ஒரு மேசையின் மீது மாவுத்துகள்கள் சிந்திக்கிடக்கின்றன. அதன் நடுவில் யாரோ ஊதியதைப்போல நடுவில் அவை கலைந்து கிடக்க பிய்ந்த ரோஜா இதழ்களை ஓரமாய் கொண்டு அவற்றின் சாயத்தை கொண்டு யாரோ எழுதியது போல ‘விவிதம்’ என்ற தலைப்பு எழுதப்பட்டிருந்தது. மீண்டும் அந்த அட்டைப்படத்தை பார்த்தார் அர்ஜூனா. எழுத்தாளனுக்கு நாவலின் அட்டைப்படம் மிகவும் முக்கியம் தானே.. நாவலின் உள்ளடக்கத்தை சொல்லும் குறியீடாக ஒவ்வொரு நாவலுக்கும் அட்டைப்படம் அமைந்து விடுவதில் அவர் எப்போதுமே அதிர்ஷ்டசாலி தான்.
பிரபு! இந்த படத்தையே ஒகே செய்து விடுங்கள்.
ஒகே சார்! என்று பவ்யமாய் சொன்ன பிரபு “சார் நிஜமாகவே நாவலின் தலைப்பாக இந்த மாவட்டத்தின் பெயரை போட்டிருப்பது சிக்கலை உண்டாக்காதா? என்று கேட்டார்.
“நான் சொல்கிறேன் பாருங்கள். விவித நகர் குறித்து நான் எழுதியிருக்கிறேன் என்றதுமே ஆர்வத்தில் நாவல் அதிகம் வாங்கப்படும் பிரபு” என்று சிரித்தவர்… “ப்ரோமொஷனுக்காக என்று மட்டும் இல்லை இந்த நாவலுக்கு இதைத்தவிர வேறு தலைப்பை என்னால் யோசித்தும் பார்க்க முடியவில்லை இதுவே இருக்கட்டும்” என்றவர் பிரபு அரைமனதாய் தலையசைக்க, நூல் வெளியீட்டைக்குறித்த ஆயத்தங்களை பற்றி பேசிவிட்டு விடைபெற்றார் அர்ஜூனா.
சார்..
என்ன பிரபு?
இந்த தடவையாவது நீங்கள் வெளியீட்டு விழாவுக்கு வாருங்களேன் சார்.. அதுவும் இந்த நாவல் கொஞ்சம் சர்ச்சைக்குரியது என்று ஏற்கனவே மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவும் போது நீங்களும் நேரில் வந்தால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்…
யோசிக்கிறேன் என்று புன்னகைத்தவர் பஸ்ஸில் தொற்றிக்கொண்டு நேராக கடற்கரைக்கு சென்றார். மனதில் கதைக்கரு ஏதும் இல்லாமல் சுற்றுப்புற சூழலை கவனிக்க முடிவதே அவருக்கு அபூர்வம் தான். இன்றைக்கு அப்படியானதொரு நாள்! தினம் வந்து போன இடங்களெல்லாம் புதிதானதொரு அமைதியுடன் இருப்பதாகப்பட்டது.
இளங்காற்று வீசுதே..
ரங்கம்மா ஒளிபரப்புச்சேவை மெலிதாய் இசைத்துக்கொண்டிருக்க புன்னகையோடு அவளை நோக்கி நடந்தார் அர்ஜூனா
வாங்க சார்… வழக்கம் போல உற்சாகமாக அவரை வரவேற்றாள் ரங்கம்மா..
என்ன சார்..ரெண்டு நாளா உங்களை இந்தப்பக்கமே காணோமே..சூடாக வடை போட ஆரம்பித்திருக்கிறேன். சாப்பிட்டுப்பார்க்கிறீர்களா?
சரி கொடுங்கள்..வேலை பிசியில் வரமுடியவில்லை என்றவர் எங்கே குழந்தைகளை காணோம்? என்று தொடர்ந்து கேட்டார்.
இன்றைக்கு ஸ்கூலில் நாடகப்பயிற்சியாம் சார்.. என்றபடி சுத்தமான பிளாஸ்டிக் தட்டொன்றில் சூடான குட்டியான இரண்டு வடைகளையும் சட்னியையும் வைத்துக்கொடுத்தாள் ரங்கம்மா..
வடையை பிட்டு வாயிலிட்டு பார்த்தவர் அதன் சுவையில் சப்புக்கொட்டியபடி நன்றாக இருக்கிறது ரங்கம்மா.. ஆனால் வடை விற்க ஆரம்பித்தால் காபியும் கொடுக்க வேண்டியிருக்குமே. பேசாமல் ஒரு காபி மெஷினை வாங்கி வைத்து விடுங்கள் என்று இலவசமாய் ஒரு அறிவுரை சொன்னார்.
காசு சேர்க்கறேன் சார்..கொஞ்சம் சேர்ந்ததும் கடையை கொஞ்சம் பெருசாக்கலாம்னு யோசிக்கிறேன்..அப்புறம் கண்டிப்பா வாங்கிடுவேன் என்றால் அவள் நம்பிக்கையாக
ஹ்ம்ம்…அவர் வடைகளை மெல்ல ஆரம்பித்தார்.
சார்..நம்ம அனு மிஸ் ஊருக்கு போறாங்களாம்ல.. இப்போ கொஞ்சம் முன்னே தான் வந்துட்டு போனாங்க. நல்ல பொண்ணு சார்..வேணாம் வேணாம்னு சொல்லியும் கேட்காமல் எனக்கொரு சேலை, பசங்களுக்கு கொஞ்சம் புத்தகங்கள் கொடுத்துட்டு போனாங்க!
தண்ணீரை எடுத்து குடித்துக்கொண்டிருந்தவரின் கை அந்தரத்தில் உறைந்தது. இதற்காகத்தானே வீட்டுக்கு போகாமல் நேரே கடற்கரைக்கு வந்தார் அவர்!
“அந்தப்பொண்ணு டெம்பரரியா தானே இங்கே வந்தா..போக வேண்டியது தானே..” விட்டேற்றியாக சொல்லிக்கொண்டு கடற்கரையில் கொஞ்சம் தூரம் நடந்தவர் பிறகு யாழினியை பெரியம்மா வீட்டில் இருந்து அழைப்பதற்காக கிளம்பிச்சென்றார்.
ரெண்டு நாட்களுக்கு முன்னரே அவள் கிளம்பப்போகிறாள் என்று அவருக்கு தகவல் வந்து விட்டது அதிபர் மூலமாக..
இவள் இந்த விடயத்தை இவ்வளவு சீரியஸாக எடுப்பாள் என்று அவர் நினைக்கவே இல்லை..தன்னுடைய அவசர நடவடிக்கைகள் மூலமாக ஒவ்வொரு தடவையும் அவள் அவருடைய முடிவை சரியென நிரூபிப்பதாகவே அவர் நினைத்தார். அவர்கள் காரமாய் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. இதுவரை அவள் அவரோடு பேச முயற்சிக்கவில்லை. ஆனாலும் இறுதி நாள் பேச முயற்சிப்பாள் என்ற எண்ணத்தில் தான் அவளை சந்திக்காமல் தவிர்த்தார் அவர்.
ஆர்ணவி கிளம்பி போயிருப்பாள்ல? யாழினியின் சோகம் சுமந்த கேள்விக்கு இறுக்கமான தலையசைப்பை பதிலாக கொடுத்தவர் அவள் வழக்கம் போல போஸ்ட் பாக்சை செக் செய்ய எதிர் வீட்டின் பூட்டிய கதவை ஒருகணம் பார்த்துவிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.
அஜூ..எனக்கும் உங்களுக்கும் லெட்டர்!!!!
யாரும்மா போட்ருக்கறது? கேள்வியே அபத்தம் தான்..
ஆர்ணவி தான்!!!
அவருடையதை கையில் திணித்து விட்டு தன்னுடையதை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள் யாழினி.
அன்றைக்கு சாப்பிட்டு முடித்து யாழினி தூங்கப்போன பிறகு தான் அறைக்குப்போய் தாளிட்டுக்கொண்டு அதை ஒப்பன் செய்தார் அர்ஜூனா.
ஹல்லோ சார்…
என்னடா கடிதம் எழுதியிருக்கிறாளே என்று உதட்டுக்குள் சிரிக்கிறீர்கள் தானே.. எனக்கு சில விஷயங்கள் தெளிவு படுத்த வேண்டியிருந்தது சார். இதை படித்துவிட்டு நீங்கள் உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்கள் என்றோ நாம் சேருவோம் என்றோ நான் நினைக்கவில்லை. என் வரையில் விட்டுப்போன சில விளக்கங்களை சொல்லி முடிக்கா விடில் என்னமோ பாதியில் விட்ட வழக்கு போல என் மனதை நெருடிக்கொண்டே இருக்கும் அதனால் தான் எழுதுகிறேன்.
- எங்களுக்கு வந்தது உடலியல் ரீதியான ஈர்ப்பு என்ற உங்களின் வாதம்
இது உங்களுக்கே அபத்தமாய் தெரியவில்லையா சார்? நீங்கள் குறிப்பிட்டு சொன்னது போல நான் குழந்தை இல்லை. இருபத்து ஆறு வயது நிறைந்தவள். ஆண்களோடு நிறையவே பழகியிருக்கிறேன். ஆண் நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். எவருடனுமே எனக்கு உங்களுடன் ஏற்பட்ட விஷயம் வந்ததே இல்லை சார்.. ஆக்சுவலி எனக்கு அவர்கள் ஆண்கள் என்ற வேறுபாடே தெரிவது இல்லை. முதல் தடவையாக உங்களைத்தான் ஒரு ஆணாக நான் பார்த்தேன்.
சரி அவ்வளவு தெளிவாக சொன்னீர்களே..நீங்களும் நீங்கள் குறிப்பிட்ட ரீதியில் என்பால் ஈர்க்கப்பட்டதாகவும் என் நலன் விரும்பியதால் அதற்கு மேல் போகாததாகவும்! நான் கேட்கிறேன்..காதல் இல்லை..என்னோடு நேரம் செலவழிக்க பிடிக்கவில்லை என்றால் எரிந்து விழுவது போல விழுந்தாலும் மணிக்கணக்கில் என்னோடு பேசியது எதற்கு? அன்றைக்கு கூட மாடியில் வந்து ஒரு மணிநேரம் என்னருகில் தனிமையாய் இருந்தீர்கள். நான் புரிந்து கொள்ளத்தெரியாதவள் குழந்தை என்றெல்லாம் குற்றம் சாட்டிணீர்களே..அப்படிப்பட்ட என்னை இப்படியெல்லாம் தூண்டியது ஏன்? நான் இன்னுமின்னும் உங்கள் பால் ஈர்க்கப்பட்டு திரும்பி வரவே முடியாத எல்லை வரை என்னை கொண்டு போய் விட்டு விட்டு மனசை உடைக்கவா? நான் அறிந்த அர்ஜூனா அவர் இல்லை சார். அவர் இப்படியெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்து கொள்ள மாட்டார்.
உண்மை என்னவெனில் நீங்களும் என்னை காதலிக்கிறீர்கள், என்ன முயன்றாலும் உங்களால் என்னை விட்டு விலகியிருக்க முடியவில்லை. உங்கள் ஈகோ அதை ஏற்க மறுக்கிறது. அவ்வளவு தான். மண்ணெண்ன வேப்பெண்ண விளக்கெண்ண இனிமேல் நீங்க என்னை லவ் பண்ணினாத்தான் எனக்கென்ன? :p
ஒன்று சொல்லவா சார். உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் லயித்துப்போன ஒரே ஆளுமை நீங்கள் தான். எந்த சமயத்தில் எப்படி பேசுவீர்கள்..எந்த தருணத்தில் எழுந்து போவீர்கள், எங்கே சீரியஸாக பேசுவீர்கள், யாரின் மூக்கை உடைப்பீர்கள் எந்த இடத்தில் உங்கள் சாத்தானிச சிரிப்பை சிரிப்பீர்கள், முறைப்பீர்கள் சகலமுமே எனக்கு அத்துப்படியாகிவிட்டது. காதலை உணர கொஞ்சம் முன்னர் நான் தனியாக நடக்கும் போது கூட உங்களை மனத்தால் அருகில் வைத்து எதற்கு நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள் என்று மனக்கண்ணில் காண ஆரம்பித்து விட்டேன். எந்நேரமும் உங்கள் அருகில் இருக்க வேண்டும். உங்கள் குரலை கேட்கவேண்டும்..புதிது புதிதாக நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனை ஆசை சார்.. எனக்கு வந்தது உடலியல் ஈர்ப்பா? போடா டாஷ்! உனக்கெல்லாம் எவளாவது அரைக்கிழவி வருவா..போய் சேர்ந்து கொள். நான்லாம் செட் ஆகவே மாட்டேன் ..கர்ர்ரர்ர்ர்
- நீங்கள் உங்கள் பெண்களோடான பழக்கம் பற்றி சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்ற உங்களின் குற்றச்சாட்டு
நீங்கள் கண்டீர்களா? என்னைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? நீங்கள் இதை சொல்வது முதல் தடவையா என்ன? முன்பொரு தடவை என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு பஞ்சமே இல்லை என்று சொன்னீர்களே ஞாபகம் இருக்கிறதா? அப்போது நான் முடிவு செய்தேன்..இந்த மனிதரின் வாழ்க்கை முறை வேறு என்னுடையது வேறு.. விலகியிருக்க வேண்டும் என்று! ஆனால் தட் இஸ் லவ் இல்லையா? என்னால் விலக முடியவில்லை. ஆனால் கோபம் வரும் அப்போதெல்லாம் இது காதல் என்று எனக்கு தோன்றவில்லை. உங்கள் மேல் கோபம் கொள்ள அதை ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்தினேன்.
உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது சார். அன்றைக்கு பார்ட்டி முடித்த பிறகு திலீப் எங்களிருவரையும் பார்த்த பார்வையை வைத்துத்தான் நான் எங்களைக்குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் நான் உங்களை காதலிப்பதை புரிந்து கொண்டேன். புரிந்ததும் நான் சந்தொஷப்படவில்லை சார்..இத்தனை சிக்கலுள்ள ஒருவரை எப்படி என்று பயம் தான் வந்தது..நீங்கள் மொட்டை மாடிக்கு வர முன் நான் திலீப்புடன் பேசினேன். எதைப்பற்றி என்று நினைக்கிறீர்கள்? உங்கள் ரொமான்சுக்கு பஞ்சம் இல்லாத வாழ்க்கை பற்றித்தான்!
அவன் என்னிடம் இருந்து இதை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை என்றும் நீங்கள் தான் முதலில் சொல்வீர்கள் என்றும் எதிர்பார்த்ததாக சொன்னான். வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்! அவனிடம் ஒளிவு மறைவின்றி உங்களைப்பற்றி சொல்ல சொல்லிக்கேட்டேன்.
42 வயதுள்ள இவ்வளவு சுதந்திரமும் சமூக கட்டுப்பாடுகளை தூக்கியெறியும் தைரியமுள்ள மனிதர் ரிஷ்ய சிருங்கராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நிறைவேறாத காதல் இருக்கலாம். அந்த காதலியோடு ஒருவேளை நீங்கள் எல்லை தாண்டியிருக்கலாம் என்பது தான் என்னால் முடிந்த ஆகக்கூடிய கற்பனையாக இருந்தது! ஆனால் திலீப் சொன்னது முற்றிலும் வேறு.. நீங்கள் காதலில் நம்பிக்கையே இல்லாத ஒருவர், உங்களுடைய தோழிகள் எல்லாருமே பெண் அர்ஜூனாக்கள் தான் என்றும் அவன் சொன்னான். எந்த பெண்ணோடும் செலவழிப்பதற்கு அர்ஜூனுக்கு நேரம் இருந்ததில்லை. அப்படியே ஓரிருவரோடு ஓரிருமுறை எல்லை தாண்டியிருக்க கூடும், மற்றபடிக்கு அவனை நான் நன்கு அறிவேன்..அவன் வீடு வரை சென்ற முதல் பெண்ணும் அவன் அதிகம் நேரம் செலவிட்ட ஒரே பெண்ணும் நீதான் என்று திலீப் சொன்னான்.
என்னிடம் மட்டும் தான் நீங்கள் குறும்பாக சண்டையிட்டு இவ்வளவு ஓப்பனாக பேசிப்பழகுவீர்களாம். ஆனாலும் அவன் கூட என்னை நன்றாக யோசித்த பிறகு தான் முடிவு செய்ய சொன்னான்.
நான் நிறைய யோசித்தேன். உங்களை விட்டு விலகலாம் என்று கூட யோசித்தேன். ஆனால் முடியவில்லை. ஏனெனில் உங்கள் கமிட்மென்டை நான் பார்த்திருக்கிறேன் சார். 9D வகுப்பு மாணவர்களில் ஆரம்பித்து யாழினி வரை நீங்கள் ஒரு விஷயத்தில் கமிட் ஆனால் எப்படி அரக்கத்தனமான நேர்மையுடன் இருப்பீர்கள் என்பதை நான் பல தடவைகள் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அது போதும் என்று தான் என் மனது சொன்னது சார். அர்ஜூனா காதலிக்கும் முதலும் கடைசியுமான பெண் நானாகத்தானே இருக்க முடியும்? மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது. நான் உங்கள் வாழ்க்கையில் வந்த பிறகான உங்கள் வாழ்க்கை குறித்துத்தான் எனக்கு அக்கறை. இந்த விஷயத்தில் ஆர்ணவி பாலிசி இது தான்.
காதலை சொல்லும்போது இந்த முடிவுடன் தான் சொன்னேன். பிறகு நீங்கள் என்னிடம் மனம் திறந்து பேசியது ஒரு வார கால தலைமறைவின் பின்னர் தான்! அதுவரை அதைக்குறித்து ரகம் ரகமாய் அலசி ஆராய்ந்து மனதில் இதுதான் என்று முடிவெடுத்த பின் நீங்கள் சொல்லும் போது நான் ஆவென்று அதிர்ச்சியாகி கண்ணீர் விடுவேனா சார்?
பெண்களை பற்றி உங்களுக்கு தெரியாது..எனக்கும் ஈகோ உண்டு சார்,, நீங்கள் அந்த விஷயத்தை சொல்ல என்னால் அதை ஆற அமர கேட்டிருக்க முடியும் என்று எப்படி நினைத்தீர்கள்? உள்ளுக்குள் பல்லைக்கடித்தபடி இதெல்லாம் எனக்கு முன்னரே தெரியும்..ஒருவழியாக நான் முடிவெடுத்த பிறகு மறுபடி என்னை குழப்பாமல் அடுத்த விஷயத்துக்கு போ..இப்படித்தான் மனது அலறியது. உங்கள் முன்னிலையில் நீங்கள் எனக்கு முன்னே பெண்களோடு பழகியதற்கு நான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று உங்களிடம் காண்பித்து கொள்ள என்னுடைய ஈகோ இடம் தரவில்லை.
எனக்கு ஒரு காதல் கூட இருந்ததில்லை சார். எனக்கு அந்த பேச்சை காதால் கேட்கவே எரிச்சலாக இருந்தது ஏனெனில் நீங்கள் அதைப்பற்றி பேசியபோது எனக்கு ஒருவாரத்துக்கும் மேலாக தலைக்குள்ளேயே இருந்து புளித்துப்போன விஷயமாக மாறிப்போயிருந்தது அது!
ஒரு பெண்ணாக இருந்தால் புரியும்..கணவரின் பழைய காதலை கணவரே போஸ்ட்மார்ட்டம் செய்யும் போது யாருமே ஆறுதலாக கேட்க மாட்டார்கள்..எங்காவது இதற்கு பாஸ்ட் பார்வர்ட் பட்டன் இருக்காதா என்று எரிச்சலாகத்தான் இருப்பார்கள். எனக்கு வாய்த்தவர் இப்படி… என்ன செய்வது மனது வைத்துவிட்டேன் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்ற அதே எரிச்சல் மனநிலை தான் எனக்கு..உங்கள் முன்னிலையில் அதனால் நான் ஒரு சதவீதம் கூட பாதிக்கப்படவில்லை என்று காண்பிக்கத்தான் என் எரிச்சலைக்கூட வெளிப்படுத்திக்கொள்ளாமல் சிரிப்புடன் கடந்து போனேன்..
நீங்கள் எனக்கென்று ஆகி உங்களின் அன்பை அனுபவிக்கும் போது உங்கள் பழைய வாழ்க்கையை நினைத்தெல்லாம் உங்கள் நிம்மதியை கெடுக்கும் பக்குவமற்ற பெண் நான் கிடையாது.. அப்படி எனில் ஆளை விடு சாமி என்று என்றோ கிளம்பி போயிருப்பேன்..
- இருபத்து ஆறு வயது வரை நீ யார் என்று எனக்கே தெரியாது பிறகெப்படி உங்களுக்கு என் மேல் நல்ல எண்ணம் வரும் என்று கேட்டீர்களே ஒரு கேள்வி..
இது தான் சார் என்னை மிக மிக கொடுமையாய் காயப்படுத்தியது. மற்றக்கேள்விக்கெல்லாம் விளக்கம் கொடுத்திருப்பேன். நீங்கள் என்னை உங்களுக்கு தகுதியில்லை என்று சொன்னீர்களே இதன் பிறகு என்ன விளக்கம் கொடுத்து என்ன?
சார்.. ஆரம்பத்தில் இருந்து உங்களை நான் எனக்கு சமமாகத்தான் பார்த்தேன். ராகவியும் சஞ்சனாவும் பயந்து ஒதுங்கினாலும் நான் உங்களை விடவில்லை. நீங்கள் தப்பாக பேசினாலும் இவர் எப்படி இப்படிப் பேசலாம் என்று சண்டைக்கு வந்தேன்..மனதில் உங்களை அப்போதிலிருந்தே எனக்கு நெருக்கமாக உணர்ந்தேன். எனக்கு வயது வித்யாசம் எல்லாம் தெரியவே இல்லை. அப்போது இது காதல் என்று எனக்கு புரிந்து கொள்ள தெரியவில்லை. அது தவறில்லை ஏனெனில் இன்று வரை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே :p
எங்கே விட்டேன்?
ஆர்ணவி குழப்பவாதி தான் சார்.. ஆனால் என்ன செய்ய? நான் வாழ்ந்த சூழல் அப்படிப்பட்டது. என் அப்பா, அம்மா இருவருமே பொறியிலலாளர்கள். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் இருந்தது. ஒரு விஷய்த்தோடான அறிமுகம் இல்லாமல் எனக்கு அது பிடிக்கும் என்று எப்படி கண்டுபிடிப்பது? அதனால் தான் சட்டத்துடனான அறிமுகம் கிடைத்ததும் நான் அதை ரசித்து கற்க ஆரம்பித்தேன். அந்த வகையில் எது எனக்கு வேண்டும் எது வேண்டாம் என்று நான் மிகத்தெளிவாய் இருப்பேன் சார். வேலையில் கூட மனதை மறைத்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு வாழ்பவர்களை எனக்குத்தெரியும். ஆனால் நேரம் காலத்தை வீணாக்கினாலும் எனக்குப்பிடித்ததை தேடி கண்டுபிடிக்கும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது. அதனால் தான் நான் இங்கே வந்தேன். இதை நீங்கள் குழப்ப மனம் என்று சொன்னால் சொல்லிவிட்டு போங்கள். நான் உங்களை எனக்கு வேண்டும் என்று சொன்னது கூட அப்படித்தான்.
என் வாழ்க்கையை நான் ரசித்து வாழ ஆசைப்படுகிறேன் சார். கடமைக்காக எதையும் சுமக்க தயாரில்லை. சமூகத்தின் கண்களில் அது முட்டாள்தனம் என்றால் நான் முட்டாளாக இருந்து விட்டுப்போகிறேன். யார் என்னை புரிந்து கொள்ளாவிடினும் நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன் சார். நீங்கள் கேட்ட கேள்வியில் நொறுங்கிப்போனேன் போங்கள்.
உங்களை பொறுத்தவரை மன முதிர்ச்சி என்றால் சின்ன புன்னகை கூட செய்யாமல் கிளாசி லுக் கொஞ்சமும் கலையாமல் அப்படியே பொம்மை போல வந்து போவார்கள் என்று எனக்கு அன்றைக்கு தான் தெரிந்தது. உண்மையில் நீங்கள் வளர வேண்டும் சார். நீங்களும் அப்படியான மனமுதிர்ச்சி உடையவர் என்றால் நீங்கள் சொன்ன தத்துவங்கள் உலகைப்பார்க்கும் கோணங்கள் எல்லாமே வெறும் வாய்ப்பேச்சு தான். உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்னை பொறுத்தவரை நானும் சந்தோஷமாக இருந்து என்னை சுற்றியிருப்பவரையும் சந்தோஷமாக இருக்க வைப்பது தான் வாழ்க்கை.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொன்னதை நான் நம்பவில்லை. உங்களுக்கு என்னை மறுக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அதனால் இதைக்கண்டுபிடித்து சொன்னீர்கள் நான் காயப்பட்டேன். உண்மை. ஆனால் அர்ஜூனாவை நான் நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். அவர் உலகை எப்படிப்பார்ப்பார் என்றது கூட எனக்கு அத்துப்படியாகி விட்டிருக்கிறது. அர்ஜூனாவின் கண்ணில் உண்மையில் நான் எப்படித்தெரிவேன் என்பதும் எனக்கு தெரியும். நான் ஏமாற வில்லை. ஆனால் இத்தனை தூரம் நீங்கள் இறங்கி என்னை மறுத்த பிறகு உங்கள் வாழ்க்கையில் என்னை வற்புறுத்தி சேர எனக்கு விருப்பமில்லை. ஆர்ணவி அந்தளவிற்கு டெஸ்பரேட் இல்லை.
அந்த வரை நீங்கள் ஜெயித்து விட்டிருக்கிறீர்கள்
ஆமாம். நீங்கள் எனக்கு சவாலாக அறிமுகமானீர்கள். எனக்கு முற்றிலும் புதிய உலகை காட்டினீர்கள். என்னை நானே விரிவு படுத்திக்கொள்ள நீங்கள் தான் உதவினீர்கள். ஒவ்வொரு சிக்கல் வந்தாலும் இதை அர்ஜூனா எப்படிப்பார்ப்பார் என்று எண்ணித்தான் நான் எதிர்கொள்கிறேன். ஒருவகையில் நான் உங்களின் ஏகலைவி தான். சொன்னீர்களே ஆர்ணவி யார் என்று எனக்கே தெரியவில்லை என்று! ஆர்ணவி யார் என்று தெரிந்து விட்டது சார். ஆனால் அதை உங்களுக்கு சொல்ல வேண்டாம் என்று தோன்றுகிறது. சொன்னால் கூட அந்த கீழுதட்டு சிரிப்போடு இது எத்தனை நாளுக்கு என்று தான் எண்ணுவீர்கள். அப்படியே எண்ணிக்கொள்ளுங்கள். ஒருநாள் என்னை நீங்கள் சந்திப்பீர்கள். அன்றைக்கு நான் யாரென்று நீங்களே பார்ப்பீர்கள்.
பிற்குறிப்பு: இப்போது கூட நீங்கள் என்னை மறுத்த பொறாமையில் நான் யாழினியைப்பற்றி சொன்னதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் தானே? 😉 தாராளமாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்களைக்குறித்து நினைத்துக்கொள்வது போல அர்ஜூனா சகலமும் அறிந்த தீர்க்கமாய் சிந்திக்கும் முதிர்ச்சியான மனிதன் இல்லை என்பதையும் சேர்த்து நினைத்துக்கொள்ளுங்கள். அர்ஜூனாவுக்கும் ஒரு vulnerable side இருக்கிறது. அதை நான் மட்டுமே அறிவேன் என்ற பெருமையோடு கடிதத்தை முடிக்கிறேன்.
ஆர்ணவி.
Fantastic update..
LikeLiked by 1 person
Thank you!!!
LikeLike
உஷாம்மா …
அத்தியாயம் 17, 18 கதைக்கு ஒரு அழுத்தம் தந்த அத்தியாயங்கள் . ஆழ்ந்து உணர்ந்து வாசித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும் . அதில் நானும் சேர்த்தி.
அதே ,அத்தியாயம் பத்தொன்பது ..OMG..
உம் எழுத்துக்களின் ரசிகையாய் உம்மிடம் ஒரு எதிர்பார்ப்பு ..அது ஒவ்வொரு கதைக்கும் அதிகரித்துக் கொண்டே வந்துது என்றால் இந்தக் கதையில் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் அந்த எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போச்சு …அடிக்கடி நானே எனக்கு குட்டுக் கொடுக்கிற அளவுக்கு .
வார்த்தைகளால் சட்டென்று பாராட்ட முடியாத அளவுக்கு இன்றைய எபி ..ஆரா என்பவள் தன்னைத்தானே …தான் நேசிப்பவனுக்கு உச்சியில் ஆணி அடிப்பது போல சொல்லி விட்டாள்…இடையில் நம்மையும் அறியாது முறுவலும் வந்து போக ..எனக்கு கொஞ்சம் கண் கலங்கிப் போச்சு செல்லம் ..
இந்த கதைக்கு பின்னால் உள்ள உஷாந்தியை நினைக்க நிஜமாகவே பெருமையாக இருக்கு ..
இன்னும் இன்னும் உம் எழுத்து வளர்ந்து கொண்டே போகவேணும் . அந்தளவு திறமை உம்மிடம் இருக்கு …
அன்பு வாழ்த்துக்கள் மா ..
ஏதேதோ சொல்ல வந்தேன் எனக்கு எதுவும் வரவில்லை போம்
LikeLiked by 1 person
hahahahahhaha nanri nanri nanri 😀 😀
LikeLike
excellent and fantastic and superb dialogues. no words to say sis.. i really loved all the sentences inch by inch.God bless you.
LikeLiked by 1 person
Thank you sis 🙂
LikeLike
ஒரு இடத்தில் அனு டீச்சர்( அர்ஜுனா..ரங்கம்மவோடு கதைக்கும் இடம்)என்று இருக்கு .
அதென்ன எங்க அர்ஜுனா க்கு ஒரு வயதை அதிகமாகச் சொல்லி இருக்கிறீர் . இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் . 42 …ஹ்ம்ம் 43 எல்லாம் இல்லை.
LikeLiked by 1 person
Arjuna voda kathaikkekka per solli sollaama pillaiyal solrapolave Anu miss endu solra ka.. ha ha maathitten 😀
LikeLike
கிழவன குமரன் ஆக்க இவவும் படாத பாடு படுறா..
LikeLiked by 1 person
ஹஹஹ்ஹஹா ரோசி அக்கா…இந்த அவமானம் தேவையா?
LikeLike
No words to explain. What a great episode
LikeLiked by 1 person
Thank you sis
LikeLike
Aarnavi lt padichu kaitadda tonuchu
Superrrr
LikeLiked by 1 person
ஹா ஹா தாங்க்ஸ்!
LikeLike
ஹாய் உஷா அருமையான பதிவுகள்….வித்தியாசமான சூழல் அழுத்தமான வசனங்கள் என்று அருமையாக எழுதி இருக்கீங்க….நன்றி பதிவுகளுக்கு…
LikeLiked by 1 person
Thank you sis 🙂
LikeLike
Usha mam, amazing episode. Thanks for such a different story. Every ud makes us to wait for next ud eagerly. Arnavi s letter explains everything about her love n feelings with Arjuna sir. Ur way of writing is simply superb, i feel like everything happening before me.
LikeLiked by 1 person
Thank you sis! ❤
LikeLike
Nice update
LikeLiked by 1 person
Thanks 🙂
LikeLike
Acho ushu umma chellam pannita po!epovum different stories kuduthalum athula oru fun,specially heroines naughty a hero Bala samalika mudiyathavangala ana remba sweet a than parpom in stories la,but ithula ara kilapura,first Ud la irunthe sweet than.athilum inthe Ud la appa nethi adi than,sixer a aduchu Thalta.ena matured dialogues!ajuna matum ila nanume thorantha vaya moodala,padikum pothu(nala vela inga kosu ila!).savi yayum,nithuvayum kattina usha ipo ara molama ,neeye matured agitiyonu thonuthuda!ithu remba ve heavy ana kashtamana themela,elarum accept pannuvangala nu bayam iruka?
LikeLiked by 1 person
ஹஹஹா நன்றி நன்றி… டைம் என்னையும் மாத்தியிருக்கலாம் சிஸ் 😀 😀
LikeLiked by 1 person
Hi Ushanthy,
17,18,19 beautifully penned! Thnx
LikeLike