மலர்ந்தும் மலரத மொட்டுக்களை அதிகம் சுமந்திருந்த ரோஜாமரங்களை பார்த்தபடியே சுற்றியோடிககொண்டிருந்தாள் ஆர்ணவி. எத்தனை வண்ணங்கள், நடு நடுவில் பூக்களை நாடி வரும் வண்டுகள், அந்த வளைவைக்கடக்கும் சில நிமிடங்களுக்குள் எத்தனையை கவனித்துவிட்டாள் அவள்.
ஆக வாழும் வாழ்க்கையில் திருப்தி ஏற்படும் போது, செய்யும் வேலையை லயித்து செய்யும்போது நம் கண்களுக்கும் உலகம் அழகாக தெரியுமா? நாமும் போகிற போக்கில் ரசிக்க ஆரம்பித்து விடுவோமா?
அவள் புன்னகையை உதட்டில் பூட்டிக்கொண்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தாள்
அர்ஜூனா இப்போது இருந்திருந்தால் இதற்கு என்ன சொல்லியிருப்பார்?
சட்டென்று தன்னைத்தானே குட்டவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானாள் ஆர்ணவி. அவரைப்பிரிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிப்போயும் சாதாரணமாக அவள் செய்யும் நாளாந்தக்கடமைகளில் கூட அவரை தவிர்க்க முடியவில்லை அவளுக்கு..
கேட்டை திறந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டு மீண்டும் சாத்தினாள் அவள்
எனக்கு ஏன் இப்படி செய்தீர்கள் சார்? தினமும் இரவுகளில் அவளால் கேட்காமல் இருக்க முடிந்ததில்லை. கண்ணீர் எல்லாம் வருவதில்லை ஆனால் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் நிராகரிப்பு தரும் வலியை ஒதுக்கி விட முடியுமா என்ன?
“என்னடா..இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டியா? உட்கார் காபி சாப்பிட்டுவிட்டு குளிக்கலாம்.” அம்மா சோபாவை கைகாட்டிவிட்டு கிச்சனுக்குள் மறைந்தார்.
அப்படியே உடலை சோபாவில் தளர்த்தினாள் அவளும்.
திரும்ப வீட்டுக்கே வந்ததில் இருந்து வீட்டில் யாருமே அர்ஜூனா பேச்சையோ பழைய பிளாட் பற்றியோ பேசுவதேயில்லை. புதிய வேலை, நேரம் தவறாமல் ஓட்டப்பயிற்சி. வீட்டிலும் பூந்தோட்டம் அமைக்கிறேன் என்று அவள் உழைக்கும் விதம் எல்லாமே அவளது வாழ்க்கை குறித்த நம்பிக்கையை அவர்களுக்கு விதைத்திருக்க வேண்டும். அவர்களும் இயல்பாகவே அவளை கையாள முயன்றார்கள்.
“ஸ்ரீ இன்றைக்கு உனக்காக புட்டிங் பேக் செய்தாள்” என்றபடி குட்டி கப்பில் காபியோடு அதையும் எடுத்து வந்தவர் மகளிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டார்.
நான் கஷ்டப்பட்டு ஓடிக்கலோரியை குறைத்து விட்டு வந்தால், கையில் இப்படி எதையாவது கொடுத்து ஏற்றி விடு ஸ்ரீக்கா”..பொய்க்கோபமாய் சொன்னாலும் அவள் வேகமாய் சாப்பிட ஆரம்பித்திருந்தாள்
“ஆரு..நான் சீனி சேர்க்கவேயில்லை. டேட்ஸ் தான் சேர்த்தேன்..அதனால் ஒன்றும் ஆகாது..” உள்ளிருந்து ஸ்ரீயின் மறுப்புக்கு சிரித்தபடி “நீ சீனி சேர்த்திருந்தால் கூட நான் சாப்பிடாமல் கீழே வைத்திருப்பேன் என்றா நினைக்கிறாய்?” என்று பழிப்புக்காட்டினாள் அவள்
ஆரு.. போன் ரிங்காகிறது பார். வைஷ்ணவி உள்ளிருந்து குரல் கொடுத்தார்
ப்ளீஸ்மா..எடுத்துக்கொடேன்!!!
வீட்டிற்குள் அசையாமல் இருந்துவிட்டு கிரவுண்டில் போய் ஓடு! என்று கிண்டலாய் சொல்லியபடி சார்ஜரில் இருந்த போனை கழற்றிக்கொண்டு வந்து ஆருவின் கையில் கொடுத்துவிட்டுப்போனார் வைஷ்ணவி
ராகவி அழைத்துக்கொண்டிருந்தாள்!
ஹலோ ராக்கி! வாட்சப்?
ஏய் வீட்லையா இருக்க? ராகவியின் குரலில் ஏகப்பரபரப்பு
ஆமாம். ஏன்?
தமிழ் மாருதம் சானல் வந்தா போடுடி சீக்கிரம்..சீக்கிரம்..அவள் அவசரப்படுத்தினாள்
ஏன்னு சொல்லித்தொலையேன் மாடு!!!
“என்னால முடில..சீக்கிரம் போட்டுட்டு எனக்கு கால் பண்ணு.” அவள் கட் செய்துவிட்டாள்
என்ன இப்படி டெண்ஷனாகுறா? என்று குழம்பியவள் சானல் லிஸ்டில் தமிழ் மாருதத்தை ஒருவழியாய் கண்டு பிடித்து வைக்க கண்ணில் பட்ட முதல் விஷயமே அர்ஜூனா தான்.
அவளின் பரபரப்பை பார்த்துவிட்டு ஹாலுக்கு வந்த வைஷ்ணவியும் எதுவும் பேசாமல் மௌனமாய் திரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.
விவிதா என்ற சொல்லோடு ஒரு பெரிய டிஜிட்டல் பிரிண்ட் மேடையின் பின்னணியில் இருக்க நடுநாயகமாய் அமர்ந்து கொண்டிருந்தார் அர்ஜூனா.
அவரது நூல் வெளியீட்டு விழா போலும். பல நாட்களுக்கு பின் அவரை கண்டதில் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தவள் டிஜிட்டல் பிரிண்டில் எழுத்தாளர் பெயரில் அர்ஜூனா என்று இருக்க வேண்டிய இடத்தில் “ருத்ரா” என்று இருந்ததை சில கணங்கள் கழித்துத்தான் கவனித்தாள்
ருத்ரா… அவள் அதிர்ச்சியோடு தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக்கொள்ள மேடையில் பதிப்பாளர் பேசிக்கொண்டிருந்தது தன்னிச்சையாய் செவிகள் வழியே இதயத்தில் நேரடியாய் இறங்கியது
“இத்தனை நாட்களாய் முகமே காண்பிக்காதிருந்த ருத்ரா இந்த நாவலுக்காய் வெளியே வந்து வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சி. அவருடைய ரசிகர்கள் எல்லாம் இந்த ஒரு தருணத்துக்காகத்தானே இத்தனை காலம் காத்திருந்தனர்! நன்றி ருத்ரா சார்!”
“இந்த நாவலின் முதலாவது பிரதியை படிக்கும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது என்று நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். ட்ரக் மாபியா பற்றி நேரில் சென்று பார்த்துவந்தது போன்ற எண்ணத்தை உருவாக்கும் பரபர நாவல்! அன்றே மனதில் தோன்றி விட்டது இந்த நாவல் உருவாக்கப்போகும் அதிர்வுகள் பற்றி..அதை விட இதில் அவரது ரசிகர்கள் எல்லாம் மகிழ்ந்துபோகும் இன்னொரு விடயமும் இருக்கிறது. அதை நீங்கள் புத்தகத்தை வாங்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.”
அவள் புத்தகங்கள் படிக்கும் வழக்கமில்லாதவள் தான். ஆனால் ருத்ரா என்ற பெயர் அவளுக்கு மிக மிக பரிச்சயமானது. சில திரைப்படங்களுக்கு கூட அவர் வசனம் எழுதியிருப்பார்.
சுராஜ் அவரது புதிய புத்தகம் வெளிவந்த தினத்தன்றே வாங்கி விடுவதை பெருமையாய் நினைப்பவன். வாத்தியார் என்று கொண்டாடுபவன். அவளுடைய தோழி ஒருத்தி அவருடைய புத்தகங்களுக்கு என்று ஒரு லைப்ரரியே வைத்திருப்பாள்! ருத்ரா எப்படி இருப்பார், அவர் எப்படி இப்படி எழுதலாம்? இதெல்லாம் அவளது கல்லூரிக்கால ஒன்றுகூடல்களில் விவாதிக்கப்படாமல் இருந்ததே இல்லை.. அப்போதும் எப்போப்பார் அந்த ஆள் பேச்சுத்தானா..ஸ்டாப் த மியூசிக் என்று என்ட் கார்ட் போடுபவளாக அவளே தான் இருந்தாள்.
திலீபன் எழுந்து மேடைக்குப்போவதை இடுங்கிய கண்களோடு கவனித்தாள் அவள்
அவன் கூட சொல்லவில்லையே என்று வருந்த முடியுமா என்ன? இவ்வளவு பெரிய விஷயத்தை கூட அவளோடு அர்ஜூனாவே பகிர்ந்து கொள்ளவில்லையே..அந்தளவுக்கு அவளை அவர் ஒரு முக்கியமான ஜீவனாக நினைத்தும் பார்க்கவில்லை என்று தானே அர்த்தமாகிறது. அப்போ அன்றைக்கு அவளை நிராகரித்து அவர் சொன்னதெல்லாம் மனதார சொன்னவைதானா? அவளின் காயங்களை மிக ஆழமாய் ஒரு வாள் ஒன்று ஊடுருவி ரணம் செய்ய, கண்களில் மீண்டும் கண்ணீர் முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்தன
“ருத்ரா கிட்டத்தட்ட ஒரு அண்டர்கவர் அலுவலர் போல விவிதநகரில் சுற்றித்திரிந்து எழுதியது தான் இந்த நாவல். அந்தளவு உழைப்பை அவர் இந்த நாவலில் கொட்டியிருக்கிறார். நூற்றுக்கு எண்பது வீதம் நிஜம் பேசும் இந்த நாவல் பெரிய வரவேற்பை பெறவேண்டும். மிகப்பெரும் தேவையை தன்னுள் தாங்கி பல பக்க உதவிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் விவிதத்தை நோக்கி சரியான உதவிக்கரங்கள் இதன் மூலம் நீளுமாயின் ஒரு வாசகனாக எனக்கு அதைவிட வேறு சந்தோஷம் இல்லை!!!”
திலீபன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க அவளது கவனம் அவனது பேச்சில் இருந்து கலைந்து அர்ஜூனாவில் நிலைத்தது.
கருநீல ஷர்ட் அணிந்திருந்தார். ஜெல் பளபளக்கும் தலைமுடி, முழுக்க முழுக்க டிப்டாப்பான தோரணையில் ஒரு வித ஆளுமையை அந்த மேடை முழுதும் வழங்கியபடி கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார் அவர்.
இவர் ருத்ரா..அர்ஜூனா அல்ல..
மேலே அவளுக்கு எதையும் பார்க்க இயலவில்லை
டிவியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, அருகில் வந்து அமர்ந்து கொண்டு செய்வதறியாமல் அவளையே பார்த்திருந்த வைஷ்ணவியின் மடியில் சுருண்டு விழுந்து கண்ணீர் பெருக்க ஆரம்பித்தாள் ஆரா.
இத்தனை பெரிய மனிதருக்கு அவள் எல்லாம் ஒரு பொருட்டாய் இருந்திருக்க முடியாது தான்.
அதுதான் வெளிப்படையாகவே சொன்னாரே..எனக்கு நீ தகுதியில்லை என்று..
வைராக்கியமாய் பிரிந்து வந்தபிறகு அன்றைக்குத்தான் முதல் தடவையாய் அழுதாள் ஆர்ணவி
ராகவி தொலைபேசியில் அழைத்ததை கட் செய்துவிட்டு வெகுநேரம் தாயின் மடியிலேயே படுத்திருந்தாள் அவள். என்ன கேட்பதென்று புரியாமல் மகளின் தலையை நீவிவிட்டபடி அமர்ந்திருந்தார் வைஷ்ணவி.
மறுநாள் அலுவலகம் சென்று விட்டு திரும்பும் வழியில் புத்தகக்கடை ஒன்றில் ருத்ராவின் புதிய வெளியீடான விவிதம் இங்கே கிடைக்கும் என்று போர்ட் வைத்திருந்தார்கள்.
லேசான விரக்திப்புன்னகையோடு கடந்து சென்றவள் இரண்டாவது நாள் புத்தகக்கடையில் காரை நிறுத்தி ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்
அவளுக்கு நீளமான புத்தகங்களை படிப்பதே அலர்ஜி தான் இருந்தாலும், விவிதத்தில் அவளும் வாழ்ந்திருக்கிறாள் அல்லவா… அவர் என்ன தான் சொல்லியிருப்பார் என்ற ஆவலில் தன் கவலைகளை தூக்கிப்போட்டுவிட்டு அன்றைக்கிரவே படிக்க ஆரம்பித்தாள்
விவிதத்தில் கடலோர பல்கலைக்கழக ஹாஸ்டல் ஒன்றில் தான் அந்த கதை ஆரம்பிக்கிறது. அவர் ஏன் கடற்கரைக்கு அடிக்கடி போனார் என்று படிக்கும் போது அவளுக்கு நன்றாகபுரிந்தது. அந்த கடற்கரையின் ஒவ்வொரு அங்கமும் கதையில் வந்தது. மாலை ஆறுமணியின் பின் வரும் மர்மப்படகுகள், அவர்களோடு தொடர்பு கொள்ளும் அதே ஊரைச்சேர்ந்த மனிதர்கள்
கடற்கரையையே இசையினால் தாலாட்டும் சுண்டல் விற்கும் பெண்மணியான செல்லம்மா!!! அவரின் வறுவல் சுண்டல்!!!
ரங்கம்மா கடையை மனதில் அசைபோட்டபடி அவள் மேலே படிக்க ஆரம்பித்தாள்.
இன்னொரு பக்கம் அந்த ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருத்தி கைது செய்யப்படுகிறாள்.
அதைப்பற்றி விசாரிக்க வருகிறான் தனஞ்சயன் என்ற இளம் போலீஸ் அதிகாரி.
ஹாஸ்டல் ஹாரிடோரில் நின்று அவன் மாணவிகளை விசாரித்திக்கொண்டிருக்க அவனுக்கு வலப்பக்க படிக்கட்டில் இருந்து இறங்கி வருகிறாள் ஒரு பெண்.
“வெண்ணிறக்குடையென அவள் அணிந்திருந்த ஸ்கர்ட் அவ்வப்போது அவள் நடக்கையில் விலக ஒரு முயலில் நளினத்துடன் பாதங்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. கழுத்தை சுற்றி ரோஜாக்களால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த சிக்கென்ற சிவப்பு மேலாடை தன்னை அணிந்திருந்தவளையும் ஒரு பெரிய ரோஜா போலத்தான் காண்பித்து கொண்டிருந்தது”
பட்டென்று நிறுத்தி விட்டாள் ஆர்ணவி.
கழுத்தில் ரோஜா வேலைப்பாடு செய்த சிவப்பு டாப் அவளுடையதல்லவா!!! அட ஆமாம்!!! அன்றைக்கு முதல் தடவை அவள் அந்த கூடை நாற்காலியோடு வீட்டுக்கு போன போது வெண்ணிற லாங் ஸ்கர்ட் தான் அணிந்திருந்தாள்! நாற்காலிக்குள் போய் மாட்டுகிறதே என்று அதை திட்டியபடியே தூக்கி மேலே பின் செய்தது இன்னும் ஞாபகம் இருந்தது.
அடப்பாவி அப்படியே ஞாபகம் வைத்திருக்கிறீர்களா சார்? இந்த காரக்டர் மட்டும் மொக்கையாக இருக்கட்டும்..சொன்னதையெல்லாம் அம்போ என்று விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மொத்துவேன்!!!! மேலே படிக்க அவளுக்கு வேறு உத்வேகம் வேண்டியிருக்கவில்லை!
“சாரி சார், அனுமதி பெறாமல் மாணவிகளை நீங்கள் பார்க்க இயலாது. வார்டனின் அறைக்கு முன்னே காத்திருந்து அனுமதி பெறவேண்டும்.” பேருக்கு ஓர் புன்னகையை பூத்தபடி அவள் சொல்ல அவளை ஏற இறங்க பார்த்தான் தனஞ்சயன்
சாரி. நான் தனஞ்சயன். அங்கே வார்டன் இல்லை. நான் ஒரு பத்துநிமிடம் காத்திருந்து பார்த்தேன். அதனால் தான்…. நீங்கள்??
வணக்கம் என்பதாய் தலையசைத்தவள் “என் பெயர் ஆழி. உதவி விரிவுரையாளினி. தற்போது இந்த ஹாஸ்டல் வார்டனும் நான் தான்!” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு “அங்கே காத்திருங்கள்” என்று வார்டனின் அறைப்பகுதியை கைகாட்டிவிட்டு திரும்பி நடந்தாள் ஆழி
தனாவுக்குள் சினம் மூண்டது. “மிஸ் ஆழி!!! நீங்கள் திரும்பி வர எவ்வளவு நேரமாகும்?”
“சாரி சார். என்னுடைய அலுவலக நேரம் இன்னும் அரைமணிநேரத்தின் பின் தான் ஆரம்பிக்கும். சோ.. “ என்று தோளைக்குலுக்கியபடி திரும்பி நடந்தவளை அடக்கிய சினத்துடன் உறுத்து விழித்தான் தனா..
அடப்பாவி! ரொமான்ஸ் எழுதுவதில்லை என்றாரே…இந்தக்கதை ஆரம்பமே தூள்பறக்கிறதே.. ஆனால் அவளுடைய பெயரை வைத்து அவளது உடையையும் ஒரு காரக்டருக்கு மாட்டிவிட்டு கதையில் உலவ விட்டிருப்பதை படிக்கும் போது அவளுக்கு என்ன எண்ணுவது என்றே புரியவில்லை
சட்டென ஒரு எண்ணம் தோன்றியது.
ஸ்ரீக்கா… தனஞ்சயன் என்ற பெயருக்கு அர்த்தம் என்ன? என்று கத்தினாள் ஆர்ணவி.
தனஞ்சயா நம்ம அர்ஜூனன் பேர்மா…பூமராங் போல ஹாலில் இருந்து பதில் வந்தது
உதடுகளை கடித்தபடி சற்றுநேரம் அப்படியே இருந்தாள் அவள்.. என்னதான் அவர் தான் நேரில் சந்திப்பவர்களை கதையில் உலவ விடும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும்……..
என்ன சார் மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
ஆனால் அதற்கு மேல் அவளை எதையும் செய்யவிடாமல் கதை அவளை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டது.
புதுப்பழக்கம் ஆதலால் அந்த புத்தகத்தை நிறைவு செய்ய நான்கு மணிநேரங்கள் ஆகியிருந்தன. மனமெல்லாம் கேள்விகள் மட்டும் தான்
போதை வஸ்து கடத்தல், விநியோகம்..அந்த ஊரில் எங்கே எப்படி நடைபெறுகிறது? அதை ஆதரிக்கும் உள்ளூர் பிரமுகர்கள், அதன் ஆதரவு நெட்வர்க், எல்லாமே சுவாரஸ்யமாக பர பர திருப்பங்களுடன் கதை பறந்தது. ஆழி அதிகம் கதையில் குறுக்கிடவில்லை. ஆனாலும் அவளுக்கு கதையில் முக்கியத்துவம் இருந்தது.
அவளது சுபாங்கன் கதை போலவே அந்த ஆழிக்கும் மாணவி ஒருத்தி சம்பந்தப்பட்ட கதை இருந்தது, அதற்காக தனாவை தேடிப்போகிறாள் அவள்
இதுதான் அவள் படிக்கும் முதல் நாவல் ஆனால் முதலாவதிலேயே அவரது ரசிகையாகிவிட்டேன் என்று தான் தோன்றியது அவளுக்கு, ஆங்காங்கே அவரே நேரில் நின்று அந்த கீழுதட்டு சிரிப்போடு பேசுவது போல பிரமை தட்டியதும் கூட அதற்கான ஓராயிரம் காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்
அன்றைக்கு வெகு சீக்கிரமே விவிதத்துக்கு கவனம் கிடைக்கும் என்று மர்மமாக சிரித்தாரே..உண்மைதான். ரத்தமும் சதையுமாய் இந்த நாவல் விவரிக்கும் விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் புறக்கணித்துவிட முடியாது!
எப்படி இத்தனை தகவல்களை கோர்த்து பரபரவென கதையை அமைத்தாரோ தெரியவில்லை. நிறைய கதாப்பாத்திரங்கள், பொறுப்பற்ற ஆண்கள், பெண்கள். மிகப்புத்திக்கூர்மையான ஒரு போலீஸ் கதாநாயகன்! ஆனால் ஆர்ணவிக்கோ ஆழி என்ற கதாப்பாத்திரம் மட்டும் தான் அவள் மனதில் நின்றது. பிறர் மனதில் தோன்ற சாத்தியமே இல்லாத கேள்விகள் எல்லாம் ஆர்ணவிக்கு அவளைக்குறித்து எழுந்திருந்தன. அவை அவளுக்கு மட்டும் தானே வர முடியும்?
அந்த ஆழி முற்றிலும் வேறாக இருந்தாள். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஆர்ணவியை விட அர்ஜூனா தான் ஆழியில் அதிகம் தெரிந்தார்.
அவள் தைரியமானவளாக இருந்தாள்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்தாள்
தனக்கு வேண்டியது என்ன என்பதில் மிகத் தெளிவாய் இருந்தாள்
தனாவுக்கு ஆழியின் மேல் லேசான ஈர்ப்பு இருப்பதாக கதையில் காண்பித்தாலும் ஆழியின் மர்மச்சிரிப்புக்கள் மொழிபெயர்க்கப்படவேயில்லை.
இருக்கிறது ஆனால் இல்லை என்ற ஒரு மிதக்கும் இனிய மனநிலையிலேயே அவர்களை தனித்தனி பாதைகளில் அனுப்பி கதையை முடித்து விடுகிறார் ஆசிரியர்.
இந்த ஆழி அர்ஜூனாவின் கனவுப்பெண்ணா? பல இடங்களில் ஆழி ஆர்ணவியை நினைவூட்டுவது போல இருந்தாலும் அவள் உணர்வுகளை வெளிப்படுத்தாத அழுத்தமான பெண் என்பதில் ஆர்ணவியிடம் இருந்து நிறைய வேறுபட்டாள்.
ஆனால் லேசாக தலைசாய்த்து விரலை நாடியில் தேய்த்துக்கொள்ளும் ஆர்ணவியின்’ மேனரிசம் வரை ஆழி செய்து தொலைத்திருந்தாள்
இதை எப்படி எடுத்துக்கொள்வது?
அர்ஜூனாவே தன்னுடைய உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடையில் குழம்பி நின்றதைத்தான் இது காண்பிக்கிறதா? அவரின் கனவுப்பெண்ணை ஆர்ணவி என்ற நிஜம் ஜெயித்ததாக கொள்ளலாமா?
ஏன் சார், ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற எளிய கணித்தலை இத்தனை குழப்பமாக்கி வைத்திருகிறீர்கள்?
அவர் தெளிவாக இருந்தால் கூட என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? மனதின் கேள்விக்கு தன்னைசுற்றி கவிந்த சோகம் தான் அவளுக்கு ஒரே பதிலானது
அருமையான பதிவு….ஒவ்வொரு பதிவும் முடியும் பொழுது…இனி என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை…நன்றி பதிவிற்கு
LikeLiked by 1 person
thank you sissy
LikeLike
Sissy,, Kalakkuringa… I cannot get out of this novel… Unga writings epavum unique… Indha novel en all tym fav aga pogudu nu ninaikuraen.. ❤
I simply love it.. Nala twists and turns… Aazhi indha name than highlight… Love u sissy…. Keep Rocking !!!!!!!!!
LikeLiked by 1 person
Thank you sooo much 🙂 ❤
LikeLike
Yeah forgot a point to mention… Neenga maximum next days update kudukuradhu super sissy 🙂 because waiting is always painful… Readers curiosity kaga neenga iluthu adikama, oru smile oda next day update padikuradhu,,, kumudha happy annachi nu score panringa neenga 🙂 ❤
LikeLiked by 1 person
I have to finish this ASAP sis.. Thats y all the hurry
LikeLike
Super update..
LikeLiked by 1 person
thanks sis
LikeLike
superrrrrrrrrrrrr
LikeLiked by 1 person
danqq
LikeLike
Hi usha
Update superb ma😍😍arjunavum arnaviyum inaivargala illai kathaiyil sollirupathu pol iruku aanal illai endru end card potruveengala suspense thangala ma😊😊
LikeLiked by 1 person
thankyou sis.. ha ha no no
LikeLike
Twistuuuuu
LikeLiked by 1 person
ha ha
LikeLike
nice.
LikeLiked by 1 person
Thanks
LikeLike
Ayyo Arjuna ipidi arnavi nra ganthatha nokki eerkapaturuke?ipo anthe iron man enna seyrarunu therinje aganume!ud ku Ud remba super a iruku ushu,next epo epo nu paraparapa iruku.
LikeLiked by 1 person
😀
LikeLike