மாஸ்


Director : Venkat Prabu
Leading cast: Surya, Nayanthara, Premjee, Praneetha, R.Parthiban, Samudrakani
Music Director : Yuvan Shankar Raja

ஹாய் ஹாய்!

முதலில் கதை சுருக்கத்தை சொல்லிடறேன்!

மாசும்(சூர்யா) ஜெட்டும்(பிரேம்ஜி) உயிர் நண்பர்கள்! அத்தோடு டிசைன் டிசைனாக திட்டம் போட்டு திருடும் கில்லாடி திருடர்கள்!. நயன் நர்சாக வருது, அதை கண்டதும் சூர்யாக்கு காதல் வருது!!!! வெள்ளையுடையில் சர்ச் வாசலில் நயனை பார்த்ததும் நமக்கும் தாங்க! ஹி ஹி

ஆனாப்பாருங்க! திருடப்போன இடத்துல ரெட்டியா அவன் என்ன ரொட்டியான்னு கேட்டுட்டே ஒரு ரவுடி கூட பிரச்சனைல மாசும் ஜெட்டும் மாட்டிக்கிறாங்க! அதே நேரம் நம்ம நயன் ஹெட் நர்ஸ் ஆகணும்னா மூணு லட்சம் தரணும்னு தலைமையதிகாரி பரமானந்தம் சொல்லிடறார்! “நீயும் நானும் ஒன்னு தின்னும் பாரு பன்னு” என்று தானே மூன்று லட்சம் கொடுப்பதாக சூர்யா சொல்றார், அப்படியே ப்ரோபோசம் பண்றார். ஆனால் விதி வலியது! வழில ரெண்டு பேரும் ரெட்டி ஆட்கள் கிட்ட மாட்டிக்க சேசிங் துரத்தல்கள் என்று அவ்வளவு நேரமும் தூங்கிய திரைக்கதை சோம்பல் முறிக்கிறது!! அப்போ பாருங்க படார்னு நேரெதிரா இன்னொரு வாகனத்தோடு மோதி மாசும் ஜெட்டும் போன கார் கரப்பான் பூச்சியாய் கவிழ்ந்துடுது!

அதனுடன் தான் உண்மையில் படம் ஆரம்பிக்கிறது. அதுவரை நீங்கள் தூங்காமல் இருப்பதற்காக கத்தி தீம் மியூசிக் , மாலினி ஐ ஆம் கிருஷ்ணன் இப்படி பழைய படங்களின் சீன்கள், வசனங்களை லொள்ளு சபா இபெக்டில் போட்டு நிரப்புகிறார் வெங்கட் பிரபு. ஆனாலும் மக்கள் ரசிக்கிறார்கள்.

அப்புறம் தான் மெயின் ஸ்டோரி வருது.

ஆக்சிடேண்டோட நம் மாசுக்கு பேய்களை பார்க்கற சக்தி வந்துடுது. ஸ்ரீமன், கருணாஸ் என்று ஆறேழு பேய்கள் அவரை துரத்தி வருகின்றன, தங்கள் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றி வைக்கும் படி ரிக்வெஸ்ட் பண்ணிட்டு! மாசும் முதலில் பயந்து ஓடிவிட்டு பிறகு அவற்றை வைத்து சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் மற்ற சூர்யா (ஷக்தி)என்ட்ரி கொடுக்கிறார். அவரை முதல் முறை பார்க்கும் போது கண்ணாடி முன் நின்று மாஸ் செய்யும் அலம்பல் செம்ம! என்னம்மா நீங்க இப்டி பண்றீங்களேம்மா! ஹா ஹா

சும்மா சொல்லக்கூடாது. ஷக்தியாக வரும் சூர்யாவை பார்த்ததுமே நான் பிளாட்டு! twilight பார்த்திருப்பீங்களே! அதுல நம்ம எட்வர்ட் காலனையும் வோல்டூரி ஆரோவையும் சேர்த்து செய்தது போல பர்ஸ்ட்கிளாஸ் மேக்கப், மானரிசம் என்று தூள் கிளப்புகிறார். அநியாயத்துக்கு அழகாக இருக்கிறார்! இவர் யார்? இவரை மாசை வைத்து செய்யும் பகீர் வேலைகள் என்ன? பிரேம்ஜிக்கு என்ன ஆனது? இதைல்லாம் பரபரவென்ற திரைக்கதையில் சொல்லியிருக்கார் வெங்கட்! இரண்டாம் பாதி ரொம்ப நல்லா இருக்கு.

யுவன் சார்.. என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா? முடியல.. கத்தி தீமை எவ்வளவு இடத்துல தான் போடுவீங்க? ஆவிகளோட ஆத்மா சாந்தியடையும் இடத்துல பிட்டு பிட்டா வந்த வைக்கோம் விஜயலக்ஷ்மி பாட்டு மட்டும் டச்சிங். ஆனா அதுவும் மறந்து போச்சு!

இரண்டு கதாப்பாத்திரத்துக்கும் உடல் மொழியில் மாறுபாடு காட்டி நன்றாக செய்துள்ளார் சூர்யா. நயன் பாவம்! கடைசில வந்து மாசுக்கு மருந்து மட்டும் கட்டுது. என்ன செய்வது ஒரு ஹீரோ இருந்தாலே ஹீரோயினுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது. இதில் இரண்டு அதிலும் ஒன்று பேய் வேறு! ஹீரோயினுக்கு எப்படி சான்ஸ் இருக்கும்? பாவம்! L ப்ரனிதா சக்திக்கு ஜோடி, பாரின் பொண்ணு. பிரெஷ்ஷா இருக்காங்க! ஷக்தி சூர்யா, பிரணிதா, மகள் மேகா வரும் காட்சிகள் கொள்ளை அழகு!

