ஆரோகணம் 2

“ஏய்..உனக்கு வெக்கமாயில்லை? என் காரில் ஏறி ஒளித்துக்கொள்ளும் அளவுக்கு தைரியமா? சொல் எந்த மீடியா நீ?”

ஆரோன் அதட்டிக்கேட்டான் அந்தப்பெண்ணை!

“சார், சத்தியமா நான் எந்த மீடியாவும் இல்லை” அவள் திணறினாள்

உதட்டைச் சுழித்தான் அவன் “அப்போ ஏதேனும் சைக்கோ fan ஆ நீ?”

“சத்தியமா நான் உங்க fan இல்லை!!” அவசரமாய் சொல்லிவிட்டு அப்போது தான் சொன்னதன் பொருள் உணர்ந்தவளைப்போல உதட்டை கடித்தவளை முறைத்தான் அவன்.

“என் fan இல்ல..ஹ்ம்ம்.. அப்போ பார்த்ததுமே என் பேர் எல்லாம் முழுசா சொல்ற?” என்று அவன் கிண்டலாய் இழுக்க..

“உங்களை தெரிஞ்சு வச்சிருந்தது பொது அறிவுக்கு சார். தப்பா நினைக்க கூடாது..நான் புட் பால் பார்க்காததால உங்க fan ஆ ஆக முடியலை! ஏறும் போது எனக்கு இது உங்க கார் என்றும் தெரியாதுஅவ்வளவு தான்..” அவள் கொடுத்த தன்னிலை விளக்கம் சிரிப்பை வர வைத்தாலும் முறைத்த படியே முகத்தை வைத்துக்கொண்டான் அவன்

“என் காருலேயே ஏறி உக்காந்துகிட்டு என் கிட்டயே திமிரா வேற பேசறியா?அப்போ நீ யாரு? எதை திருட வந்த? மரியாதையா சொல்லிரு.. இல்ல..போலீஸ் ஸ்டேஷன் இன்னும் கொஞ்சம் தூரத்துல தான் இருக்கு..தெரியும்ல?”என்று அவன் மிரட்டலாய் இழுக்க

“ப்ளீஸ் நான் ஒண்ணும் திருடி கிடையாது. கார் ஹோட்டலை விட்டு மூவ் ஆனதும் உங்ககிட்ட லிப்ட் கேட்டு கொஞ்சதூரத்துல இறங்கிக்கலாம்னு தான் இருந்தேன்..எனக்கு தப்பான எண்ணம் ஏதும் கிடையாது!” என்று ஏறக்குறைய கெஞ்சினாள் அந்தப்பெண்

அவளின்  கெஞ்சலுக்கு கொஞ்சம் கூட முகம் இளகாமல் சீரியஸாக அவள் காரின் பின் சீட்டின் மூலையாக ஒடுங்கியிருந்ததை சரமாரியாக காமராவில் கிளிக்கிக்கொண்டான் ஆரோன்.

“எதுக்கு போட்டோ எடுக்கிறீங்க?” அவளின் குரல் நலிந்து வந்தது

நீ திருடின்னு போலீஸ் ஸ்டேஷன்ல காமிக்க எனக்கு எவிடன்ஸ் வேணாமா? கோபமாக சொல்லியபடி கண்ணாடி வழியாக அவளை எடை போட்டான் ஆரோன்!

Damn! இவ்வளவு குட்டியாக ஒரு பெண்ணா? அவள் உடலை விட முகமும், கண்ணும் அதன் பாவனையும் தான் அவளை மிகவும் சிறியவளாக காட்டின..

“தயவு செஞ்சி நம்புங்க நான் திருட வரலை!! என்னை இங்கேயே இறக்கி விட்டுடுங்களேன்..” கார்க்கதவோரம் ஒண்டிக்கொண்டவளை மீண்டும் கண்ணாடி வழியாய் பார்த்தான் ஆரோன். இந்த பெண்ணை அவன் ஹோட்டலிலேயே கவனித்துத்தான் இருந்தான். இவள் ஒடுங்கிப்போய் மூலையில் அமர்ந்திருந்ததை அவன் மட்டுமா அங்கிருந்த எல்லாருமே கவனித்திருப்பார்கள். ஆனால் அவள் இப்படி அவனுடைய காரிலேயே வந்து மாட்டியது தான் அவனுக்கு புன்னகையை வர வைத்தது.

“நிஜமாத்தான்…எனக்கு பிடிக்காத ஒரு ஆள்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வர பார்த்தேன்..வேற ஒண்ணுமேயில்லை. என்னை நம்புங்க போலீசுக்கேல்லாம் போக வேணாமே? என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தவள் பிறகு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி  “உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?” என்று கேட்க கண்ணாடி வழியாக பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது. கூடவே மனதில் மின்னலாய் ஒரு ஐடியா

ஹ! அவனிடமே பேரமா? அவ்வளவு நேரமும் சும்மா மிரட்டி விட்டு அவளை வீட்டில் விட்டுப் போகலாம் என்று தான் எண்ணியிருந்தான் இப்போது  ஏன் இவளிடம் பதிலுக்கு பதில் கேட்டாலென்ன என்று எண்ணம் தோன்றி விட்டது!

“முடியாது! உன்கிட்ட பணம் வாங்கிட்டு விட்டுரவா இவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்துனேன்?” வில்லன் குரலில் கேட்டுவிட்டு இமைகளை கேலியாய் ஏற்றி இறக்கினான் அவன்..

அவள் முகம் வெளுத்து விட்டது “நீங்க..நீ…நீ என்னை  ப்ளான் பண்ணி கடத்திட்டு வரலையே ..” அவள் திக்கினாள்

“என்ன காமடி பண்றியா?  உன்னையெல்லாம் அப்படியே போறபோக்குல மார்க்கட் பைக்குள் மடித்து வைத்துக்கொண்டு போய் விடலாம்.. எதுக்கு வேஸ்ட்டா ப்ளான்லாம் பண்ணிக்கிட்டு!!!” அவன் கிண்டலாய் சிரிக்க முகத்தில் ரோசச்சிவப்பை ஏற்றிக்கொண்டு விறைப்பாய் நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்..

“என்னம்மா திடீர்னு அமைதியாயிட்ட..” அவனோ விடுவதாக இல்லை

“என்னை பேசாமல் இறக்கி விட்டுரலாம்ல..ஏன் இப்படி டாச்சர் பண்றீங்க? உங்களுக்கு என்ன தான் வேணும்?” அவள் சோகமாய் கேள்வி கேட்க

“நீ தான்” என்று ராகமாய் இழுத்தான் ஆரோன்

ஆஆஆஆ…அவள் விழிகள் தெறிக்க அதிர்ச்சியாய் பார்த்தாள்

“அடச்சீ அடங்கு!!! இங்க பார் நான் உன்னை ஒரு உதவி செய்து காப்பாத்தினேன், பதிலுக்கு நீ என்னை ஒரு உதவி செய்து காப்பாத்தணும், அவ்வளவு தான்” என்று பொறுமையாக விளக்கினான் அவன்

“எ…என்ன பண்ணணும்?”  சந்தேகமாய் கேட்டாள் அவள்

“உன் பேரென்ன? முதல்ல அதை சொல்லு!”

“கீர்த்தனா!”

“ஐயையா… ஆளை விட பெரிய பேரா வச்சிருக்காங்க.. அதை விடு.. இன்னும் அரை மணி நேரத்தில் நான் தாஜுக்கு ஒரு பாமிலி பார்ட்டிக்கு போறேன்.. அங்கே என் கேர்ல் பிரண்டா ஒரு மணி நேரம் நடிச்சேன்னா போதும்! “

“வாட்? அப்படியெல்லாம் என்னால நடிக்க முடியாது! உங்க பேர் மட்டும் தான் எனக்கு தெரியும்!” அவள் உடனடியாக மறுத்தாள்

“ஓ!! ஒண்ணு பண்ணலாமா? போற வழில ஒரு ஜோசியர் இருப்பார், அப்படியே என் ஜாதகத்தையே எழுதி வாங்கித்தாரேன்..அதுக்கப்புறம் நடிக்கிறியா?”

“கிண்டலா.. நான்..நான்..” அவளுக்கு பேச வரவில்லை

“என்ன ரெக்கார்டு நின்னுருச்சா?”

அவனது கிண்டலை கவனிக்காதவளாய் “அது எப்படி முடியும்? யாரேனும் பார்த்தால் நடிப்பென்று எப்படி புரியவைப்பது? என்று அவள் இன்னும் தயங்கினாள்

அவள் கண்கள் லேசாய் இளகின. ஆனால் அவனுக்கு உண்மையிலே உதவி தேவைப்பட்டதே.

“உனக்கு ஹெல்ப் பண்ண மனசில்லை தானே! தேவையில்லாம எதுக்கு இங்க பேசிட்டிருக்க, இறங்கு இறங்கு உன்னை போலீஸ்ல ஹான்ட் ஓவர் பண்ணிட்டு நான் கிளம்பணும்..” சரக்கென்று காரை நிறுத்தி தான் இறங்கிக்கொண்டு அவள் பக்க கதவைத்திறந்து பொறுமையில்லாதவன் போல அவளிடம் எரிந்து விழுந்தான் அவன்..

“ப்ளீஸ்.. வெளிய தெரிஞ்சா என் மானமே போயிரும்..புரிஞ்சுக்கங்களேன்..” அவள் வெளியே இறங்காமல் உள்ளிருந்த படியே அவன் முகம் பார்த்துக் கேட்டான்

“நீங்க அப்படின்னா என் லவரா நடிங்களேன்” அன்று கிண்டலாய் இழுத்தான் அவனும் அவளுடைய மாடுலேஷனில்!

…………..

“இங்க பார்..நீ அந்த ஆளுகிட்ட சிக்கின போல நானும் ஒருத்தி கிட்ட சிக்கிட்டிருக்கேன். மினிஸ்டர் பொண்ணாம், எப்படி அவாய்ட் பண்றதுன்னே தெரியல.. அவளா வந்து ஒட்டிக்குறா, என் வீட்டுக்காரங்க சப்போர்ட் பண்றாங்க! இன்னிக்கு உன்னை என் கேர்ல் பிரண்டுன்னு இன்றடியூஸ் பண்ணி வச்சிட்டேன்னா அதுக்கப்புறம் அப்பா அந்த பேச்சை எடுக்க விடமாட்டார்! உனக்கு நான் உதவி பண்ணிருக்கேன்ல, எனக்கு நீ உதவி பண்ண மாட்டியா? “ பொறுமையாய் எடுத்துச்சொல்லி கேட்டான் அவன்

அவள் யோசிப்பது போலிருந்தது…

“அப்படியே வேறு யாரும் பார்த்தாலும் கூட உனக்கு பிடிக்காதவனிடம் இருந்து எஸ் ஆக இது ஸ்ட்ராங் காரணமாகாதா?” மெல்ல பிட் போட்டான் அவன்

“ஆகும் தான்… ஆனா நமக்கு எப்படி செட்டாகும்?”

“அதெல்லாம் செட்டாகும்..கொஞ்சம் வாய் அதிகம்னாலும் நீ சாப்டா, பெமினைன்னா இருக்க.. அப்பாக்கு சட்டுன்னு பிடிச்சிரும்… எனக்கு இதுக்கு மேல ஒருத்திய கண்டு பிடிக்க டைம் இல்ல..அது தான் உன்னை கேட்கிறேன்.” அவன் உண்மையையே சொன்னான்.

கொஞ்ச நேரம் யோசித்தவள் பிறகு…”சரி..நடிக்கிறேன்” என்று ஒத்துக்கொண்டாள்.

“தாங்க்ஸ்..சரி பரஸ்பரம் அறிமுகம் பண்ணிக்கலாமா? அங்கே யாராவது கேட்டால் முழிக்கக்கூடாதுல்ல..” சொல்லி விட்டு அவனே ஆரம்பித்தான். “ நான் ஆரோன் டானியல். நாஷனல் புட் பால் டீம் ப்ளேயர். இபோதைக்கு வேறேதும் என் கவனத்தில் இல்லை. அப்பா பிசினஸ் பண்றார்.அம்மா இல்லை. பெரியப்பா பொலிட்டிசியன். அவங்களை பொறுத்தவரை நான் பொறுப்பில்லாதவன்…”

அவள் முகத்தில் கோடாய் ஒரு சிரிப்பு முளைப்பதை கவனித்தவன் “ புட் பாலை அவங்க காரியரா கன்சிடர் பண்ண மாட்டாங்க” என்று தோளைக்குலுக்கினான்.

ஓ…

“என்ன ஓ..உன்னை பற்றி சொல்!”

“கீர்த்தனா ரகுராம், அப்பா பிசினஸ், அண்ணா கிரிக்கெட்ல  பீ டீம்ல செலெக்ட் ஆயிருக்கார் இந்த வருஷம். அம்மாவும் அண்ணியும் பிசினஸ் ல தான் இருக்காங்க.. நான் டிசைனிங், ஹோம் டெக்கர் னு பண்ணிட்டிருக்கேன்..”

ஹ்ம்ம்..தாங்க்ஸ் ஒத்துக்கிட்டதுக்கு! மனதார நன்றி சொன்னான் அவன்

ஒரு கண்டிஷன்..நான் நடிக்கிறேன்..ஆனா ஒரு தடவை மட்டும் தான். அதுவும் அரை மணி நேரம் தான் இருப்பேன் என்றாள் அவள் உறுதியாக

அரை மணி நேரத்தில் பார்ட்டியை முடிப்பது  எப்படி என்று ஆரம்பித்தவன்

அது உங்க பிரச்சனை ..அவள் தோளைக்குலுக்க

ரொம்ப பண்ற எறும்பே!!! என்று சலித்துக்கொண்டான் ஆனால் அதற்கு மேல் அவளுடன் வாதாடவில்லை. வண்டியை வேகம் கூட்டினான்

சிறிது நேரம் மௌனமாக அவனருகில் மீண்டும் சாதுவாக அமர்ந்திருந்த ஜானியில் பார்வையை பதித்துக்கொண்டு வந்தவள் “நம்மை லவர்ஸ்னு யாருமே நம்பமாட்டாங்க” என்றாள் தலையை அப்படியும் இப்படியும் அசைத்தபடி..

ஏனோ?

ரெண்டு போரையும் ஒண்ணா வச்சு பார்த்தா சம்ம காமடியா இருக்கும்..சொல்லி விட்டு அவளே சிரிக்க ஆரம்பித்தாள்

வாஸ்தவம் தான்! அவன் சும்மாவே உயரம் அதிகம்..இதில் புட்பாலுக்காக கலோரி கணக்குப்பார்த்து உண்டு உழைத்து வளர்த்த உடல் வேறு..

எறும்பு, யானை லவ்ஸ்டோரி  ரீக்ரியேட்டட் னு வச்சுக்கலாம்..இறங்கு.. சிரிக்காமல் சொன்னவன் தான் வண்டியை தாஜின் முன்னே பார்க் செய்தான்.

வா.. ஜானியின் கழுத்தில் செயினை மாட்டி அதை அழைத்துக்கொண்டு ஹோட்டலின் அனிமல் கீப்பிங் பகுதியில் கையளித்தவன் அவளோடு நுழைவாயிலை நோக்கி நடந்தான்

“வீட்ல தெரிஞ்சது..கொன்னே போட்ருவாங்க.. “

“வெறும் அரைமணி நேரம் தானே சீக்கிரம் போயிறலாம். புலம்பாம வரியா?”

“பெரிய புட் பால் ப்ளேயர்னு சொன்னீங்க.. எங்கே மீடியா, ப்ளாஷ் எதையும் காணோம்?”

அவள் சொல்லி வாய் மூடுமின்னர் எதிரே இருவர் அவன் பெயர் சொல்லி கூவ, வேகமாய் அவளின் கையைப்பற்றிக்கொண்டு ஹோட்டலுக்குள் புகுந்து டைனிங் ஏரியாவுக்குள் நுழைந்தான் அவன்

அவனது மொத்தக்குடும்பமும் உள்ளே கூடியிருந்தவர்கள் அவன் ஒரு பெண்ணின் கையைப்பற்றிக்கொண்டு வருவதை கண்டு மாறி மாறி பார்வைகளை பரிமாறிக்கொண்டனர். என்னுடைய கேர்ல் பிரன்ட் என அவளை அறிமுகப்படுத்தியதுமே பெரியப்பாவின் முகம் இருண்டு போனதை கடைக்கண்ணில் கவனிக்கவே செய்தான் அவன்.

யாருமே எதையுமே தூண்டித்துருவவில்லை. அவனுடைய அப்பா ஓரிருமுறை அவர்கள் இருவரையும் ஊன்றி கவனித்ததற்கு மேல் வேறேதும் செய்யவில்லை. எல்லோருக்கும் அவளிடம் பேச எதோ இருந்தது. லேசான சிரிப்புடன் எல்லாரையும் அசால்டாக சமாளித்தவளை ஆரோன்  தான் கொஞ்சம் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருட்ன்ஹான்.

இவளுக்கு நம்ம நினைச்சதை விட கப்பாக்குட்டி அதிகம் தான்!

மௌனச்சிரிப்புடன் டெசர்ட் எடுப்பதற்காக எழுந்து சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தால் அவளை காணவில்லை.

அவனின் சித்தப்பா மகள் யது அழைத்து போனதாக சொன்னார்கள்! ஐயய்யோ அந்த வாயாடி உண்மைகளை உருவி விடுவாளே.. வேகமாய் கண்களைசுழற்றி தேடியவன் நீச்சல் குளத்தின் அருகில் இருவரையும் கண்டு வேக வேகமாய் அவர்களை நெருங்கினான்.

அவன் போனபோது “சொல்லுங்களேன்,..ஆரோனும் நீங்களும் எப்படி லவ் பண்ணீங்க?” கொஞ்சலாக அவளை கேட்டுக்கொண்டிருந்தாள்

மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான் ஆரோன். முக்கியமான விஷயத்தை ஒத்திகை பார்க்க வில்லையே!!!

அத்து… அதை எப்படி சொல்றது? எவ்வளவு பெரிய கதை அது..சட்டுன்னு கேட்டா ….என்று உளறிக்கொண்டிருந்தவள் அவனை கண்டதும் முகத்தில் பெருநிம்மதி தோன்ற உங்கண்ணா சொல்வார் கேளு என்று அவனிடம் மாட்டி விட்டு விட்டாள்

சொல்லுண்ணா..நீ தான் காடு மாடு போல சுத்திட்டிருந்தியே..எப்படி லவ்லாம் பண்ண? யது நேரடியாக அவனிடமே கேட்டாள்.

அது…அஞ்சு வருஷ கதைடி!

அஞ்சு வருஷமா? யதுவோடு சேர்த்து கீர்த்தனாவின் விழிகளும் விரிந்தது அவனுக்கும் சிரிப்பை உண்டு பண்ணியது.. யார் பெத்த பிள்ளையோ!

“ஆமாம், மேடம் அப்போ ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தாங்க..அவங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டேவுக்கு நான் தான் சீப் கெஸ்டா போனேன்…அங்கே சக் ரேஸ் பண்ணுவாங்கல்ல.. சாக்கை கால்ல போட்டுக்கிட்டு..இவ யோசிக்காம அதுல பார்ட்டிசிப்பேட் பண்ணிட்டா.. sack அளவே இருக்கற இவ sack race பண்ண யோசிக்கலாமா? இவளை sack மொத்தமாக கவர் பண்ணிடுச்சு! ஓடமுடியாம  தடுக்கி தொபுக்கடீர்னு விழுந்து க்ராவுன்ட்லயே உக்காந்து  ஓன்னு ஒரே அழுகை. நான் தான் பொய் சமாதானம் பண்ணி தூக்கிட்டு வந்தேன்.. “

அவன் சொல்லச்சொல்ல கோபத்தில் மூக்கு சிவக்க நின்றிருந்தவளை கடைக்கண்ணால் பார்த்தபடி “கையில் மிதக்கும் sack ஆ நீ?” வாய் விட்டு பாடியவன்

“யூ நோ? மலரும் நினைவுகள்..உனக்கெங்கே புரியப்போகுது..அதை விடு..கதைக்கு வரேன்” என்று தங்கைக்கும் ஒரு டோஸ் விட்டு விட்டு கதையை தொடர்ந்தான்

“அதுல இருந்து மேடமுக்கு என் மேல கிரஷ் ஆயிருச்சு.. எங்க போனாலும் எனக்கு கார்ட், ப்ளவர்ஸ்னு ஒரே அன்புத்தொல்லை..ஒரு கட்டத்துல நானும் ரியலைஸ் பண்ணி..அப்புறம் என்ன லவ்வாச்சு..” அவன் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் சொல்லி முடிக்க.. அவள் முகம் கோபத்தில்  மொத்தமாக சிவந்து போயிருந்தது.

“சரி பொய்க்கதையை கேட்டாச்சு..நான் உண்மையா என்ன நடந்துச்சுன்னு சொல்லவா” என்று முறைத்தபடியே ஆரம்பித்தாள் கீர்த்தனா

“பொய்யா..அதானே பார்த்தேன்..இவனுக்குபோய் கார்டு, ப்ளவர்ஸ்ன்னு மெகா பட்ஜெட் லவ் எங்கயோ இடிக்குதேன்னு! நீங்க சொல்லுங்க..” இது அவன் தங்கை!

“அதே அஞ்சு வருஷத்துக்கு முன்னால நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன்..” அவனை கடைக்கண்ணால் சவால் பார்வை பார்த்த படி அவள் ஆரம்பித்தாள்

“எங்க ஸ்கூல் ஹாஸ்டல் பின்னாடி ஒரு பெரிய க்ரவுண்ட் இருக்கும். ஸ்கூல் எக்ஸாம் டைம்ல அந்த கிரவுண்டை பூட்டிருவாங்க.. அப்போவும் எங்களுக்கு எக்ஸாம் டைம்..ஆனா ஆரோன் எங்க ஸ்கூல் பசங்க சில பேரோட சேர்ந்து  எப்படியோ கிரவுண்டை  திறந்து புட் பால் விளையாடிட்டிருந்தாங்க..”

“நானும் என் பிரண்டும் ஹாஸ்டல் மொட்டை மாடில படிச்சிட்டிருந்தோம். இவங்க போட்ட சத்தத்துல படிக்க முடியல..இவங்க கிட்ட சொல்லலாம்னு கீழே வந்தா இவங்க எங்க பேச்சை  கேக்கவே இல்லை. கிண்டல் பண்ணிட்டே இருந்தாங்க.. அப்போ ஸ்கூல் லீவ் வேறயா? மானேஜ்மென்ட்ல யாருமே இல்லை..நான் என்ன பண்ணேன்னா பக்கத்துல இருந்த போலீஸ் ஸ்டேஷன் ல கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன்”

ஆஹா அப்புறம்

வேறென்ன போலீஸ் பிடிச்சுட்டு போய் முட்டிக்கு முட்டி தட்டிட்டாங்க.

ஆரோனையா?

அடங்கொக்க மக்கா,,இவ லேசான ஆளு கிடையாது! நம்புற மாதிரியே கதை சொல்றாளே!!!

என்னையில்லை..என் பிரண்டை!! அப்போதான் நான் எப்படிடி என் பிரண்டை நீ போலீஸ் ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இவளுக்கு நாலு அறை வைக்க  ஹாஸ்டல் சுவராய் ஏறிக்குதிச்சு போனேன்.. “ இடையில் குறிக்கிட்டு கதையை 180 பாகைக்கு திருப்பி விட்டான் அவன்.

“அதெல்லாம் இல்லை! என் கிட்ட கெஞ்சி கேக்க தான் வந்தார்.. என் கால்ல விழுந்தா தான் நான் கேசை வாபஸ் வாங்குவேன்னு நான் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்”

விழுந்தானா?

அது ரகசியம் சொல்லமாட்டேன். ஹா ஹா அவள் சிரித்தபடியே எங்கே என் கதையை இல்லைஎன்று சொல் பார்க்கலாம் என்று அவனை வேறு சவால் பார்வை பார்த்தாள்

ஹேய் எனக்கு தெரியும்! இவன் விழுந்துருப்பான்! யதுவுக்கு தான் எவ்வளவு சந்தோசம் அதில்!

போதும்! உன் பெருமை.. டைம் ஆகுது வா போலாம்…

கோபமாய் இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு அவளை இழுத்துக்கொண்டு மற்றவர்கள் இருந்த பகுதிக்கு வந்தான் ஆரோன்.

“ஆனாலும உனக்கு ஓவர் தன்னம்பிக்கை..ஆளையும் முழியையும் பார்!!!”

“நீங்க மட்டும் பொய் சொல்றீங்க?”

“சரி சரி விடு.” என்று புன்னகைத்தவன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு ஜானியை அழைத்துக்கொண்டு அவளது அட்ரசை கேட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான்

“எனிவே எல்லாரும் நம்பிட்டாங்க போலத்தான் இருக்கு! தாங்க யூ!”

இருக்கட்டும் என்பதாய் தலையசைத்தவள் “இவ்ளோ நேரமும் ஒண்ணும் தெரியல.. இப்போவீட்டுக்கு போனதும் வீட்ல என்ன டோஸ் விழப்போகுதோ?..அவன் கண்டிப்பா வீட்ல கம்ப்ளைன்ட் பண்ணிருப்பான்!”என்று பதட்டத்தில் மீண்டும் கைகளை அழுத்தி விட ஆரம்பித்தாள்

“லூசு..இங்க பார்..இந்த வயசுல உனக்கென்ன கல்யாணம் வேண்டியிருக்கு?பேசாம, ஸ்ட்ராங்கா வீட்ல சொல்லிட்டு கிளம்பி எங்காவது போ..உனக்கு கல்யாணத்துக்கெல்லாம் நிறைய டைம் இருக்கு!” உண்மையிலேயே சற்று எரிச்சலாக சொன்னான் ஆரோன்.

அனுப்பிட்டுத்தான் மத்த வேலை பார்ப்பாங்க!!” அவள் சலித்துக்கொண்டாள்

உனக்கு பிரஜினை பிடிக்கலையா?

இல்ல..

அப்போ வீட்ல ஸ்ட்ராங்கா சொல்ல வேண்டியது தான..இந்தளவு நீளத்துக்கு வாயை வச்சிருக்க..வீட்ல பம்மல் கே. சம்மந்தம் தானா?

நான் ஒண்ணும் பம்மல் கிடையாது!

ஹா ஹா.. ஹேய்..என்ன நம்பர் சொன்ன வீட்டுக்கு?

27

கண்டுபிடிக்க சிரமமே இல்லாது தனித்துவமாய் நின்ற அந்த பங்களாவின் முன் காரை நிறுத்தினான் ஆரோன்

தாங்க்ஸ் கீர்த்தனா.. தைரியமா இரு.. ஆல் த பெஸ்ட்!!!

ஹ்ம்ம் மென் சிரிப்புடன் தலையசைத்தவள் எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு உங்களுக்கும் தாங்க்ஸ் என்றபடி கையசைத்து விட்டு நகர்ந்தாள்

மீண்டும் வண்டியை யூ டர்ன் போட்டவன் “நீ என்ன நினைக்கற ஜானி, என் ஆக்டை வீட்ல நம்பிட்டாங்களா? இனியாவது அந்த பொண்ணு கிட்ட இருந்து எனக்கு டார்ச்சர் வர்றது நிக்குமா?” என்று கேட்டபடியே ஸ்டியரிங்கை சூழல விட்டான்.

ஜானியோ ‘எனக்கு இதற்கெல்லாம் டைம் இல்ல’ என்பதாய் அவனுக்கு ஒரு பார்வையை கொடுத்து விட்டு தெருவை மும்முரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

 

Advertisements

22 thoughts on “ஆரோகணம் 2

   1. Aanavam Ungalukkellam.. Athenna oru vasagam irukume, Short gals are cuter….. Ennavo..!! Seiva d Seiva Intha Keerthi Seiva.. Apo irukku.. :-/

    Liked by 1 person

 1. Thanks chellam short pullaya heroine a potathuku,athi enna Ella writersum 5 1/2adi heroine Ye poduranganu ganda irukum,hi hi enna nan correct a 5feet .but u darling !ud super o super.erumbum yanayum Jodi ya have ha imagine pannum pothe chippu chippa varuthu hi hi.

 2. Hi Usha,
  So happy to see you have returned with a new story. Have loved all of your earlier stories.
  This story too is going damn interesting. Erumbu and yaanai jodi sema kalakkal. Waiting for next ud.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s