ஷாஸ்தம் – 3

அது ஒரு மலையடிவாரம். பசும் புற்றரையில் ஆங்காங்கே மஞ்சள் பூக்கள் மடிந்து விழுந்தும் உயிர்ப்போடிருந்தன. நீளமான கல் பென்ஞ்சொன்று’ ட’ வடிவில் மலையைப்பார்த்தபடி மரத்தின் கீழ் போடப்பட்டிருக்க ஐந்து வயது கூட மதிக்க முடியாத சிறுவர் சிறுமிகள் நான்கு பேர் அந்த பெஞ்சில் வட்டமாக சுற்றி குழுமியிருந்தனர். அவர்களின் குற்றஞ்சாட்டும் முகபாவனைகள் பெஞ்சில் அமர்ந்திருந்த உருவத்தின் மேல் படித்திருந்தன. கலங்கிப்போன கண்களுடன் அப்போது தான் எதையோ ஜீரணிக்க முயல்பவள் போல கண்கள் கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள் அந்த சிறுமி. Continue reading “ஷாஸ்தம் – 3”

ஷாஸ்தம் – 2

இத்தனை காலமும் அவள் இருக்குமிடம் தேடி வந்து அவளை இப்படியாரும் தாக்கியதில்லை. அதுவும் அந்த வெளிச்சம் இன்னும் மிச்சமிருந்த நேரத்தில், சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு தங்களுடைய இருப்பு வெளிப்படுத்தப்படும் என்ற எண்ணம் கிஞ்சித்துமில்லாமல் அப்பயங்கர சாபத்தை தன் மேல் ஏவிய எதிரி எவனாக இருக்க முடியும்? அந்த கேள்விக்கு பதில் அவளை வித்தகனின் வீட்டுக்கு நடுவில் கொண்டு வந்து விட்டிருந்தது. என்ன தைரியம் இருந்தால் என்னை பொதுவெளியில் வைத்து தாக்க முயல்வார்கள்? ஸ்வஸ்தியிடம் இருந்து கோப அலைகள் ஆவேசமாகContinue reading “ஷாஸ்தம் – 2”

ஷாஸ்தம் – 1

சாசனம் நாட்டின் வடகரையோரமாய் இருக்கும் குட்டித்தீவு. கேள்விப்பட்டதில்லையா? அப்படி பலர் அறியாமலிருப்பதே அந்த தீவின் ஒரு சிறப்பியல்பு என்பேன். மலைகளும் எங்குபார்த்தாலும் பசுமையும் விரவிக் கிடக்கும் அசாத்தியமான இயற்கை செல்வத்தை தன்மீது போர்த்திக்கொண்டிருக்கும் அத்தீவில் வெளியார் வந்து சாதாரணமாக கால் பதித்து விடமுடியாது. செயற்கை கோள்கள் கூட படம்பிடிக்க முயலாத சாசனத்தின் பரிபாலனம் நூற்பிடித்து வைத்தது போல என்றுமே விலகியதில்லை.அங்கே மட்டும் எப்படி எல்லாமே ஒழுங்காக நடக்கிறது என்று கேட்பீர்களானால் அந்த தீவின் மக்களுக்கே அதற்கான காரணம்Continue reading “ஷாஸ்தம் – 1”