ஆழி -அர்ஜூனா full link

“தீராமல் போன ஆசைகள் எல்லாம் தீர்க்கத் தெரிந்த ஒருவன் போகாத எல்லை போய் வந்தாலும் புன்னகை செய்யும் ஒருவன்.. ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம்  கண்டு கொள்ளாத ஒருவன்  நான் போதும் போதும் என்னும் வரையில்  புதுமை செய்யும் ஒருவன்.. நான் தேடும் ஸ்ருங்காரன் இங்கு ஏனோ ஏனில்லை .. ஒரு நதி ஒரு பௌர்ணமி 😀 ஆழி-அர்ஜூனா Full link

ஆழி- அர்ஜூனா 21

“பை பை அஜூ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்…” யாழினியின் பறக்கும் முத்தத்துடன் அந்த ஸ்கைப் கால் கட் ஆக லாப்டாப்பை மூடி வைத்து விட்டு சாப்பிட அமர்ந்தார் அர்ஜூனா. பெண்குழந்தைகள் வீட்டில் இருந்தால் அந்த களையே தனி தான். யாழினி போனபிறகு வீடு வெறுமையாக இருக்கிறது என்ற எண்ணத்தை என்ன செய்தும் தடுக்கமுடியவில்லை அவருக்கு. சாப்பிட்டபடியே கற்றையாக அள்ளிக்கொண்டுவந்த கடிதங்களை ஒவ்வொன்றாக பிரித்துப்பார்க்க ஆரம்பித்தார் அர்ஜூனா. விவிதா வெளியாகி கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகப்போகிறது. ஆனால் இன்னும் வாசகர்Continue reading “ஆழி- அர்ஜூனா 21”

ஆழி- அர்ஜூனா 20

மலர்ந்தும் மலரத மொட்டுக்களை அதிகம் சுமந்திருந்த ரோஜாமரங்களை பார்த்தபடியே சுற்றியோடிககொண்டிருந்தாள் ஆர்ணவி. எத்தனை வண்ணங்கள், நடு நடுவில் பூக்களை நாடி வரும் வண்டுகள், அந்த வளைவைக்கடக்கும் சில நிமிடங்களுக்குள் எத்தனையை கவனித்துவிட்டாள் அவள். ஆக வாழும் வாழ்க்கையில் திருப்தி ஏற்படும் போது, செய்யும் வேலையை லயித்து செய்யும்போது நம் கண்களுக்கும் உலகம் அழகாக தெரியுமா? நாமும் போகிற போக்கில் ரசிக்க ஆரம்பித்து விடுவோமா? அவள் புன்னகையை உதட்டில் பூட்டிக்கொண்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தாள் அர்ஜூனா இப்போது இருந்திருந்தால்Continue reading “ஆழி- அர்ஜூனா 20”

ஆழி- அர்ஜூனா 19

ஒரு மேசையின் மீது மாவுத்துகள்கள் சிந்திக்கிடக்கின்றன. அதன் நடுவில் யாரோ ஊதியதைப்போல நடுவில் அவை கலைந்து கிடக்க பிய்ந்த ரோஜா இதழ்களை ஓரமாய் கொண்டு அவற்றின் சாயத்தை கொண்டு யாரோ எழுதியது போல ‘விவிதம்’ என்ற தலைப்பு எழுதப்பட்டிருந்தது. மீண்டும் அந்த அட்டைப்படத்தை பார்த்தார் அர்ஜூனா. எழுத்தாளனுக்கு நாவலின் அட்டைப்படம் மிகவும் முக்கியம் தானே.. நாவலின் உள்ளடக்கத்தை சொல்லும் குறியீடாக ஒவ்வொரு நாவலுக்கும் அட்டைப்படம் அமைந்து விடுவதில் அவர் எப்போதுமே அதிர்ஷ்டசாலி தான். பிரபு! இந்த படத்தையேContinue reading “ஆழி- அர்ஜூனா 19”