மீண்டும் நானே…

டியர் மக்களே..

யார் நீ என்று கேட்காதீர்கள்.. நான் இங்கே வந்து சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டிருகிறது! என் நேரமின்மை மட்டுமே காரணமில்லை. என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. இங்கே போஸ்ட் பண்ணினாலாவது தொடர்ந்து எழுதுவேன் என்று நினைத்து ஒரிரு நாவல்களை இங்கே ஆரம்பித்துக்கூட நிறுத்தினேன்.

இங்கே போஸ்ட் பண்ணாமல் நான் பாதியில் நிறுத்திய கதைகள் பத்தை நெருங்கும். நிறைய நாள் எழுதாமல் விட்டதும், வேலைப்பழுவும் சேர்ந்து அவற்றை அப்படியே நிறுத்த வைத்துவிட்டன. இடைவெளி விட்டால் அந்த கருவை மொத்தமாக மறந்து விடுவதால் அவற்றை தொடரவும் முடியவில்லை.

இறுதியாக என்னுடைய முக்கியமான வேலையொன்று முடிந்து விட்டதால் மறுபடி முயற்சி செய்யப்போகிறேன். இங்கே நான் போஸ்ட் செய்வது என்னை தொடர்ந்து எழுத வைக்க மட்டுமே.நான் பாதியில் நிறுத்துவேன் என்ற எண்ணத்தை கொடுத்திருந்தால் மன்னிக்கவும், அப்படி எண்ணுபவர்கள் நான் முடிக்கும் கொஞ்சம் காத்திருக்கவும்.

அடுத்து கதைக்கு வரலாம்..

எந்த வித சிக்கலும் இல்லாத ஜாலி பேர்வழிகள் இரண்டு பேரின் கதை இது. ஆரோஹணம், மெல்லிசை போன்ற அவர்களின் வாழ்வு, மெல்ல மெல்ல முன்னேறும் அவர்களின் பிணைப்பு எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

ஆரோஹணம் 1

“அப்பா எனக்கு பயமாருக்குப்பா அவனை நினைக்கவே!” கீர்த்தி முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்டுப்பார்த்தாள்

அப்பாவின் முகத்தில் உதடுகள் கோடாய் இறுகின.

“நீ என்னை ஏமாத்தலாம்னு பார்க்கறியா? ஐ ஆம் சோ டிசப்பாயிண்டன்ட் வித் யூ! உன் பொறுப்பில்லாத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்டாமல் நான் விடப்போவதில்லை!” அவர் பொங்கிக்கொண்டிருக்க

“நான் பொறுப்பில்லாதவள் இல்லைப்பா!” நுனிக்காலில் நிமிர்ந்து நின்றபடி அறிவித்தாள் அவள்!

“இப்போ அதுவா முக்கியம்? பிரஜினை பார்க்க இவள் போகிறாளா இல்லையா அதை மட்டும் கேளுங்கள்” முறைப்புடன் இடையிட்டு கணவருக்கு எடுத்து கொடுத்தார் ஷாலினி

நீ ரொம்ப நல்லா பண்றம்மா!!! தாயை கடைக்கண்ணால் பார்த்து பல்லைக்கடித்தவள் பிறகு மீண்டும் முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு தந்தையை பார்த்தாள்

அவர் அதையெல்லாம் கண்டுகொள்வதாக இல்லை “இப்போ பிரஜினை என் வேணாம்னு சொல்ற எனக்கு காரணம் சொல்! நான் விட்டு விடுகிறேன். எதையும் முயற்சி செய்யாமல் விட்டு விட்டு ஓடுவது தான் உன் குணம்..அதே குணத்தை இந்த விஷயத்தில் காட்டலாம் என்று நினைக்காதே!” அவர் கோபமாய் மீண்டும் விஷயத்துக்கு வந்தார்.

‘என்னடா இது இன்னிக்கு இவர் பிளாஸ்க்குக்குள் வச்ச வாட்டர் போல கூல் ஆகவே மாட்டேன்றாரே.’. என்று நொந்து போனவள் நேர்மையாக தந்தைக்கு பதில் சொல்ல முனைந்தாள்

“அவன் ஒரு மேல் சாவனிஸ்ட்பா. எல்லாமே அவன் நினைச்ச போல நடக்கணும்! எனக்கு அவனை பிடிக்கல்!!”

“எத்தனை நாள் அவன் கூட பழகிருக்க?” பாயிண்டை பிடித்துவிட்டார் ரகுராம்.

“ப்பா… ஒருத்தனை பத்தி தெரிய ஒரு நாள் போதும்பா” அவள் மெல்லிய குரலில் இழுக்க

“அதான் சொல்றேன்.. ஒருநாளாவது பேசிப்பார்த்தால் தானே தெரியும்! இன்னிக்கு நீ போற.. பேசிப்பார்த்துட்டு எனக்கு ஒரு முடிவைச் சொல்ற! தட்ஸ் பைனல்!” என்று பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார் அவர்

“அப்பா..என் விருப்பம்னு ஒண்ணு இருக்கில்லையாப்பா? என் கல்யாணத்துல எனக்கு டிசைட் பண்ண உரிமையில்லையா?” அவள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு ஏறக்குறைய கெஞ்சினாள்.

“உன் விருப்பத்தை இவ்வளவு நாளும் நான் பார்க்காமல் விட்டேனா? மேலே படிக்க இண்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்ன..சரின்னு ஒத்துக்கிட்டேன், வேலை தேடிப்போன இடத்துலயும் வொர்க் பண்ண பிடிக்கலைன்னு வேலைய விட்டுட்ட! அதுக்கும் நான் ஒண்ணுமே சொல்லல..நம்ம கம்பனிக்கு கூட்டிட்டு போனேன், அங்கேயாவது உனக்கு சரிப்பட்டு வருமா என்று பார்க்க, உனக்கு அங்கும் இருக்கப்பிடிக்கவில்லை, நான் போர்ஸ் பண்ணினேனா? இல்லையே.. உங்கம்மா திட்டினப்போ கூட உனக்கு டைம் இருக்கு, நீயா  உன் பாதையை கண்டுபிடிச்சுக்கட்டும்னு விட்டேன். ஆனா இன்னும் கூட நீ எதுவுமே பண்ணலை! அது தான் இந்த விஷயத்துல நான் ஸ்ட்ரிக்ட்டா இருக்கேன். நீ ஒண்ணும் இப்போ சம்மதம் சொல்ல வேணாம். போய்ப்பார்..பேசு..அதன் பிறகு முடிவெடு! ஆரம்பத்திலேயே அவசரப்படாதே” ரகுராம் ஒரு முடிவோடு தான் வந்திருப்பார் போல..

அப்பா.. அவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன..

“நான் பழைய பஞ்சாங்கம் கிடையாது கீர்த்தனா. எனக்குன்னு இவ்வளவு பெரிய பிசினஸ் இருந்தும் உங்க அண்ணா கிரிக்கட் அவன் பாஷன்னு வந்து நின்னப்போ அவனை விட்டுட்டேன். அவன் சாதிச்சப்போ என் பையன்னு பெருமையா சாக்கலேட் கொடுத்தேன். நீயும் எந்த துறைய தேர்ந்து எடுத்திருந்தாலும் நான் ஒகே சொல்லிருப்பேன்.. என்னால பொறுக்க முடியாத விஷயம் சோம்பேறித்தனம்!”

கீர்த்தனாவின் உதடுகளில் உதடுகளில் பற்கள் அழுத்தமாக  படிந்ததன. அவள் மட்டும் முயற்சி செய்யாமலா இருக்கிறாள்? சோம்பேறித்தனமாமே?

“ரொம்ப வருத்தமா இருக்கு கீர்த்தனா! உன் அம்மா எவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கிறாள்! அவளை விடு, உன் அண்ணியை பாரேன்.. அவள் பிறந்தது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில், ஆனால் இப்போது எப்படி கம்பனியில் என் வலக்கரமாய் மாறியிருக்கிறாள் தெரியுமா? இத்தனைக்கும் உன் அண்ணா கம்பனிப்பக்கமே வருவதில்லை. அவளாக முட்டி மோதிக்கற்றுக்கொண்டது தானே எல்லாம்? என் பெண் நீ இப்படி இருந்தால் எங்களுக்கு எவ்வளவு அசிங்கம்?” அப்பா பேசிக்கொண்டே போக

“அப்பா! என்னை யார் கூடவும் கம்பேர் பண்ணாதீங்க” என்று கடுப்பாக சொன்னாள் கீர்த்தி

“நீ தானே அப்படிச்செய்ய வைக்கிறாய்!!! கேட்டவுடன் எல்லாம் கொடுத்து, நீ நினைப்பதற்கெல்லாம் அனுமதித்து..நான் தான் உன்னை கெடுத்து விட்டேன்..இனியாவது நான் சொல்வதைக்கேள்! கல்யாணம் பண்ணிக்கொள். பிரஜின் கடுமையாக தான் தெரிவான், ஆனால் நல்லவன், கண்டிப்பானவன், ஹார்ட் வொர்க்கர்.. அப்படியொருவன் தான் உனக்கு தேவை!!” அவரின் குரல் தழைந்தது.

“எனக்கு பிடிக்கலையேப்பா?”

“கீர்த்து! நான் அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவன்.. எனக்கு ஒவ்வொரு ரூபாயும் என்உழைப்பில் வந்தது. சோம்பி இருந்து விட்டு நான் பெண் என்று காரணம் சொல்லக்கூடாது!  ஏதேனும் ஒரு வழியில் உன்னை உபயோகப்படுத்த முடியாவிட்டால் திருமணம் செய்து கொள். அப்படியாவது மாறுகிறாயா பார்க்கலாம்!”

திருமணமானால் மட்டும் நான் எப்படி உபயோகப்படுவேன்? பிள்ளை பெறும் மெஷினாகவா? வெடுக்கென கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் கேட்டு விட்டு அதனால் வரும் பின் விளைவுகளை சந்திக்க அவள் தயாரில்லை!

“பிரஜின் உன்னை மாற்றுவான் கீர்த்து! அவன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர், ஒரே மாதத்தில் நீ எப்படி மாறுகிறாய் பார்..எங்கள் சொல்லைக்கேள்..” இப்போது அவள் தலை தடவியது தந்தை இல்லை, அவளது அம்மா!

சடாரென்று கையைத்தட்டி விட்டாள் அவள்.. மாறணும் மாறணும் மாறணும்! ஏன் நான் மாறணும்? எப்போ பார் இதே பாட்டுத்தான்! ஏன் நீங்கள் மாற வேடியது தானே. அவன் என்னை மாற்றுவானாம்! கிழிப்பான்! மாற்றுவதற்கு அவனென்ன மோல்டா? இல்லை நான் தான் ஏதும் சாக்லேட்டா! ஆளும் அவன் மூஞ்சியும்!

அம்மா கடைக்கண்ணால் அப்பாவுக்கு சைகை செய்வதும் இருவரும் மெல்ல வாசல் பக்கம் போவதும் புரிய பல்லைக்கடித்தாள் அவள். இன்றைக்கு முடிவு அவள் பக்கம் இல்லை!

“கீர்த்து! ஈவினிங் 4 மணிக்கு பிரவீன் உன்னை வந்து கூட்டிட்டு போறதா சொல்லிருக்கான். ரெடி ஆகிடும்மா..எனக்காக இந்த ஒரே ஒரு வேலை செய்! பிறகு நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை!” கொஞ்சலாய் சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கதவை சாத்திக்கொண்டு மறைய செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்

ஒரே ஒரு தடவை சந்தித்து பேசினால் அவன் என் மனதை மாற்றி விடுவான் என்று அவ்வளவு நம்பிக்கையா? சந்தித்து தொலைக்கிறேன். ஆனால் அதனால் வரும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!

இவர்கள் சொல்வது போல தனக்கு என்ன பிரச்சனை என்றே அவளுக்குப் புரியவில்லை. மற்றவர்களுக்கு எப்படியோ, அவளுக்கு  அவளது குட்டி உலகம் வண்ணமயமானது, அழகானது மகிழ்ச்சி நிரம்பியது. நாளை அங்கே பெரிதாக மதிக்கப்படாது. இன்று தான் கொண்டாடப்படும். அதில் தவறென்ன இருக்கிறது? ஆண்டவா,,எனக்கு இருபத்து மூன்றே வயது தான் ஆகிறது! நான் யார் என்ன செய்யப்போகிறேன் என்று கண்டுபிடித்துக்கொள்ள எனக்கு நிறைய காலம் இருக்கிறது! இவர்கள் ஏன் அவளை என்னமோ நாளையே அழுகிவிடப்போகும் தக்காளி போல எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு புரியவில்லை. தொடர்ச்சியாய் நிலையான வருமானமாய் இல்லாவிட்டாலும், அவளுக்கு வேண்டியதை அவள் சம்பாதிக்கிறாளே..

அவள் வீட்டில் அவள் ஒரு முரண் தான்.. எல்லோருமே எதோ ஒரு விதத்தில் சாதித்துக்கொண்டிருப்பவர்கள், இப்போது தான் வந்து இணைந்து கொண்ட அண்ணி உள்பட! கீர்த்தி மட்டும் கௌரவம் பாராது தனக்கு பிடித்ததை செய்து கொண்டு சுற்றிக்கொண்டிருப்பவள். தோற்றத்திலும் எல்லோருமே உயரமாய் இருப்பார்கள் என்றால் இவள் மட்டும் வீட்டில் ஐந்தடியை தத்தி தத்தி தொட்டிருப்பாள்!

அதை விடு, இந்த பிரஜின், என்ன தான் நினைத்துக்கொண்டிருக்கிறான்?  ஒரே ஒரு தடவை அவனைப்பார்த்தாள் அவள். ஆறடிக்கு குறைய மாட்டான். அதை விட அவன் அமர்ந்திருந்த அந்த இடம் உருவாக்கிய அலைகளால் அவளால் அங்கே சுவாதீனமாக இருக்க முடியவில்லை. எப்போதடா இந்த இடத்தை விட்டு ஓடுவோம் என்பதைப்போல ஒரு மூச்சடைப்பு! ஒரு அரைமணி நேரம் அதிகபட்சம் அங்கே இருந்திருக்க மாட்டாள். எழுந்து ஓடிவிட்டாள். அந்த அரை மணி நேரம் பார்த்ததை வைத்துக்கொண்டு ஒருவன் தன்னை அவன் மனைவி என்று முடிவு செய்வானாயின் அவள் வரையில் அவனை மறுக்க பிரதான காரணமே அது தான். பார்த்ததும் வாங்க அவளென்ன ஏதேனும் பொம்மையா?

இதெல்லாம் வீட்டில் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்! அவர்களை பொறுத்தவரை அவன் கண்டிப்பானவன், கடும் உழைப்பாளி, திறமையானவன், போதாக்குறைக்கு அவளை அவனாக விரும்பிக்க்கேட்டிருப்பவன், அவளைத் ‘திருத்த’ சரியான ஆள். கர்ர்ர்ர்..

நான்கு மணிக்கு இன்னும் ஒரு மணி நேரமே இருந்ததால் அவசரமாக குளித்து விட்டு வந்தவள் கப்போர்ட்டைக்குடைந்தாள். எல்லா விதத்திலும் நிமிர்வாக தெரிய வேண்டும்! சின்னவள் போலெல்லாம் அவன் முன்னே போய் நிற்கக்கூடாது.

வெள்ளை நிறத்தில் டாப் போல இருந்த ட்ரஸ் அவள் கண்ணில் பட அதை கையில் எடுத்தாள். அதில் அவள் ஸ்மார்ட்டாக இருப்பதாக அண்ணி சொல்லியிருக்கிறாள். அதை அணிந்து கொண்டு தலைமுடியை லூசாக விட்டு விட்டு முகத்தில் லேசாக மேக்கப், பிரிண்டட் சாண்டல்ஸ் …

இப்போது எப்படியிருக்கிறோம்?

கண்ணாடி நன்றாக இருப்பதாக சொல்லியது. ஆனால் இன்னும் அவள் எதிர்பாத்த மாச்சூர்ட் தோற்றம் வந்ததாக தெரியவில்லை! ரேபான் மூலம் கண்களை மறைத்தவள் இப்போது பரவாயில்லை என தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்தாள்.

பிரஜின், தப்பாக எடுத்துக்க வேணாம், எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை. உங்களை பிடிக்காததனால இல்லை,,ஆனா எனக்கு..

ஷிட்!!! நீ இப்படி அவனுக்கு ஜஸ்டிபை பண்ண வேண்டியதில்லை கீர்த்தி!

ஒகே…இப்படி சொல்லலாமா? பிரஜின், தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ள முடியாது.

கதவை தட்டும் சத்தமும் கதவு திறக்கும் சத்தமும் கேட்க நிமிர்ந்தவள் அண்ணி லயா உள்ளே வருவதை பார்த்து முறைப்பாக சிரித்தாள்

யூ லுக் லவ்லி கிர்த்தி!!! என்று அவளை லேசாக அணைத்து அவளை தாஜா செய்ய முனைந்த லயா, “ஹேய் உனக்கு பிரஜினை ரொம்ப பிடிக்கும், நீ அவர் பேசினத பார்க்கணுமே..சோ ரொமாண்டிக், பொசசிவ்! நான் அப்படியே மெல்ட் ஆயிட்டேன்.. என்று விட்டு “ஹையோ நான் ஒரு லூசு பிரஜின் வெளியே வெயிட் பண்றார் ஓடு ஓடு ஆல் த பெஸ்ட்” என அவள் வயிற்றில் புளியை கரைத்து அனுப்பி வைத்தாள்

அச்சோ.. லேசாக உதறுதோ நமக்கு?

கீர்த்தி!!! மகிழ்மதியின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எவனும் களையப்பட வேண்டும்!! தைரியமாகு கீர்த்தி!!!!!!

பை கண்ணம்மா.. ஷாலினியின் குரல் மட்டும் தான் கெட்டது. அவ்வளவு பயம் கீர்த்தியை பார்க்க!

‘இனிமேல் பெண்ணியம் பேசிக்கொண்டு அம்மாவும் சரி அண்ணியும் சரி வரட்டும் அப்போது இருக்கு அவர்களுக்கு’ பல்லைக்கடித்துக்கொண்டு போர்ட்டிகோவில் இறங்கி கறுப்பு நிற காரை நோக்கி நடந்தாள்

அந்த ஆறடி சதைக்குவியல் கோர்ட் சூட்டில் லேசான சிரிப்போடு அவளுக்காக எழுந்து வந்து கார்க்கதவை திறந்து விட்டது.

அடேய் இதெல்லாம் ஓவர் டா..

லேசாக நடுங்கத்தொடங்கிய விரல்களை கைகளை அழுத்தி அமர்த்தி விட்டவள் பெல்ட்டை மாட்டினாள். வெளியே விரையும் வாகனங்கள் மட்டும் ஓடும் மரங்களாய் தெரிய போகும் பாதையில் அவள் கவனம் கொஞ்சமும் இல்லை.

அந்த ரோட்டில் இருக்கும் பெரிய ஹோட்டல் ரிவேரா மட்டும் தான். லேனையே அடைத்து அந்த ஹோட்டல் தானே இருக்கும்! இங்கே போகப்போகிறோம். உனக்கு ஓகேவா என்று கேட்கக்கூட தோன்றவில்லை. இவனையெல்லாம்….

காரை நிறுத்திவிட்டு அவன் வந்து கதவை திறந்து காமெடி பண்ண முன் அவளே இறங்கி வெளியே வந்து உடையை சரி செய்ய சட்டென்று கைப்பற்றி உள்ளே நடந்தான் பிரஜின்..

கையெல்லாம் நெருப்புப்பற்றிக்கொண்ட உணர்வில் கோபமும் சேர தடுமாறி அவன் பின்னே இழுபட்டாள் அவள்,

நீ இப்போது தான் தைரியமாக இருக்கவேண்டும்.. ரிலாக்ஸ் கீர்த்தி

கையை முறுக்கி, குலுக்கி என்ன செய்தாலும், அவன் முகத்தில் எந்த மாறுதலோ அசைவில் மாற்றமோ இல்லை..அவன் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தான்.

‘அடேய் எருமை மாட்டு ஹைப்ரிட்! என்னை விடுடா!!!’ என்று மனதுக்குள் அலறியபடி கையை விடுவிக்கும் முயற்சியில் இருந்தவள் ஹோட்டலுக்குள்ளே உள்ளே நுழைந்ததும் அவளும் கையை பிடுங்கும் முயற்சியை விட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அவனைத்தொடர்ந்தாள் அவள்.

புக் செய்திருக்க வேண்டும். அவனைக்கண்டதுமே பணியாள் அவர்களின் தனியான பிரைவட் பிரிவுக்கு அழைத்து சென்றான். அவர்களும் குடும்ப டின்னர் என்றால் இந்தப்பகுதிக்குத்தான் வருவது வழக்கம்.

அவள் வலப்பக்க மூலையில் அமர்ந்து கொள்ள எதிர்ப்பக்கம் சென்று அமராமல் அவளின் அருகில் இருக்கும் சீட்டிலேயே அவனும் அமர்ந்து கொள்ள அவளுக்கு இதயம் ஆக்சிலரேட்ட ஆரம்பித்தது.. மூச்சடைப்பு.. மறுபடியும்.. இப்போது கூடவே ஒரு அருவருப்பு!

“இனிமேல் இப்படித்தான் கீர்த்தி” அவனின் இறுகிய முகம் மெல்லச்சிரித்தது.

அந்த வாயிலேயே ஒன்று வைக்க தோன்றியதை மறைக்க தலையை குனிந்து கொண்டாள் அவள்.

“யூ நோ, நான் இதே வெள்ளை ட்ரஸில் இங்கே தான் உன்னை முதன் முதலில் பார்த்தேன், பார்த்ததுமே நீ தான் என் மனைவி என்று முடிவு செய்து விட்டேன். இன்றைக்கு உன்னை இங்கே அழைத்து வந்தது அதனால் தான், ஆனால் நீ இந்த டிரஸ்ஸில் வருவாய் என்று நான் நினைக்கவே இல்லை!”

அந்த வெள்ளை உடையை அணிந்ததற்காக மானசீகமாக தலையை சுவற்றில் முட்டினாள் அவள். கர்மா இஸ் எ @#$

அவன் தொடர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.. அவளுக்கு கவனம் செல்ல வில்லை. அவள் தான் அண்ணனையும் அண்ணியையும் மனத்தில் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தாளே..

காதல் சொல்லிக்கொள்ள முன்னரே, ஐந்து வருடம் ஒன்றாக சுற்றித்திரிந்து பழகிப் புரிந்தவர்கள் அவர்கள்! அண்ணியை விடு, அவளுக்கு அப்பா சொல்வது வேதவாக்கு. அண்ணா ராஸ்கல்..ஏண்டா ஏன்?

அவன் கைவிரல் அவளின் கைவிரல் மேல் படிய அதிர்ந்து நிமிர்ந்தவள் கையை உருவிக்கொள்ள  முயல பிடி இறுகியது கூடவே முகமும்.

“முரண்டு பிடிப்பது எனக்கு பிடிக்காது என்பதை முதலில் நீ ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் கீர்த்தி!”

உனக்கு பிடிக்காதுன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும். அவள் உள்ளே நினைத்துக்கொண்டாளே தவிர வெளியே சொல்வதற்கு அவள் என்ன முட்டாளா?

இவன் வாயில் இருந்து அவள் பெயர் வரும்போதெல்லாம் ஏன் வேம்பைக்கரைத்து வாயில் ஊற்றுவதைப்போலிருக்கிறது? அவன் கையை உணராதிருக்க பெருமுயற்சி செய்தாள் அவள்..

உன்னைப்பார்த்தால் முயற்குட்டி தான் ஞாபகம் வரும். தெரியுமா? அவன் குரல் கிசிகிசுப்பாய் மாறியது. ஒரு வித அருவருப்பாய் உணர அவளையறியாமல் சுவரோரம் நகர்ந்தாள் அவள்

முயற்குட்டியே தான் என்று அவன் மெல்ல சிரித்தான்!

அவன் பேச்சு கிசுகிசுப்பாய்தொடர்ந்தது..

அவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது. அவன் எதிர்பார்க்கும் பெண் ஒரு மென்மையான முயல் தான், அவன் ரெடி சொல்லும் போதெல்லாம் பாய வேண்டும். அவன் நிமிரச்சொல்லும் போது நிமிர வேண்டும் அவ்வளவே தான்!

‘நான் வேண்டுமானால் சைசில் முயல் போலிருக்கலாம்.. அதற்காக??? என் முதுகெலும்பு இரும்புடா!’ அவள் கோபமாய் அவனை ஏறிட்டுப்பார்த்தாள்

“மிஸ்டர் பிரஜின்?”

மிஸ்டர் என்ற அழைப்பில் கண்களில் கொஞ்சம் கோபம் ஏறியிருக்க அவளை ஏறிட்டான் அவன்.

அவள் கொஞ்சம் கூட அவன் முகபாவத்தால் பாதிக்கப்பட்டவள் போல காண்பிக்கவில்லை.

“வந்து மிஸ்டர் பிரஜின்,,,நீங்கள் ஏன் அப்பாவிடம் பேசினீர்களோ எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு இந்தக்கல்யாணத்துல கொஞ்சமும் இஷ்டமில்லை, அதை நேராக உங்களிடமே சொல்லி விட வேண்டும் என்று தான் வந்தேன். நான் வேறேதும் தப்பான எண்ணத்தை உங்களுக்கு கொடுத்திருந்தால் சாரி” என்று அவசரமாய் சொன்னவள் “இப்போது வழியை விட்டீர்களானால் நான் கிளம்பி விடுவேன்” என்று அவன் முகத்தையே பார்த்தாள்.

சில செக்கன்கள் அவள் முகத்தையே உணர்ச்சிகளை காண்பிக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன் பிறகு பட்டென்று சிரித்தான். “முயல் குட்டிக்குள் கொஞ்சம் கோபமும் இருக்கும் போலவே.. ஹா ஹா “

அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சட்டென்று சிரித்த முகம் மாறியது.. “சாரி கீர்த்தி, நாங்கள் பேசி முடிவு செய்தாயிற்று. இனி முடிவை மாற்றுவது என்பது முடியாது. உனக்கு என்னை ஏற்றுக்கொள்வது தான் ஒரே வழி, ஏதேனும் தவறு நடந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்!!!” விழிகள் அவளையே உற்றுப்பார்த்தன. அவன் சொன்ன அர்த்தம் அவளுக்குள் இறங்கியிருகிறதா என்று பார்ப்பதைப்போல..

அவளும் விடுவேனா பார் என்று அவன் கண்களையே சவால் பார்வை பார்த்தாள்

முகம் மாறாமல் பாக்கட்டுக்குள் கைவிட்டு அவன் ஒரு சின்னப்பெட்டியை எடுக்க கீர்த்தியின் மனது அதிர்ந்தது போனது. என்னது எனக்கு ரிங் போடப்போகிறானா என்ன? சீரியஸ்லி? இது நிஜமா என்று தன்னையே கிள்ளிப்பார்க்க வேண்டும் போல அவளுக்கு தலை சுற்றிப்போனது! சத்தியமாக இதை எதிர்க்கும் அளவுக்கு போகக்கூட அவளுக்கு பிடிக்க வில்லை.

சட்டென்று சிந்தித்தவள் எதிரே வந்து கொண்டிருந்த வெயிட்டரை அழைத்து “வாஷ் ரூம் எங்கிருக்கிறது என்று காட்ட முடியுமா?” என்று கேட்டாள் தெரியாதவள் போல.

அவனும் சம்மதித்துஅவள் எழுந்து வர காத்திருப்பவன் போல ஒரு நிமிடம் அவர்கள் டேபிளருகே தயங்கினான்.

வேறுவழியில்லாமல் அவளுக்கு பிரஜின் வழி விட கண நேரத்தில் கைப்பையை எடுத்துக்கொண்டு அதிர்ந்து நின்ற பணியாளைப்பொருட்படுத்தாமல் வெளியே ஓடினாள் கீர்த்தி.

உருப்படாத பெண், உருப்படாதவள் தான் என இன்னுமொருதடவை எல்லோரும் உறுதிப்படுத்திக்கொள்ளட்டும். இவனை பொறுத்துக்கொள்ள என்னால் முடியாது! என்னமோ ஆர்டர் வேறு செய்திருந்தான். குறைந்த பட்சம் சிறு விளக்கம் கொடுக்காமல் அவனால் உடனடியாக அவளைத்தொடர முடியாது. அதற்குள் இங்கிருந்து பறந்து விடவேண்டும்..ஓடி வந்து தெருவில் இறங்கினாள் அவள்

அவ்வவ்…பறக்கத்தான் வேண்டும்!!! ப்ரைவேட் ரோடில் ஹோட்டலுக்கு வருபவர்கள் தவிர வெளி வாகனங்களுக்கு இடமில்லை. நடந்து மெயின் ரோடுக்கு போக முன்னர் அவன் வந்து பிடித்துக்கொள்வான்..தெருவில் தேவையில்லாத சீன் ஆகும்!

அவளது அதிர்ஷ்டமோ துரதிஷடமோ, ஒருவன் பின் சீட்டில் இருந்து இருந்து குதித்து ஓடிவிட்ட நாயை உள்ளே ஏற்றுவதற்காக திறந்த கதவை அப்படியே விட்டுவிட்டு சற்று தூரத்தில் நாயை பிடித்து இழுத்து வர முயன்று கொண்டிருந்தான். சட்டென உள்ளே ஏறி சீட்டின் அடியில் தன்னை ஒளித்துக்கொள்ள முயன்றாள் அவள். என்னதான் சின்னவளாய் இருந்தாலும் முடியுமா என்ன?

“சாவடிச்சிருவேன் உன்னை!” லேசாக உறுமியபடி அந்த நாயை அலேக்காக தூக்கிக்கொண்டு வந்தவனோ அனிச்சையாக அவள் பக்க கதவை அடித்து சாத்திவிட்டு முன்பக்க கதவைத்திறந்து தன் அருகில் அந்த நாயைவிட்டு கதவை சாத்தி விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.

கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

‘டேய் போயேண்டா..நீ வேற ஏண்டா படுத்தற!!! ஒரு வேளை நம்மைப்பார்க்கிறானோ?’ நிமிர்ந்து பார்த்து உறுதிப்படுத்த தெம்பில்லாமல் ஒடுங்கி அமர்ந்திருந்தாள் அவள்..

கார் நகர்ந்தது புரிந்தது.. மெல்ல தலை தூக்கிப்பார்த்தவள் விக்கித்துப்போனாள்

முன் சீட்டில் இருந்து அவள் ஒளிந்திருந்த இடத்துக்கு அந்த ஜேர்மன் ஷெப்பர்ட் ஏறக்குறைய தலை கீழாக  உடலை வளைத்து உடலையும்  நாக்கையும்  தொங்க விட்ட படி அவளையே சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தது!

பயத்தில் தொண்டை உலர வீல் என்று அலறியபடி எழுந்து பின் சீட்டில் ஏறி ஒடுங்கினாள் கீர்த்தி!

அந்த நாய்க்கு வேட்டை என்றால் மிகவும் பிடிக்கும் போலும், ஒரு மீனின் லாவகத்துடன் முன் சீட்டில் இருந்து பின் சீட்டுக்கு பாய்ந்து சீட்டில் மூலையாக ஒடுங்கிக்கொண்டு அலறியவளின் மேல் இரையொன்றை அமுக்கிப்பிடிப்பது போல தன் ஒரு காலை அழுத்தமாக வைத்துக்கொண்டு தன எஜமானனைப்பார்த்தது!

குட் ஜாப் ஜானி! டோன்ட் லெட் ஹர் எஸ்கேப்” என்றான் அந்த எஜமானன் பதிலுக்கு!!!!

“ப்ளீஸ் அதை என்னை விட சொல்லு!!!!!” என்று அலறியவளின் குரல் அவன் காதில் கேட்டால் தானே..

வருவாள்

 

 

 

Advertisements

23 thoughts on “மீண்டும் நானே…

 1. ஹே..ஹே வாங்கோ வாங்கோ

  எப்போதும் போல கதை மிகவும் அருமையாக அமைய அன்பு வாழ்த்துகள்!

  கதை முடிந்ததும் தான் வாசிக்கக்கிடைக்கும் என்று நினைக்கிறன்.

  நீங்க கலக்குங்கோ !

  முக்கிய குறிப்பு: நான் பொய் வயது போட்டேனே ஹா..ஹா…

  Liked by 1 person

 2. Welcome welcome. I was eagerly waiting like my daughter who starts the countdown for her next birthday from this year itself with so much enthusiasm😁. As usual will read when you complete. Btw participated in the survey though I would read whatever you write with equal and the same passion. All the very best.

  Liked by 1 person

 3. Welcome back chellam,padips ellam mudinchatha?remba miss panninen po.story ku varuvom super a irunthathu beginning Ud Ye.heroine kalakal,villain um hero vum kooda ithu laye entry ,ha ha keerthi namalu pa Mr.Dogy a parthu pamurathula!mahilmathi kingdom ha ha una adichukave mudiyathu ushu.please regular uds podunga thangam.namma aravayum,arjunasir um regular intervals la kudutheengala good girla athemathiriipovum,okva?

  Liked by 1 person

  1. Hey sissy..missed u too!!! I’ll try my best to do that… ha ha herovum heroine um nu sollunga villain kidaiyathu avan.. keerthikulaam villain vacha budget idikum.. andha role aiyum avale play pannippa :v

   Liked by 1 person

  1. Thangachi.. en veetlaye vandhu en address venumnu kekkiriyemma hahhahaha …Book links laam eduthutten due to publication requirements. Konjam wait pannunga Ill open the links again.. or try to get them in Pustaka or Amazon sites. Thanks

   Liked by 1 person

 4. Welcome Usha 💐💐 story superb ma unga favourite dialogue and dog romba miss seithen ….” erumai maadu hybrid” a 😂😂enga irunthu ma intha vaarthaigalai kandupidikureenga … Adutha ud seekiram kodukanum

  Liked by 1 person

 5. Hi ❤
  GOOD LUCK and love you alwayssss
  Exm iruku… Aug mudinja udana vasikuratha thavira enaku vera vela irukathu…. aanalum strting knjm vasichutene….. 🙈
  Usha akka epavum sooooooper thane … itha thaniyavum solanuma????
  Love youuuuu epavummmmm
  ❤❤❤❤❤❤

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s