நம்ம கோஸ்ட் கோபால் வர்மா ராஜேந்திரன் கூட அங்கங்கே கிச்சு கிச்சு மூட்டுறார். பரமானந்தம் கொடுத்த ஸ்பேஸ்ல அழகா ஸ்கோர் பண்றார். ஜெய் கூட வந்து போனார், வழக்கம் போல கியூட்டா! மத்தவர் பார்த்திபன் ! தல கலக்கிட்டார். அவருக்கே உரிய நக்கல் நையாண்டி என செகண்ட் ஹால்ப்பை தூக்கி பிடிக்கிரவங்கள்ள இவரும் ஒருத்தர். பிரேம்ஜி.படம் முழுக்க மாஸ் கூட வர்றார். இந்த படத்தில் தான் எனக்கு இவரை பார்த்து எரிச்சல் வரவில்லை. கொஞ்சம் பாவமாகவும் இருந்துது.

சமுத்ரக்கனி சார். நல்லாத்தானே போயிட்டிருந்துது? வில்லன் ரோல். சாலேஞ்சிங் ரோல்னா உடனே போயிடறதா? ஒரு பயங்கரமான வழக்கமான வில்லன். லுக் மட்டும் கிளாசா இருக்குது!

நயனோட டிரஸ் அந்த பார்ஸ்ட்ல வர்ற வெள்ளை சுடி தவிர நல்லா இல்ல, மேக்கப் கூட! மேக்கப் வுமனை நல்லா மொத்துங்க மேடம்!

மொத்தத்தில் மிகப்பெரிய திறமையான நடிகர் பட்டாளம், சூப்பரான கான்செப்ட் என்ற இரண்டு மிகப்பெரும் பலம் இருக்கும் போதும் வெங்கட் படத்தை கமர்ஷியல் பேய் மசாலாவில் முக்கியெடுத்து தந்து விட்டார். இருந்தும் நன்றாகவே இருந்தது!

டைரக்டரிடம் சில கேள்விகள்!

சார். இவ்ளோ லூக்கா, ஹோலிவூட்கு சவால் விடுறது போலவே இருக்கற நடிகரை வைச்சு ராகவா லோரன்ஸ் லெவெல்ல பேய் கான்செப்ட் மட்டும் தான் ஞாபகம் வருதா? அதுவும் அதே வழக்கமான பழி வாங்கும் கதை! ஏன் வித்யாசமான கான்செப்ட் கொடுத்தா நாங்க பார்க்க மாட்டோமா? ரசிகர்களை தயவு பண்ணி அண்டரெஸ்டிமேட் பண்ணாதீங்க சார்

ஷக்தி சூர்யாக்கு எதுக்கு சிலோன் பெயின்ட்? இந்த கதைக்கு சாதாரண வெளிநாட்டுத்தமிழனே போதுமே? யூ டூ வெங்கட்? பரவாயில்லை. அந்த காரக்டரை அப்படி சூப்பரா டிசைன் பண்ணதுக்காக மன்னிச்சு விட்டுர்றேன்! எங்க ஸ்லாங்கை கிட்டத்தட்ட பேசியதற்காக சூர்யாவுக்கும் ஒரு பொக்கே!

மத்த பேய்கள் ஸ்ரீமன் கருணாஸ் எல்லாம் ஆத்மாஷாந்தி அடைஞ்சதுக்கப்புறமும் திரும்ப வந்து மாசுக்கு ஹெல்ப் பண்றாங்களே. ஷக்தி வைப் பிரணிதா மட்டும் எதுக்கு வரலை? அவங்க கைக்குழந்தையை இல்ல விட்டுட்டு போயிருக்காங்க? அவங்க தானே முதல் ஆளா வந்துருக்கணும்? ஷக்தி மட்டும் தான் வருவாரா? இல்லை சொர்க்கத்துலயும் ஜெண்டர் பாலன்ஸ் இல்லையா? ஹி ஹி டவுட்டு!

சத்தியமா மாசை பார்த்தா பாவமா இருந்திச்சு. ஷக்தி இவ்ளோ யங்கா ஹான்ட்சமா இருக்கார் செத்துப்போனதால. நம்ம மாஸ் தாத்தாவாகி செத்துப்போனா அவர் தாத்தா போல தானே ஆவியா இருப்பாரு. அப்போ சீக்கிரமே செத்துட்டா யங்காவே இருந்திடலாம்னு ! ஹி ஹி

கடைசி சீன்ல சக்தி ஆத்மா ஷாந்தி ஆகி வைப்பையும் பொண்ணு கூடவும் கைகோர்த்து நடக்கறார். அநியாயத்துக்கு எட்வர்ட் பெல்லா, ரேனேஸ்மி ஞாபகம் வருது. கொள்ளை அழகு!

படம் நல்லாருக்கா இல்லையா? இவ என்ன சொல்ல வர்றான்னே புரியலையேன்னு நினைக்கிறீங்களா? ஆக்சிடெண்ட் சீன் வரும் வரையான அரைமணி /முக்கால் மணி நேரம் முடியல, அப்புறம் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் ஆனால் எல்லாத்தையும் தாண்டி ஒருதடவை ஜாலியா ரசிக்கலாம். தைரியமா பாருங்க!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: