ஆரோகணம் 3

“வர்றா பாருங்கப்பா!” கிருஷ் அப்பாவின் காதைக்கடித்துவிட்டு தன்னை முறைப்பாக பார்ப்பதை கண்டும் காணாதவள் போல உள்ளே வந்தாள் கீர்த்தி. லயா, ஷாலினி எல்லாருமே ஹாலில் தான் இருந்தார்கள்.

‘ஆஹா, இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விட மாட்டாங்க போலயே.’ அவளுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்தது.

மெல்ல போய் அண்ணியின் அருகில் அமர்ந்து கொண்டு “என்னாச்சு?” என்று அப்பாவியாய் விழிகளை உருட்டினாள் கீர்த்தி!

“லூசு..பிரஜின் நேர்ல வந்து காட்டு காட்டுன்னு காட்டிட்டு போறான்..அப்பா ரொம்ப கோபமா இருக்கார், நீ பாட்டுக்கு சிரிச்சு தொலைக்காதே..பார்த்துப்பேசு!” ரகசியமாய் காதைக்கடித்தாள் லயா.

“கீர்த்தி!!! எங்கடி போன இவ்ளோ நேரம்?” ஷாலினி தான் அவர்கள் தங்களுக்குள் குசுகுசுப்பதை கவனித்துக்கொண்டிருந்து விட்டு கேள்விக்கணையை தொடுத்தார்

“பிரண்டை பார்க்க போனேம்மா..” சாதாரணம் போல பதில் சொன்னவளை

“நீ பிரஜினை பார்க்க போனதா நினைச்சேன்..” என்று அப்பாவின் குரல் அழுத்தமாய் இடையிட மென்று விழுங்கினாள் கீர்த்தி.

“அது வந்துப்பா..” அவளுக்கு எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை.

“என்னாச்சு?” வள வளவென்று இழுக்காமல் விஷயத்துக்கு வா என்றது அவரது ஒற்றைச்சொல்

“நான் தான் சொன்னேன்ல..எனக்கு அவனை பிடிக்கலைன்னு. ஹோட்டல்ல இறங்கினதும் என் கையை தர தரன்னு பிடிச்சு இழுத்துட்டு போனான். இங்க பாருங்க எப்படி சிவந்து போயிருக்குன்னு!” என்று பதட்டத்தில் நீளமாய் ஆரம்பித்து விட்டு  எல்லாரும் அவளையே பதில் சொல்லாமல் கூர்மையாய் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு ஒரு நிமிஷம் தலையை குனிந்து அமர்ந்திருந்தவள்

“என்னால அவனை சகிச்சுக்க முடியலைப்பா..என்னை பார்க்கற முதல் நாளே,,மிரட்டறான், என் விருப்பத்தை பற்றி கன்சிடரே பண்ணலை. எப்படிப்பா எனக்குப்போய் இப்படியொரு மாப்பிள்ளையை பார்த்தீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டபோது அவள் குரலில் விளையாட்டில்லை.

மற்ற மூவரும் இப்போதும் எதுவுமே பேசவில்லை,,ஒரு அதிர்ச்சியான அமைதியில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“நான் சொல்லிட்டேன்பா..எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு பொலைட்டாத் தான் சொன்னேன்..அதுக்கு என்னை மிரட்டிட்டு என்கேஜ்மென்ட் ரிங்கை எடுத்தான்.. சத்தியமா உண்மையை தான் சொல்றேன். நான் பார்த்திருக்கேன்பா..அண்ணா எங்கேஜ்மென்ட் ரிங் எப்படி வாங்கினான், அவன் எப்படி ப்ரொபோஸ் பண்ணினான் எல்லாமே.. என்னால எப்படி அவன் பண்ணதை ஏத்துக்க முடியும்? அதான் எழுந்து வந்தேன்.. நான் அங்கே இன்னும் ஒரு நிமிஷம் இருந்திருந்தா அவன் என் கையை முறுக்கி கைல ரிங்போட்டு விட்ருப்பான்..தடுக்கற அளவுக்கு எனக்கு அந்தளவு பலம் கிடையாது.”

ரகுராமும் கிரிஷும் சட்டென்று பார்வையை பரிமாறிக்கொள்ள ..ஷாலினியின் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது…லயாவின் கைகள் அவளது கையை இறுக்கிக்கொண்டன ஆறுதலாய்.

பேசியதெல்லாம் போதும் என்பது போல கீர்த்தியும் அதற்கு மேல் அமைதியாகிவிட அப்போது தான் அமைதியை கலைப்பது போல போன் மணியடித்தது.

தந்தையை ஒரு பார்வை பார்த்தபடி கிரிஷ் எழுந்து சென்றபோதே கீர்த்திக்கு புரிந்து விட்டது மறுமுனையில் யாரென்று!

……

“எஸ்..வந்துட்டா” ஹாலின் அமைதியில் கிரிஷின் குரல் அப்படியே உள்ளே இறங்கியது அவளுக்குள்..

….

“பிரஜின். இதை நீங்க விட்டுடறது நல்லது. எங்க கீர்த்திக்கு பிடிக்காததை நானோ அப்பாவோ வற்புறுத்தபோறதில்லை.” சொல்லும் போதே  அவன் பார்வை ரகுராமில் விழுந்து அவரிடம் ஒரு அழுத்தமான ஆமோதிப்பை வாங்கியது. ஆச்சர்யமாய் அண்ணாவைப்பார்த்தாள் கீர்த்தி

….

பிரஜின்..சொல்றேன்ல..இது கீர்த்திக்கு பிடிக்கலைன்னு!

…..

“டேய்!!! உனக்கு அவ்ளோ தான் மரியாதை. அவளைப்பத்தி நீ அக்கறைப்பட வேண்டியதில்லை. புரிஞ்சதா?” அவன் சட்டென்று அந்நியனாக மாறவும்  லயா திடுக்கிட்டு எழுந்து கிரிஷை நெருங்க மற்றவர்களும் பதட்டமாய் எழுந்து கொண்டார்கள்

….

“ஏய்.. இங்கபார்..உன்னளவுக்கு நாங்கள் இறங்கப்போவதில்லை. ஆனால் இனிமே அவ பக்கம் திரும்பினாய் என்றால் நான் யார் என்று காட்ட வேண்டியிருக்கும்!”

கோபத்தில் கொதித்த கிரிஷிடம் இருந்து சடக்கென்று போனைப்பறித்துக்கொண்டார் ரகுராம்

“பிரஜின் நான் ரகு பேசறேன்.. நான் உனக்கு என்ன சொன்னேன்? கீர்த்தி ஒகே சொன்னால் மட்டும் தான் என்னால் இதை பற்றி யோசிக்க முடியும் என்று சொன்னேனா இல்லையா, உன்னை நம்பித்தான் என் பெண்ணை உன்னோடு அனுப்பினேன், ஆனால் நீ அவளிடம் நடந்து கொண்ட முறைக்கு……உன் அப்பா முகத்தை பார்த்து சும்மா விடுகிறேன். இனிமேல் என் வீட்டுப்பக்கம் கால் எடுத்து வைக்கக்கூடாது.”

அழுத்தமாய் சொல்லி விட்டு போனை வைத்து விட்டவர் இவர்களிடம் திரும்பினார் “கீர்த்தி, இனிமேல் அவனை எங்காவது கண்டால் கூட வம்பு வளர்க்காதே, புரிந்ததா?”

அவனிடம் நின்று வம்பு வளர்க்க அவளுக்கென்ன பைத்தியமா?

“சரிப்பா… தா..தாங்க்ஸ்..”

அண்ணனும் தந்தையும் எடுத்த கோபாவதாரத்தில் கொஞ்சம் அதிர்ந்து போயிருந்தவளுக்கு பேச்சே தடுமாறியது.

சரி சரி!!! அவளை விடுங்க.. பயந்து போயிருப்பா..கீர்த்து, சீக்கிரம் போய் ட்ரெஸ் மாத்திட்டு வா!!” கண்ணாலேயே அவளை அவ்விடம் விட்டு அகலுமாறு சிக்னல் கொடுத்தார் அம்மா!

தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடிவிடத் திரும்பியவளை ரகுராமின் குரல் நிறுத்தியது

“ஒரு நிமிஷம், இங்க பாரு கீர்த்தி, இனிமேல் இங்கே யாரும் அவன் பேச்சை எடுக்க மாட்டோம்! ஆனால் அதற்கு நீ இனிமேல் உன்னிஷ்டப்படி இருக்கலாம் என்று அர்த்தம் கிடையாது! உனக்கு நான் இரண்டு மாசம் தான் டைம் தருவேன். படிக்கிறாயோ, கல்யாணம் பண்ணிக்கொள்கிறாயோ, வேலைக்குப்போகிறாயோ ஏதாவது ஒன்று. ஆனால் என்ன செய்யப்போகிறாய் என்று எனக்கு சரியான திட்டம் வேண்டும்! புரிந்ததா?

“ச..சரிப்பா..” என்று திணறிவிட்டு விட்டால் போதும் என்று பறந்து விட்டாள் அவள்!

கதவைப்பூட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தவளுக்கு மூச்சு முட்டியது. இதுநாள் வரை கோபமாய் வீட்டில் பேசுவானே தவிர அவர்களின் முன்னே எவருடனும் சண்டை போட்டிராத கிரிஷ் சத்தம் போட்டது, அப்பா பிரஜினை திட்டியது, அம்மாவின் அதிர்ச்சி முகம் எல்லாமே அவளை ஒவ்வொரு விதத்தில் பாதித்தது.

நல்ல வேளை இவர்கள் யாருக்கும் என்ன நடந்தது என்று முழுதாக தெரியவில்லை. ஆரோனுடன் நடந்த நாடகம் தெரிந்திருந்தால் அவளையே அடித்து வேளியே துரத்தியிருப்பார்கள். அவ்வ்வ்வ்..

ப்ச்…நாமும் பொறுப்பில்லாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம். நம்மை புரிந்து கொண்டு இவ்வளவு தூரம் சப்போர்ட் செய்யும் குடும்பத்துக்காக நாமும் நம்மை மாற்றிக்கொண்டால் தான் என்ன? இன்னும் இரண்டே மாசம் பொறுங்கப்பா..நான் என் எதிர்காலம் பற்றி தெளிவான முடிவு பண்ணுகிறேன்.. மனதுக்குள் முடிவு செய்து கொண்டாள் அவள்

இரவின் அதிர்ச்சியோ என்னமோ மறுநாள் தாமதமாகத்தான் எழ முடிந்தது அவளுக்கு. அம்மாவின் நடந்ததுக்கு மன்னிப்பு கோரும் விதமான முத்தமும் அவளுக்கு பிடித்த சினமன் டோஸ்ட்டும் அன்றைய நாளுக்கு ஏகப்பட்ட உற்சாகத்தை வழங்கியிருக்க காலை ஒன்பதரை மணியளவுக்கெல்லாம் தயாராகி கீழிறங்கி வந்தாள் கீர்த்தி

வீட்டில் எல்லாரும் வேலைக்கு சென்று விட்டிருந்தனர். வீட்டை பார்த்துக்கொள்ளும் சிந்தாவிடம் சொல்லிக்கொண்டு தன் ஸ்கூட்டியினை போக்குவரத்தில் கலந்தாள் அவள்.

நேற்று திறந்து வைக்கப்பட்டிருந்த மிகப்பெரும் மாலில் ஆரம்பிக்க பட விருந்த சுசீஸ் ஆரோக்கிய உணவகத்துக்கு  ப்ரான்டிங் டிசைன் ஒன்றை போன வாரம் தான் செய்து வழங்கியிருந்தாள் அவள். அவளது நண்பியின் சகோதரியின் கணவர் ஆரம்பித்த நிறுவனம் அது என்பதால் நண்பி மூலம் அந்த வாய்ப்பு அவளுக்கு வந்திருந்தது.

அவளது தொழில் இன்னும் நண்பர்கள் தெரிந்தவர்களை தாண்டி விரிவு பெற வில்லை. தெரிந்தவர்களுக்குள் ஏதேனும் வாய்ப்பு வந்தால் அவளுக்கு தருவதும் பிறகு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அவளை பரிந்துரை செய்வதுமாக ஆமை வேகத்தில் அவளது தொழில் விரிவடைந்து கொண்டிருந்தது. அவளது வீட்டினர் அதை விரிவாகவே நினைக்கிறார்களில்லை! அவர்களை சொல்லியும் குற்றமில்லை. மாதத்துக்கு மூன்று ஆர்டர் வருவதே நிச்சயமில்லாத நிலைமைதானே இப்போது அவளது!

யோசனையோடு பார்க்கிங்கில் வண்டியை விட்டு விட்டு மாலுக்குள் நுழைந்தாள் அவள்

ஹப்பா..நகருக்குள் இது தான் மிகப்பெரிய மாலாக இருக்க வேண்டும்..இதுவரை இருந்ததை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் வடிவமைப்பு!

இரண்டாவது தளம் முழுவதும் உடைகளாக இருக்க எதையும் வாங்கும் மூட் இல்லாமல் விண்டோ ஷாப்பிங் செய்தபடி ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு நடந்தவளோடு கிக்கீ என அழைத்தபடி ஓடி வந்து சேர்ந்து கொண்டாள் நிவி.

திருமணம் ஒன்றுக்காக ட்ரஸ் வாங்க வந்திருந்தவளுக்கு தெரிவு செய்வதில் உதவி விட்டு அவளையும் இழுத்துக்கொண்டு மூன்றாம் தளத்துக்கு போன போது பெருமையில் நெஞ்சே இறுகுவது போலிருந்தது கீர்த்திக்கு!

பின்னே? அவள் பார்த்து பார்த்து வடிவமைத்த டிசைன்கள், கணனியில் கலந்த வண்ணங்கள் எல்லாமே உயிர் கொண்டு கண் முன்னே நிற்கும் போது பெருமிதம் வராதா என்ன?

“யேய்.கிக்கீ…நீ எங்கயோ போகப்போற!!! சும்மா கலக்கலா இருக்கு டிசைன், பிராண்டிங் எல்லாமே..” நிவிக்கும் ஒரே உற்சாகம்..

உண்மையில் அவளுக்குமே அப்படித்த்தான் தோன்றியது..சுற்றியிருந்த கடைகளோடு ஒப்பிட்டுப்பார்த்தபோது சுசீஸ் தனித்துவமாக தெரிவதாகப்பட்டது. கடைக்கு உள்ளே சென்று அமர்ந்த போது  தன் பக்கப்புறச் சுவரோரம் ஸ்மூதி படங்கள் கொண்ட பின்னணிப்படத்தில் குட்டியாய் இருந்த கிக்கீ என்ற தனது கையெழுத்தை விரல்களால் வருடினாள் அவள்

அவர்களுக்கு இலவசமாக மின்ட் மற்றும் ஆப்பிள் கலந்த பழரசத்தை கொடுத்து உபசரிக்க முயன்ற உரிமையாளரிடம் “கடைக்கு முதல் முறையாக வருகிறோம் நாங்களே வாங்கிக்கொள்வது தான் முறை” என்று வற்புறுத்தி பணத்தை செலுத்த வேண்டியிருந்தது அவர்களுக்கு.

முடித்ததும் அவளது நிபுணத்துவத்தை குறிப்பிட்டு அழகாக காண்டாக்ட் தகவல்களுடன் வடிவமைக்கப்பட்ட குட்டி விளம்பரங்களை அவரிடம் கொடுத்து வாடிக்கையாளர்கள் உள்ளே வருமிடத்தில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் படி வைக்குமாறு வேண்டிக்கொண்டவள் தனது உத்தியோக பூர்வ முகப்புத்தக பக்கத்துக்காக அந்த கடையை  புகைப்படங்களும் எடுத்துக்கொண்டாள்.

அருகில் நிவி ஏதோ பேசிக்கொண்டு வர வழக்கத்துக்கு மாறாக கீர்த்தி கொஞ்சம் யோசனையில் இருந்தாள். கண்கள் மேல்புறம் சுற்றி வந்தன.

நான்காம் மாடியில் இன்னும் பல கடைகள் திறக்கப்படவில்லை. அவைகளுக்கான டிசைன் வடிவமைப்பெல்லாம் யார் செய்வார்கள்? பச்..என்ன தான் திறமை இருந்தென்ன? வாய்ப்பு வரவேண்டும். ஒரு ப்ரேக் வேண்டும்..

யோசனையாக நிமிர்ந்தவளின் கண்களில் அப்போது தான் பட்டது அந்த ஸ்போர்ட்ஸ் வெயார் கடை. அது மட்டுமல்ல கடை வாசலிலேயே பந்தை உதைத்த படி பானரில் நின்று கொண்டிருந்த ஆரோனும்!

பார்ரா!!!!! அவனை பார்த்த மாத்திரத்திலேயே சிரிப்பு வர அந்த பானரை நோக்கி நடந்தாள் கீர்த்தி.

“யேய்.. நிவி உனக்கு இவனைத்தெரியுமா?” அவளின் கேள்விக்கு

இவனைத்தெரியாதா? என்ன கேள்வி இது?” என்று பதிலுக்கு முறைத்தாள் நிவி.

“பச்..நேரில் பார்த்திருக்கிறாயா என்று கேட்கிறேன்”

“பார்த்திருக்கிறேனே! நேரில் இதை விட பெரிதாக இருப்பான் தெரியுமா?” அப்பாவியாக நிவி பதில் சொல்ல

“ஓஹோ..” என்றவளுக்கு ஏனோ மீண்டும் சிரிப்பு பொங்கி வர பானரை நன்றாக பார்த்தாள் அவள்

“அவன் கிட்ட பேசிருக்கியா?”

ஐயா…  நாங்கள் நெட்பால்  செமி பைனலுக்கு போன நேரம்  இவன் அங்கே வந்திருந்தான்..ஒரு சிரிப்பு இல்லை தெரியுமா? முறைச்சிட்டே போனான் எல்லாரையும்! திமிர் பிடிச்சவன்..” ஆட்டோகிராப் கேட்டு மூக்குடைந்திருப்பாளோ? சாபம் விடாக்குறையாக நிவி திட்டித்தீர்த்தாள்

ஹாஹ்ஹா

“ஏண்டி திடீர்னு நீ சம்பந்தமே இல்லாம ஹல்க்கை பத்தி கேக்கற?” நிவி கொக்கி போட்டாள்

“சே..சும்மா தான்.. அண்ணா நேத்து இவனைப்பத்தி  பேசிட்டிருந்தான்.” அழகாக கீர்த்தி சமாளிக்க

“யார் மை டார்லிங்கா…?” என்று கண்சிமிட்டினாள் நிவி.

“செருப்பு பறந்து வரும் சொல்லிட்டேன்!!!” கொலைவெறியாகிவிட்டாள் கீர்த்தி. பின்னே என்ன இந்த அண்ணனை வைத்து காப்பாற்றுவது இலகுவாகவா இருக்கிறது! அவனாலும் அவன் பெண் விசிறிகளாலும் அவள் அடைந்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமா!

கீர்த்தியின் முரட்டலில் கொஞ்சமும் பாதிக்கப்படாதவளாய் “ஹா ஹா  நான் ஒரு fan ஆ  டார்லிங்கை ரசிக்க கூடாதா?” என்று சிரித்தாள் நிவி

ஒரு மண்ணும் தேவையில்லை! கீர்த்தி உண்மையிலேயே எரிந்து விழ..

சரி சரி விடறி.. என்று வெள்ளைக்கொடி காட்டினாள் மற்றவள்

“என்னை ஒரு போட்டோ எடு..நான் விட்டுர்றேன்”

“இங்கேயா?” என்று குழப்பமாய் கேட்டாள் நிவி.  காரணம் அது சுற்றிவரை கடைகளையும் அசைந்து கொண்டே இருக்கும் மக்களையும் கொண்ட இடம்!

“சும்மா ஒரு ஜாலி போட்டோ..இவன் பாலை காலால உதைக்கறான்ல.. நான் இந்தப்பக்கம் இருந்து உதைக்கிறேன்..நீ போட்டோ எடு!!”

“சரி போஸ் கொடுத்து தொலை!!!”

இருடி,,யாரவது வராங்களா பார்க்கிறேன் என்றபடி கடைக்குள்ளே எட்டிப்பார்த்து  எல்லாரும் உள்ளே பிசி என்று உறுதிப்படுத்திக்கொண்டவள் மறுபக்கம் இருந்து பந்தை உதைப்பது போல போஸ் கொடுத்தாள்!

எங்கே காமி..

போட்டோவை பார்த்து விட்டு அடுத்தகணம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.. காரணம் அவன் ஒரு பக்கம் சீரியஸாக பாலை உதைக்க மறுப்பக்கம் கீர்த்தி நின்று கொண்டு தா தை என்று நடன ஸ்டேப் போடுவது போல கண்ணையும் காலையும் பந்தின் பக்கமாக திருப்பியிருந்தாள்!

பவர்ஸ்டார் புட்பால் விளையாடுற போல இருக்கு!

போடி பொறாமை புடிச்சவளே.

மாறி மாறி நிவியோடு சண்டை போட்டுக்கொண்டு மால் முழுக்க சுற்றித்திரிந்தவள்ஒரு வழியாக காலை பதினொன்றரைக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தாள்.

சோபாவில் படுத்துக்கொண்டு அன்றைக்கு எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு கிர்ரென்று வாட்சைப் செய்தி ஒன்றை கொண்டு வந்தது.

“அப்புறம் பாப்பா உன் கல்யாணம் என்னாச்சு..” ஆரோன் தான் கேட்டிருந்தான்!

நேற்று வரும் போது நம்பர் வாங்கிக்கொண்ட பிறகு எந்த தகவலும் கொடுக்காதிருந்த அவன் திடீரென்று கெட்டது ஆச்சர்யமாக இருக்க..

கொன்னுருவேன்.. கல்யாணம்லாம் புல்ஸ்டாப் வச்சாச்சு. டாடி ஒரு மாசம் டைம் கொடுத்திருக்கார்,,அதுக்குள்ளே நான் எதையாவது கண்டுபிடிக்கணும்..என்று சீரியசாகவே பதில் சொன்னாள் அவள்.

“குட்”

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு. ஏதோ ஓர் உந்துதலில் சுசீஸ் புகைப்படங்களை மொத்தமாக செலெக்ட் செய்து அவனுக்கு அனுப்பி வைத்தாள் மை டிசைன்ஸ் என்ற காப்ஷனுடன்..

நல்லாருக்கே..கீப் ட்ரையிங் என்று புன்னகையை அனுப்பி வைத்தவன் திடும்மென கண்ணீர் வழிய சிரிக்கும் இமொஜிகளுடன் அவளுடைய ஆரோனுடைய பானருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவளுக்கே அனுப்பி வைத்தான் அவன்!

ஹையோ!!!!! அப்படியே தலையை மேசையில் முட்டினாள் அவள்..அறிவு கெட்டவளே..அந்த போட்டோவையும் சேர்த்தே அனுப்பிட்டியா.. இவன் கலாய்ச்சே ஒரு வழி பண்ணிருவானே..

டிலீட் தட் வில் யூ? அவளின் மிரட்டல் அவனிடம் எடுபடுமா என்ன?

போலியோ வந்த எறும்பு ஹா ஹா

உன்னை விட பந்து பெருசா இருக்கு பாரு..

சற்று நேரத்துக்கு நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தவனின் குறுஞ்செய்திகளை முறைப்புடன் பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே அவளால் முடிந்தது!

 

அதன் பிறகு அன்றிரவு அவளுக்கு ஆரோனிடம் இருந்து மீண்டும் மேசெஜ் வந்தது.

வெறுமனே “இரண்டு தொடரிலக்கங்கள் குறிப்பிட்டு சார்ம்ஸ் VS கிங்க்ஸ்/ செமி பைனல்ஸ்/ ஜூன் 15 2 ப்ரீ டிக்கட்ஸ்/ என்ஜாய்” என்றிருந்தது.

செமி பைனல் டிக்கட் நிச்சயம் விலை அதிகமாக இருக்கும். அதில் இரண்டு டிக்கட்டுக்களை அவன் அனுப்பி வைத்ததை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் லேசாக படபடப்பானவள்

“கியா ரே ட்ரையிங்கா?”  என்று கலாய்ப்பது போலவே கேள்வி கேட்டாள்

“ஹா ஹா வேற வழி? fan ஆக மாட்றியே” அவனும் அவள் வழியிலேயே வந்தான்

“ஹா ஹா நெவர்!!!”

“மாட்ச்சுக்கு வா”

“மாட்டேன்..”

“ப்ரீ டிக்கட் யூ நோ?”

“எனக்கு தூக்கம் வரும்யா…”

“தின்னுட்டு தின்னுட்டு தூங்கு, நல்லா வருவ” அவன் முறைத்தான்

சிறிது நேரத்தின் பின் “ஏன்?” என்று மட்டும் டைப் செய்தாள் அவள்

“சிம்பிள் தாங்க் யூ கிப்ட்” என்று உடனே பதில் வந்தது.

“வா”

“மாட்டேன்…”

“போய்த்தொலை!”

 

.

 

 

 

 

Advertisements

17 thoughts on “ஆரோகணம் 3

  1. Enna Yaa Sambavam ellam Kan Minna vanthu Poguthu.. Unakellam Nan set ye aaga matten Moment :p KeeKee Rock Star ye..! Kye re trying.. Hahahaahaa! Ushanthy avargale ❤ ❤

    Liked by 1 person

  2. That football banner post ha ha asingapatan autokaran moment.hulk ku ethuku papa mela arvam?alu size ku ethamathiri perum ki ki ya?enga irunthu than pudipiyo ushu!

    Liked by 2 people

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s