு பிறகு இது மூலம் அவங்க அறிமுகம் ஆகறாங்க!

இப்படியா அவங்க வாழ்க்கை போயிட்டு இருந்தப்போ அங்கே ஒரு வில்லன் பூரான் சிங், கடத்தல் தொழில் தான் அவரும் சும்மா அசால்டா பாஷா பில்டப்போட சாருக்கு ஒரு கட்டை விரல் பார்சல்னு அமோகமா டெசர்ட் பாக்ரவுன்ட்ல வாழ்றார்! அவர் ஒரு நாள் சமந்தா பிக்ஸ்ரை பசுபதிக்கு ஈமெயில் பண்ணி இவளை தூக்குன்றார்!!! அயய்யோ இது அவ்ளோ வர்த் இல்லிங்கண்ணான்னு மறுபடியும் என் பக்கத்துல சவுண்டு! ஹா ஹா

இப்படி இவங்க சமந்தாவை கடத்துனதும் அவரை நார்த் இந்தியா கொண்டு போய் சேர்க்கற பொறுப்பு எப்படியோ விக்ரம் கிட்ட வருது! ஆனா தான் ஓட்டிட்டு போற கார்ல பின்னாடி சமந்தா மயக்கத்துல இருக்கு என்றதும் அது தான் அவங்க கிட்ட சேர்க்கப்போற பொருள் என்றதும் தெரியாம அப்பாவியா இருக்காரு! இவ்ளோ நாளும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று எல்லாத்தையும் சரியா கொண்டு போய் சேர்த்தவர் நிறைய பணத்துக்கு ஒத்துக்கிட்ட ப்ராஜெக்ட்டை சும்மா அப்படியே ரோட்ல விட்டுட்டு சார்மி கூட குத்து டான்ஸ் ஆட அதுல இன்னொரு ராக் கும்பல் உள்ள பூந்து சமந்தாவை கடத்த அவங்க முழிச்சு விக்ரம்கிட்ட ஓடி வர கடத்துனவனே காப்பாத்துறானேன்னு எல்லாரும் குழம்பறாங்க! ஒரு வழியா அவருக்கு விஷயம் தெரிஞ்சும் அவரு சமந்தாவை கூட்டிட்டு போய் பூரான் சிங்கை காலால நசுக்கி தூக்கி போடறார்! அப்போ அந்த பூரான், அயையோ நான் வெறும் பூரான் கடத்த சொன்னது ஒரு தேளுன்னு சொல்றார்! இவரும் தேளை தேடி போறார்! என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சு அங்கேயே முடிக்கணுமாம்! ஆனா பாருங்க இந்த தேளுக்கும் செம பில்டப்! ஸ்கார்ப்பியன் கிங் ரேஞ்ல! துப்பாக்கியால அப்படி சுடுவாராம்! ஆனா பாவம் தேளு மட்டுமில்லை தேளோட குட்டிங்க கூட விக்ரம் கிட்ட துப்பாக்கி யூஸ் பண்ணாம ஒண்ணு ரெண்டு கத்துக்கிறாங்க!!! எவ்ளோ தலை போற பிரச்சனைன்னாலும் சுட வந்த விக்டிம் ரெண்டு செக்கன் வெயிட் பண்ண சொன்னதும் சரிடா குட்டிம்மான்னு வெயிட் பண்றாங்க! டேய்!!! இப்போ நீ சுடலன்னா நான் வந்து சுட்டுருவேண்டான்னு நான் கடுப்பாயிட்டேன்!

ஒகே அந்த ஸ்கார்ப்பியன் கிங் யாரு? சமந்தா யாரு? எதுக்கு கடத்தினாங்க? அவங்களை என்ன பண்ணப்போறாங்க? விக்ரம் என்ன பண்ணப்போறார் இது தான் கதை! அதை நான் ரிவில் பண்ணல.

ஆனா இதை சொல்லலைன்னா என் தலையே வெடிச்சிரும்! படத்துல இன்னொரு சமந்தா இருக்காங்க! வில்லி! ஹையோ ஹையோ! வாயை லைட்டா சுழிச்சுக்க, வில்லியாயிடலாம்னு பாவம் புள்ளைக்கு யாரோ ஒரு எட்டப்பன் சொல்லிக்கொடுக்க பச்சப்புள்ள பாவம் வாயையும் சுழிச்சிட்டு லைட்டா கண்ணையும் தலையையும் ஒரு மார்க்கமா திருப்பி நடிச்சிருக்கு! இம்ப்ரோவைஸ்??? மிடில மக்கா!!!! இதுவரைக்கும் சமந்தா ஒரு நல்ல ஆக்ட்ரஸ்னு நான் நினைச்சேன். அஞ்சான் படத்துக்கு பிறகு யாரோ சூனியம் வச்ச ரேஞ்ச்லயே வருது! அழகான ஆக்ட்ரஸ்! கேப்பபிளிட்டி இருக்கு ஆனா வை மா இப்டி????????? பாவம் இது சமந்தா குற்றம் இல்லை! டுவல் ரோல், ஒண்ணு வில்லி வேறன்னு சொன்னதும் ஸ்கோப் இருக்கற படம்னு நினைச்சிருப்பாங்க!

ஹ்ம்ம்… ரெண்டாவது சமந்தா என்ட்ரி ஆனதுமே என் பக்கத்துல “என்னாங்கடா நடக்குதிங்கேன்னு சவுண்டு!!!!

சத்தியமா சொல்றேன் ஸ்டோரி லைன் நல்லா திரில்லிங்கா தான் இருக்கு! விக்ரம் வன் ஆர்மி ரோலுக்கு செமயா செட் ஆகறார்.
ஆனா எனக்கு ரெண்டு சமந்தாவோட காரக்டரைசேஷனும் ஊத்திக்கிச்சுன்னு தோணிச்சு. அதைவிட அரதபழசான முட்டாள் வில்லன் காரக்டர், இன்னும் சில பல லாஜிக் ஓட்டைகளால படம் பிடிக்கல! விக்ரம் சார்…இவ்ளோ காலம் நடிக்கறீங்க. இன்னும் எப்படி சார் இப்படியான கதைகள்ள மாட்டிக்கிறீங்க? உங்களை நம்பி எப்படி நாங்க படம் பார்க்க வர்றது?

விஜய் மில்டன் சார்.. என்னாச்சி????

மியூசிக் டிரெக்டர் இமான். எனக்கு bgm பிடிச்சு இருந்தது. டெக்னிகல் விஷயங்கள்ல கருத்து சொல்ல எனக்கு அவ்ளோ அறிவில்லை மக்கா. படத்துல ரெண்டு பாட்டு ரொம்ப பிடிச்சது.
vroom vroom சந்தோஷ் பாடினது, ஆனாலும் இந்த மயக்கம் சத்யப்பிரகாஷ் பாடினது. ரெண்டுமே சூப்பர்.

படத்துல நான் என்ஜாய் பண்ணது. ரெண்டு பேரும் நோர்த் இந்தியாக்கு ட்ராவல் பண்ணின சீன்ஸ். நல்லா இருந்துது. விஷுவலும் ரொம்ப அழகு.சமந்தா கூட! கியூட் சீன்ஸ் கொஞ்சம் இருந்துது. ஒரு மொனாஸ்ற்றி வரும்..போய் பாக்கணும்னு தோணிடுச்சு!

நீங்க பார்க்கப்போறீங்களா மக்களே? எனக்கு இது இன்னொரு ரா பாட்டை தான்! தெலுங்கு படம், மசாலா படங்கள் பார்த்த அனுபவம் நிறைய உண்டு என்றால் போகலாம். எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல!

P.S: தயவு பண்ணி இனிமே இலங்கை தமிழர்களை விட்டுடுங்க சாமிங்களா!!! தாங்க முடியல!!! இதை நாங்க ரசிப்போம்னு நினைக்கறீங்களா? ஐயோ பாரீன் வாழ் சிலோன் சிட்டிசன்ஸ் தயவு பண்ணி எந்த படத்துல எங்களை பத்தி யாராவது ஒரு வசனம் வச்சா கூட பொங்கி நீங்க பொங்கல் வைக்கறதால தான் உங்க பணத்தை டார்கெட் பண்ணி இவங்க இப்படியே பண்ணிட்டிருக்காங்க! ஒரு சினிமா வசனம் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது! நாங்கள் அப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படுபவர்கள் கிடையாது! இப்படி அவர்களை பழக்கப்படுத்தி விட்டு கேவலமாய் காட்டி விட்டான் என்று கூப்பாடு போடுவது முட்டாள் தனம்!

இந்த படத்தில் கேவலமாய் காட்டிவிட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அந்த காரக்டர் படத்துல தேவையே இல்லை! காரக்டர் தேவையோட இருந்தா நாங்க மதிக்கறோம்,தேவையில்லாம தயவு பண்ணி எங்களை உள்ளே இழுக்காதீங்க! என் மனசுல இருந்ததை சொல்ல இந்த இடத்தை யூஸ் பண்ணிக்கிட்டேன் அவ்வளவுதான்!

நன்றி நன்றி நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: