ஆழி- அர்ஜூனா 12

alia-630_625x300_41413273267

இரண்டு நாட்களுக்குள் நடந்த அதிரடிகளில் மாவட்டமே கலங்கித்தான் போயிருந்தது. போதைமருந்துப்பாவனையாளர்களாய் பிடிபட்டவர்களில் மாணவர்கள் மூவர் அடக்கம் என்ற தகவல் போலீஸ் திணைக்களத்தால் ரகசியமாகவே பேணப்பட்டது. ஆனால் அவர்களை கோர்ட்டுக்கு கொண்டு போவதாக சொன்ன மறுநாளே பெரிய தலைகள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட நாற்பது பேர் உள்ளங்கிய வலையமைப்பே கைது செய்யப்பட்டிருந்ததை தொலைக்காட்சிகள் ஓயாமல் காண்பித்துக்கொண்டிருந்தன.

திலீபன் ப்ளாஷ் நியூஸ்களில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தான்!

மாணவர்கள் மூவரையும் நேரடியாகவே மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி அவரவர் நிலைக்கேற்ப மருத்துவ நடவடிக்கைகளை எடுக்குமாறு கமிஷனர் ஆணை பிரப்பித்திருந்ததில் நீண்ட கால பாவனையாளர்களான பெரியவர்கள் இருவரும் நேரடியாக போதைமருந்து மீட்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட சுபாங்கன் பலவித அறிவுரைகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். அர்ஜூனா எதிர்பார்த்தது போலவே மூன்று மாணவர்களின் விடயத்தையும் தாங்களே கையாண்டு விட்டார்கள் போலீசார்.

உலகத்தில் நேர்முக அலைகள் நிறைய நிறைந்திருக்கும். நம் கண்ணில் தான் அவை படுவதேயில்லை. அல்லது சதா எதிர்மறையாகவே சிந்தித்து நெகட்டிவ் அலைகளை நம்மை நோக்கி இழுத்து வைத்துக்கொள்கிறோம். கண்ணைத்திறந்து நன்றாக பார்த்தால் நமக்கு உதவக்காத்திருக்கும் ஒற்றை உள்ளத்தையாவது அடையாளம் கண்டு கரை சேர்ந்து விடலாம்! ஆனால் துரதிஷ்ட வசமாக நாம் அதைக்கவனிக்காமலே கடந்து போவது தான் வாடிக்கை!

போலீசாரின் சிறுவர் காப்பு நிலையத்தின் முன் கிளபரப்பியிருந்த மாமரத்தின் ஒற்றக்கிளை  மட்டும் நிலத்தோடு  பருத்து வளைந்திருந்தது. அதில் சுவாதீனமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருதார் அர்ஜூனா. அந்த கட்டடத்தின் போர்ட்டிகோவில் ஆர்ணவி மற்றும் சுபாங்கனின் தாய் இருவரும் அமர்ந்திருந்தனர்.

“சரி தம்பி. இனிமேல் உன் வாழ்க்கை உனக்கு உதவி செய்தவர்கள் அத்தனை பேரையும் பெருமைப்படுத்தும் விதத்தில் இருக்கவேண்டும். தைரியமாக போய்விட்டு வா.”

யாரோ ஒரு முதிர்ந்த போலீஸ்காரர் சுபாங்கனின் தோளில் கைபோட்டு வாசல் வரை கொண்டு வந்து விட்டு விட்டு வெளியே காத்திருந்தவர்களிடம் புன்னகைத்து விட்டு மறுமடியும் உள்ளே மறைந்தார்.

தொய்ந்த நடையோடு வெளியே வந்த தன்னுடைய சின்ன மாணவனின் மீது அர்ஜூனாவின் விழிகள் முழுவதும் படிந்து மீண்டன.

இரண்டு முழு நாட்களை சிறைக்கம்பிகளுக்குள் கழித்ததில் சுபாங்கனின் கண்களில் பளிச்சிடல் சுத்தமாய் மழுங்கிப்போய் வெளிறிப்போன  முகத்துடன் இருந்தான்.

ஒரு காலத்தில் படிப்புத்தான் வாழ்க்கையா என்ன? அவனிடம் கொட்டிக்கொடக்கும் பாசிட்டிவ் எனர்ஜிக்கு அவன் எங்கேயோ போய்விடுவான் என்று அவரையே எண்ண வைத்த மாணவன்!!!! ஹ்ம்ம்..நல்ல வேளை தலைக்கு வந்தது முடியோடு போயிற்று என்று என்ன வேண்டியது தான்!.

அவர் எழுந்து அருகில் போக முயலாமல் நடப்பதை அங்கிருந்தே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

வந்தவன் முதலில் ஆர்ணவியிடம் தான் போய் நின்றான்.

திலீபன் தூரத்தில் இன்னொரு போலீசோடு பேசிகொண்டிருந்தாலும் அவன் கண்களும் அவர்கள் இருவரையுமே  வட்டமிடுவதை கண்டு உள்ளூர சிரித்துக்கொண்ட அர்ஜூனா தானும் அவர்களையே கவனிக்க ஆரபித்தார்

இனிமேல் எந்த வித கெட்டபழக்கத்துக்கும் போக மாட்டாய் என்று இத்தனை பேர் உன்னை நம்பி உதவி செய்திருக்கிறார்கள். கடைசி வரை அந்த நம்பிக்கையை நீ காப்பாற்ற வேண்டுமடா! என்று ஆர்ணவி சொல்ல

இனிமேல் நான் நல்ல பிள்ளையா இருப்பேன் மிஸ்.. படிப்பேன் எந்த தப்புமே பண்ண மாட்டேன் என்று மீண்டும் கண்கலங்கியபடி தானாகவே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தான் சுபாங்கன்.

“இனிமேல் தான் உண்மையான சோதனைகளை எதிர்கொள்ளப்போகிறான் என்று தெரியவில்லை பாவம்!” என்று தான் தோன்றியது அவருக்கு.

“அர்ஜூன்..” திலீபன் அதற்குள் அவரை நெருங்கியிருந்தான்.

“வாடா செலிப்ரிட்டி!” அவர் வாஞ்சையாய் சிரித்தார்

சும்மா இருண்ணா..கொலவெறியாயிடுவேன். திடீரென்று எல்லாவற்றையும் நடாத்தி முடித்ததில் ஊரே பரபரப்பேறிப்போய் கிடக்கிறது. போகும் இடமெல்லாம் ஒரு மைக்கை கொண்டு வந்து யாரேனும் நீட்டி விடுகிறார்கள். என்று  அலுத்துக்கொண்டவன் “சரி அதை விடு அர்ஜூன். நான் உனக்கு பெரிய தாங்க்ஸ் சொல்ல வேண்டும். நன்றி எல்லாவற்றுக்கும்!” என்று புன்னகைத்தான்

“விடு.. அது மியூச்சுவல் ஹெல்ப் தானே” என்றார் அர்ஜூனா

“அது சரி. இருந்தாலும் என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!” என்றவன் “ அங்கே பாரேன். இவர்களுக்கு கிளம்பும் எண்ணமே இல்லை போலும். ஆர்ணவியையும் உன்னை டிராப் செய்யும் போது டிராப் பண்ணி விடுவதாக சொல்லியிருந்தேன். போய் கூட்டிக்கொண்டு வருகிறேன்.” என்றபடி அவன் பெண்கள் நின்ற பக்கம் நோக்கி திரும்ப அர்ஜூனா வாய் விட்டு சிரித்தார்.

ஆஹா.. நான் என்னமோ என்னை அக்கறையாக அழைத்து செல்கிறாய் என்று நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது. அவளை அழைத்துச்செல்ல நான் ஒரு சாக்கு என்று! விட்டால் என்னை கியூப்பிட் ரோலுக்கு கூப்பிட்டு விடுவாய் போலிருக்கிறதே!

“ஐயோ அர்ஜூன். நான் தான் சொன்னேனே..என் மனதில் அப்படி எதுவுமே இல்லை! நீ அந்தப்பெண் முன்னால் ஏதும் சொல்லிவிடாதே..அவள் என்ன நினைத்துக்கொள்வாள் என்னைப்பற்றி? நீ திரும்ப திரும்ப அந்த பெண்ணோடு சேர்த்து என்னை டீஸ் செய்வது கொஞ்சமும் நன்றாக இல்லை” கோபமாக சொல்லிவிட்டு அவன் நடக்க

“உன்னை நான் அறிவேன் திலீபா..” என்று சிரித்தபடி அவர் அவனை தொடர்ந்தார். என்றுமே அவனை சீண்டுவதில் அவருக்கொரு தனி ஆனந்தம் தான்! இருவருமாய் பெண்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நெருங்கினார்கள்.

அன்றைக்கு முதல்முதலாய்  அர்ஜூனாவையும் ஆர்ணவியையும் ஒன்றாக கண்ட சுபாங்கனின் தாய் மீண்டும் கண்ணில் நீர் மல்க அவரை நெருங்கினார். அர்ஜூனாவின் மனதிலோ அந்த பெண்ணை பார்த்த மாத்திரத்தில் வெறுப்பு மண்டியது..

“சாரும் நீங்களும் செஞ்ச உதவிக்கு என்ன பதில் செய்யறதுன்னே தெரியலை” என்று கண்ணீரோடு கைஎடுத்துக்கும்பிட்ட சுபாவின் தாயாரை கோபமாய் முறைத்தார் அவர்.

“உன்னால் அவன் வாழ்க்கையே அழிய இருந்ததே. இப்போது வந்து அழுதால் முடிந்து விடுமா? வத வதவேன்று பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதுமா? பொறுப்பு வேண்டாமா? உன் புருஷன் விஷயம் தெரிந்தும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இருந்து விட்டு இப்போது வந்து யாரிடம் நீலிக்கண்ணீர் வடிக்கிறாய்? ச்சை..உன் புருஷனுக்கு துணை போனதுக்காய் உன்னையும் பிடித்து ஜெயிலில் போட்டிருக்க வேண்டும்! தப்பித்தாய்!”

அந்தப்பெண் அழ ஆரம்பித்து விட விடு விடுவென்று வேகமாய் அவ்விடம் விட்டகன்றார் அர்ஜூனா

அவள் கணவன் என்ன செய்கிறான் என்பதும் அவனுக்கு போதைப்பழக்கம் இருக்கிறதென்றும் தெரிந்து கொண்டும் அது குறித்த  குறைந்த பட்ச விழிப்புணர்வை கூட குழந்தைகளுக்கு கொடுக்காமல் அதுவும் ஒரு பெண் குழந்தையையும் வைத்துக்கொண்டு அவனோடு வாயை மூடிக்கொண்டு வாழ்ந்திருக்கிறாள் தானே.. குழந்தைகளின் எதிர்காலத்தை விட, அவர்களின் பாதுகாப்பை விட கணவன் கூட இருக்கிறான் என்ற அந்த அந்தஸ்து இவர்களுக்கு அவ்வளவு முக்கியமானதா? தனியாக உலகத்தை எதிர்கொள்ள பயம் என்பதெல்லாம் வெறும் சாக்கு! சுபாவுக்கு ஒரு ஆபத்தென்றதும் தன்னந்தனியாக போலீஸ் ஸ்டேஷன் வாசலியே தூங்கி எழுந்து கிடந்தாளே தனியாக வாழ்க்கையை சந்திக்க இவளுக்கா தைரியம் இல்லை? வலிக்க அடி விழுந்தால் தான் எல்லோருக்கும் கண்ணே திறக்கிறது! திருத்த முடியாத ஜென்மங்கள்!!  இன்னும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு!

மற்றவர்களை அனுப்பிவிட்டு திலீபன் சைகை செய்து விட்டு முன்னே நடக்க அவனது வண்டியை நோக்கி நடந்தார் அவர்.. அர்ஜூனா திலீபனின் அருகில் ஏறியதுமே பின் சீட்டில் இருந்து ஆர்ணவி அவரை அழைத்தாள்!

“என்ன சார். அந்தம்மாவே ரொம்ப நொந்து போய் இருக்காங்க.. அவங்களைப்போய் அந்தக்கிழி கிழிக்கிறீங்க? பாவம் சார். எனக்கே ஒரு மாதிரியாயிடுச்சு.”

“செய்வதையெல்லாம் செய்து விட்டு நொந்து போனேன் வெந்து போனேன் என்றால் எல்லாம் சரியாகி விடுமா..?” அர்ஜூனா இன்னும் சூடு குறையவில்லை.

அவர் சொன்னதில் நியாயம் இருக்கிறது என்று நினைத்தாளோ என்னவோ ஆனாலும் என்று முனகியவள் அதன் பின் தானும் ஒன்றும் பேசாமல் மௌனமாகி விட்டாள்

பிறகு திலீபனிடம் அவளது கவனம் திலீபனிடம் திரும்பியது.

“திலீப் சார்.. நீங்கள் ரெண்டு பேரும் முன்னாடியே க்ளோசா?”

“ஹா ஹா நல்லா கேட்டீங்க போங்க! சார் என்னுடைய அண்ணன்!” அவன் அர்ஜூனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்.

என்னது??? அவள் இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அப்பட்டமாய் அதிர்வை முகத்தில் காண்பித்தபடி இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள்

“அதுற்கேன் உனக்கு இவ்வளவு அதிர்ச்சி?  நான் அவனுக்கு அண்ணனாக இருப்பதில் என்ன தவறை கண்டு விட்டாய்?” அமர்த்தலாய் கேட்டார் அவர்

“சான்சே இல்லை!! கலரும் உயரமும் இரண்டு பேருக்கும் ஒன்று தான் மற்றப்படி முகத்தோற்றத்தில் இருவருக்கும் சம்பந்தமே இல்லை..குணமும் அப்துல் காதரும் அமாவாசையும் போல..நீங்கள் ரெண்டு பேரும் அண்ணா தம்பியா இதை நான் நம்ப வேறு வேண்டுமா? வேறு ஆளை பாருங்கள் சார்!!!” அவள் நம்ப மறுத்தாள்!

“ஹா ஹா ஆர்ணவி.. அண்ணன் என்றால் சொந்த அண்ணன் இல்லை. மாமா பையன். என்னுடைய அண்ணா, மென்டர், பல சமயங்களில் என் எதிரி எல்லாமே அர்ஜூன் தான். “

“இவன் கஷ்டப்பட்டு பிராக்கட் போடும் பெண்கள் அவர்களாகவே என்னை சைட்டடிப்பதில் அவனுக்கு மகாக்கடுப்பு!!!’ நமுட்டுச் சிரிப்போடு தன் பங்களிப்பை ஆற்றினார் அர்ஜூனா

அர்ஜூன்!!!!!!!!! திலீபன் ஏறக்குறைய கத்தி விட

பயல் டென்ஷனாகிறான். அவருக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

கொஞ்சநேரம் மௌனமாக இருந்த சிரியவர்களில் திலீபன் மீண்டும் மௌனத்தை கலைத்தான்.

“நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது ஆர்ணவி. நாங்கள் மொத்த வலையமைப்பையும் ரகசியமாய் அடையாளம் கண்டு பிடித்து விட்டாலும் இந்த பிரதேசத்துக்கு தனியான விநியோகஸ்தர் யார் என்று எங்களால் பிடிக்க முடியவே இல்லை. அதனால் தான் அர்ஜூன் நீங்கள் சொன்னதாக பாலத்தடி விவகாரம் பற்றி சொன்னதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை அலர்ட் செய்ய வேண்டாம் என்று பொறுத்திருந்தோம். ஆனால் நீங்கள் அடையாளம் கண்ட  சுபாங்கன் வழியாக அவன் சிக்கிக்கொண்டது இரட்டை மகிழ்ச்சி. அது தான் உடனேயே காலதாமதம் இல்லாமல் மொத்தப்பேரையும் அரஸ்ட் செய்தோம்”

“ஓஹோ..முதலிலேயே எல்லாவற்றையும் ஸ்மெல் பண்ணிட்டீங்களா?”

கிட்டத்தட்ட ஒரு வருஷ ஆபரேஷன் இது ஆர்ணவி..

“சூப்பர் சார்.. ஆனால் ஒன்று கேட்டால் கோபித்துக்கொள்ளக்கூடாது. எல்லா விஷயத்தையும் இவரிடம் ஷேர் பண்ணுவீங்களா? இவருக்கு எப்படி எல்லாமே முதலிலேயே தெரிகிறது?”

எப்போ பார் இவளுக்கு அவரின் விஷயங்கள் எதையாவது தெரிந்துகொண்டே ஆகவேண்டுமா?

‘அது உனக்கு ரொம்ப அவசியமோ?” என்று சூடாக இடையிட்டார் அர்ஜுனா

“நான் உங்களிடம் பேச வில்லை சார்!!!!!!” அவள் உடனடியாக முறைத்துக்கொன்டாள்

என்னை பற்றித்தானே பேசினாய்?

ஷ்.. அர்ஜூன்!!!  ஏன் இப்படி பெண்களோடு வம்புக்கு போகிறாய் அண்ணா? என்று சலித்துக்கொண்டான் அவருடைய இளவல்

நீ தானே எனக்கும் சேர்த்து அவர்களுக்கு பாதபூஜை செய்கிறாயே அப்புறமென்ன?

அர்ஜூன்!!!!!!!

“ச்சே என்ன பேச்சு பேசுகிறார் பாருங்கள் திலீபன் சார். என்று திலீபனிடம் கம்ப்ளையின்ட் செய்தவள் மீண்டும் அவரிடம் திரும்பினாள். “அன்றைக்கு நல்லவேளை நான் உங்களுக்கு சாரி சொல்லவில்லை!!! ஜென்மத்துக்கும் சொல்லவும் மாட்டேன்! உங்களுக்கு மனிதர்களோடு ஒழுங்காக பேசிப்பழகவே தெரியவில்லை!!!!”

“நீ சாரி சொன்னால் தான் சுற்றுவேன் என்று என் காலின் கீழ பூமி ஒன்றும் அடம்பிடித்து சுற்றாமல் நிற்கவில்லை!!! நீ சொல்வதும் சொல்லாமல் விடுவதும் எனக்கு ஒன்றே தான். எந்த மாற்றத்தையும் எனக்குள் அது ஏற்படுத்தாது” அவர் விட்டேற்றியாய் தோளைக்குலுக்கினார்.

இருவரையும் சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்த திலீபன் “அதென்ன சாரி? “ என்று விளக்கம் கேட்டான்

ஆர்ணவியை ஒரு பார்வை பார்த்த அர்ஜூனா அவள் அதை சொல்ல மனமின்றி முறைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு விட்டு “எங்களுக்குள் சில கணக்கு வழக்குகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. சாரி சொல்ல வேண்டிய கடமை மேடத்துக்கு இருக்கிறதாம்” என்று தானே தெளிவு படுத்தினார்.

நீங்கள் சாரியே சொல்லாதீர்கள் ஆர்ணவி. சார் பேசும் பேச்சுக்கு நிமிடத்து நூறு சாரி அவரே கேட்டாக வேண்டும்!!!

உண்மையில் இவன் விழுந்தே தான் விட்டான். வாய் விட்டு சிரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் அவர். பிறகு அவர் கவனம் அவர்களுடைய பேச்சில் இருந்து விலகி தன்னுடைய யோசனைகளில் சிக்கிக்கொண்டிருந்த கதைக்கருவுக்குள் புகுந்து விட்டது.

சற்று நேரம் கழித்து மீண்டும் அவர் கவனம் கலைந்த போது

திலீப் சார், உண்மையில் எனக்குக்கொஞ்சம் கில்ட்டியாகத்தான் இருக்கிறது. கம்ப்ளையின்ட் பண்ணும் போது சுபா பெயரை சேர்க்க வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டேன். ஆனால் பிரச்சனை பெரிதென்பதால் அவனும் உள்ளே வந்து விட்டான். ஆனாலும் என்னால் தானே இவ்வளவும் என்று இருக்கிறது!!! என்று ஆர்ணவி சொல்லிகொண்டிருக்க

“நீங்கள் கம்ப்ளையின்ட் செய்யாவிட்டால் மூன்று நாள் பழக்கம் முப்பது நாள் ஆகியிருக்கும் ஆர்ணவி. அப்படி யோசியுங்களேன்..” என்று திலீப் சமாதானம் செய்து கொண்டிருந்தான்

“பெண்கள் என்ன தான் நடுநிலையில் தொழிற்பட முயன்றாலும் இந்த உணர்ச்சி என்ற எலிமெண்டை அவர்களால் தடுத்து விட முடிவதில்லை.” அர்ஜூனாவால் வாயை மூடிக்கொண்டிருக்க இயலவில்லை

“வாய் இருக்கிறதென்று எதையாவது பேசாதீர்கள் சார். நான் நடுநிலையாகத்தான் நின்றேன்” என்று உடனே எரிந்து விழுந்தாள் ஆர்ணவி

“என்ன விஷயம் யார் மேல் தப்பு எதுவும் தெரிவதற்கு முன்னரே சுபாங்கனின் பெயரை நீ விடுவிக்க சொன்னது தான் உன் நடுநிலையா? அது பாரபட்சம் தானே?” அவர் அவளை மடக்க முயன்றார்

“அப்போ மற்ற இரண்டு நம்ம ஸ்கூல் பசங்களும் அங்கே ஸ்டேஷனில் இருக்கும் போது இதே திலீப் சாரிடம் “ டாம்மிட் அவனுக்கு பதினான்கு வயது தான் ஆகிறது” என்று சுபாவுக்காக மட்டும் நீங்களும் பொங்கிநீர்களே அதுவும் பாரபட்சம் தானே?” என்று அவருடைய உடல் மொழியை அவள் நடித்துக்காண்பிக்க திலீபனுக்கு சிரிப்பில் தோள்கள் குலுங்கின.

“அண்ணா… உங்கள் இருவர் சண்டையையும் முகபாவங்களையும் பார்க்க என்னால் தாங்க முடியவில்லை. நான் மட்டும் இங்கில்லாமல் இருந்திருந்தால், ஒருவர் மேல் ஓருவர் பாய்ந்து கழுத்தை நெறித்துக்கொன்று விடுவீர்கள் போலவே..”

“நான் அந்தளவு ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு இவள் வொர்த்தான எதிரி இல்லை சகோதரா”

“வண்டியை நிறுத்துக்கள் திலீப் சார். இதற்கு மேலும் இந்த மனிதரோடு ஒரே வண்டியில் வர நான் தயார் இல்லை!”  அவள் கோபமாக இறங்க தயாராக திலீபன் செய்வதறியாமல் இன்னும் கொஞ்சமே கொஞ்ச தூரம் தான் இருக்கிறது என்று அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்தான்

தனியாக இருக்கும் போது எவ்வளவு தான் கழுவிக்கழுவி ஊற்றினாலும் துடைத்து விட்டு போவபர்கள் எதிர்ப்பாலார் முன்னே சின்னதாய் அவமானம் நேர்ந்தாலும் எப்படி பொங்கி விடுகிறார்கள்! தனக்குள் சிரித்தபடி தன்னுடைய கதைக்கருவுக்குள் மீண்டும் புகுந்து கொண்டார் அர்ஜூனா

அவர் வீட்டுக்கு போனபோது யாழினி இன்னும் தன்னுடைய டியூஷன் வகுப்பில் இருந்து வந்திருக்கவில்லை. அவர்களுக்கு சமையல் செய்யும் ஐயா முத்து அவர் வந்ததும் சொல்லிக்கொண்டு போவதற்காய் காத்திருந்தார்.

நேராக குளித்து விட்டே டைனிங் டேபிளுக்கு வந்தவர் மூடி போட்டு மூடப்பட்டிருந்த பாத்திரங்களை திறந்து பார்த்தார்.

தோசை அதனோடு சட்னி சாம்பார். முத்துவின் கைவண்ணம் மணத்துக்கொண்டிருந்தது. ஆனால் அர்ஜூனாவின் நெற்றி லேசாக சுருங்கியது

“முத்து! பாப்பாவை மெனு சொல்ல சொன்னேனே சொன்னாளா இல்லையா?” என்று அவர் குரல் கொடுக்க சமையலறையில் இருந்து வெளியே வந்தார் முத்து.

“பாப்பா தான் இது தான் வேணும்னு சொல்லிச்சு சார்.”

நெற்றியின் சுருக்கம் மாறாமலே “உங்களுக்கு நேரமாகி விட்டதா முத்து?” என்று கேட்டார் அவர்

“இல்லங்க சார்.. பதினோரு மணிக்கெல்லாம் போனால் போதும்”

அப்படியானால் கொஞ்சமாக யாழுக்கு மட்டும் உப்புமா கிளறி ஒரு முட்டை புல்ஸ் ஐ போட்டு வைக்க முடியுமா? நானே செய்து விடுவேன்.. பசி கொல்கிறது.

அட உப்புமா பெரிய வேலையா சார்..காய்கறி எல்லாம் நறுக்கித்தானே இருக்கு. என்றபடி அவர் வேலையில் ஆழ்ந்து விட தன்னுடைய டாப்பை எடுத்து போன வாரம் போஸ்ட் செய்திருந்த பவித்ரன் கொலை பற்றிய சிறுகதைக்கான வாசகர் கருத்துக்களில் கண்களை ஓட்டியபடியே  தோசையை சாப்பிட ஆரம்பித்தார் அர்ஜூனா..

பல ரகமான கருத்துக்கள்.

தலைவா கொன்னுட்ட தலைவா…

செத்துப்போன பவித்ரனோட மனைவி உயிரோடிருக்கும் போது செய்த கொலைக்கான ஆயத்தங்கள் அவள் இறந்த மூன்று நாட்களின் பின்பு எப்படி பவித்ரனை கொன்றது என்று நீங்கள் விளக்கியபோது புல்லரித்து போனேன்.. உங்களால் மட்டும் தான் இப்படி முடியும் தல..

இனிமேல் இந்த மனிதரின் கதைகளை நான் படிக்கவே போவதில்லை. பெண்களை எப்போதும் வில்லிகளாகவும் புரிந்து கொள்ளத்தெரியாதவர்களாகவுமே எழுதிக்கொண்டிருக்கிறார்!

வாத்யாரே காலைக்காட்டுங்க

உங்கள் கதைகளில் வரும் பெண்கள் தனி ரகம் சார். என்னவொரு பாத்திரப்படைப்பு தெரியுமா அந்த நிலா? வாழ்த்துக்கள் சார். ஆனால் அடுத்த கதையாவது கொஞ்சம் சீரியஸ் மோடில் இருந்து லைட் மோடுக்கு வரட்டுமே.

சத்தியமாய் சொல்கிறேன். நான் இவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். 24 மணி நேரமும் கூடவே இருந்து ரகம் ரகமாய் துன்புறுத்தி கொடுமை செய்து பெண்களால் என்னவெல்லாம் முடியும் என்று காண்பிக்க போகிறேன்!!!

கடைசிக்கருத்தை படித்ததில் பொங்கி வந்த சிரிப்பில் அவருக்கு தோசை புரையேறியபோது கதவைத்திறந்து கொண்டு வந்த யாழினி நேராக வந்து தண்ணீர் கிளாசை எடுத்து கையில் திணித்து விட்டு உனக்கு இதே வேலையாக போயிற்று என்ற பாவனையில் தலையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டு அறைக்குபோக அவருக்கு இன்னும் சிரிப்புத்தான் வந்தது.

இந்த கருத்துக்கள் அவரது வாழ்வில் நகைச்சுவையை தூவுவதில் பெரும்பங்கு என்றால் அதை மறுக்கவே முடியாது.

உடைமாற்றிக்கொண்டு வந்து அவரின் அருகில் அமர்ந்த  யாழினி உப்புமாவையும் முட்டையையும் கண்டு விட்டு சிரித்தபடி தன்பக்கம் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்க அவளின் தோளைத்தட்டினார் அர்ஜூனா

பேபி உனக்குத்தான் தோசையே பிடிக்காதே.. அப்புறம் எதற்கு அதை செய்ய சொன்னாய்?

உங்களுக்கு பிடிக்குமே அஜு?

இங்கே பார் பேபி. இனிமேல்  இருவருக்கும் பிடித்ததை தனித்தனியே சொல். நாம் தான் முத்துவுக்கு உதவுகிறோமே.. கொஞ்சமாய் அதிகம் செய்வதில் அவருக்கு கஷ்டமில்லை. இனிமேல் இப்படி செய்யாதே..

ஹ்ம்ம் ஹ்ம்ம்..என்றபடி அவள் முட்டையை வாய்க்குள் அடைத்துக்கொள்ள அவர் சிரித்தபடி மீண்டும் டாப் ஸ்க்ரீனில் கவனம் செலுத்தினார்

சரி சரி புரிந்தது. மூடு என்ற பாவனையில் தான் யாழினி ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று சொல்வாள்.

மீண்டும் கருத்து ஒன்று அவரை புன்னகைக்க வைக்க யாழினியின் குரல் கவனம் கலைத்தது “ அடுத்த புக் எப்போ வரும் அஜூ?

அடுத்த மாசம்டா

நான் படிக்கலாமா?

இப்போதைக்கு முடியாது. ஒரு கிரேட் எய்ட் போனதுக்கு பிறகு ஒருவேளை நீ படிக்கலாம்!!!

ஏன் இப்போது நான் படிக்க கூடாது.

அடல்ட் தான் படிக்கலாம். வன்முறை கூட இருக்கும்.

இயூ…..என்னைப்போல சிறுவர்களுக்கு எதுவுமே இருக்காதா?

சாட்லி…நோ

யூ அர் டிஸ்கிரிமினேட்டிங் சில்ட்ரன் அஜூ!!!

அவருக்கு மறுபடி தோசை புரையேறப்பார்த்தது. தண்ணீரை குடித்து விட்டு யாழினியின் பக்கம் திரும்பியவர் கண்கள் பளபளக்க சிரிப்புடன் அவரையே பார்த்திருந்தவளை பார்த்து “ நீ அதிகம் ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறாய் பேபி. கொஞ்சம் குறைத்துக்கொள்..இல்லையேல் என்னால் தாங்க முடியாது” என்று கண் சிமிட்டினார்.

அவள் சொன்னது அவருக்கு புரிந்து விட்ட மகிழ்வில் பொங்கிச்சிரித்தவளை வாஞ்சையாய் பார்த்தார் அவர்.

“ஒரு ஐஸ்க்ரீமையே என்னால் தாங்க முடியவில்லை. நீ வேறு அவளைப்போல பேசி என்னை பயமுறுத்தாதே நான் துறவறம் கிளம்பி விடுவேன்”

என் பெயர் ஐஸ்க்ரீமும் இல்லை. பேபியும் இல்லை! ஆர்ணவி..

சிரித்து விட்டார் அவர்

“பொல்லாத பாப்பா யாழ் நீ! பாவம் அந்த அப்பாவி உனக்கு ஐஸ் கிரீமாக வங்கி கொடுத்தால் அவளையே மிமிக் பண்ணி கலாய்க்கிறாயே!”

“எனக்கு அவளை ரொம்பப்பிடிக்கும்”

அதுதான் தெரியுமே….

 

18 thoughts on “ஆழி- அர்ஜூனா 12

  1. Warey wow!! Ena thodakkathil Nan yethirparthathu pola thileepanin entry iruntha feel mudivil Arjun in Arnavikkana ice cream endra adaimozhiyil hmmmm ena meendum palaiya pulliyil kondu viduthu. Yarodu yaro? Subha Amma in meethana arjunavin kovam Romba sari. Yazhi baby ku ummmaaaaa… so sweettt!! Thnx Ushanthy!

    Liked by 1 person

  2. Hi usha
    Epi kalakal ma😍😍😍 arjun kovam padurathu romba sari…arjunuku sirika kooda theriyuma…diliban vanthathu guest role thane arnaviya pottu ippadi kalaikira yazh baby 😀😀super ma

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: