மனிதனும் மர்மங்களும்_ மதன்

இன்னிக்கு நான் படிச்சிட்டு வந்தது குமுதம் ரிப்போர்டர்ல தொடரா வந்த மனிதனும் மர்மங்களும் என்ற எழுத்தாளர் மதனோட புத்தகம். ஒரு வரில சொல்லணும்னா செம்மையான அனுபவம் இந்த புத்தகம். மர்மங்கள் எனும்போது பேய் இல்லாமலா..ஆனால் அதை விட சுவாரஷ்யமான விஷயங்கள் நிறைய இருக்கு! நூற்று தொண்ணூறு பக்கத்துல இருக்கற புத்தகத்துல பர்ஸ்ட் குவார்ட்டர்ல தான் பேய்ஸ் வர்றாங்க. அதுவும் உண்மைச்சம்பவங்களை வச்சு அவங்களோட ஹிஸ்டரியையே துவைச்சு புழிஞ்சு காயப்போட்டு அயனும் பண்ணி மடிச்சு வச்சுர்றார் மதன் சார்.Continue reading “மனிதனும் மர்மங்களும்_ மதன்”

ஆதலினால் காதல் செய்வீர்

கிட்டா, ஜோமோ, அரிஸ், மாமா நால்வரும் ஒரே பிளாட்டில் ஒன்றாக தங்கியிருப்பவர்கள். ஒரே சமயத்தில் அவர்கள் வாழ்வில் பெண்களால் ஏற்படும் குழப்பங்களை வயிற்றைபிடித்துக்கொண்டு சிரிக்கும் படி தன் புத்திசாலித்தனமான கதை நகர்த்தலின் மூலம் தள்ளிச்செல்கிறார் ஆசிரியர். அபிலாஷாவை பார்த்து மனதில் ஜொள் விடும் ஜோமோ தடாலடியாக வரும் திருமணவாய்ப்பில் தன்னிலை மறந்து சம்மதம் சொல்கிறான். தான் சம்மதம் சொன்னது அவன் முரட்டு வேலைக்காரி என்று நினைத்த அபிலாஷாவின் அக்கா என்பது அவனுக்கு வெகுதாமதமாக தெரியவர விழிக்கிறான். அதேContinue reading “ஆதலினால் காதல் செய்வீர்”

தீண்டும் இன்பம்_ சுஜாதா

ஒரு இதயம் உடையாமல் நிறுத்த முயன்றால்  நான் வாழ்வது வீணல்ல  ஒரு உயிரின் தவிப்பையோ ஒரு வலியையோ குறைக்க முடிந்தால்  ஏன் சோர்ந்து விழும் ராபின் பறவையை  கூட்டுக்கு மீட்க உதவினாலே  நான் வாழ்வது வீணல்ல  எமிலி டிக்கின்சனின் கவிதையோடு ஆரம்பிக்கிறது கதை. பிரிந்து தனித்தனியாக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெற்றோரின் பதினேழு வயதுபெண் அஹல்யா. சகலகலாவல்லவி ஆனால் சற்றே முதிர்ச்சியற்ற மாணவி. அவளுக்கு பாடசாலையில் ஒரு நண்பன் உண்டு பிரமோத். அவனுக்கும் இவளுக்குமான இழை காதலா நட்பாContinue reading “தீண்டும் இன்பம்_ சுஜாதா”

உத்தம வில்லன்

Production: Kamal Haasan, N Lingusamy Cast: Andrea, K Balachander, K Viswanath, Kamal Haasan, Parvathi Menon, Pooja Kumar Direction: Ramesh Arvind Screenplay: Kamal Haasan Story: Kamal Haasan Music: M Ghibran Background score: M Ghibran Cinematography: Shyam Dutt Dialogues: Kamal Haasan Editing: Vijay Shankar கொஞ்சநாள்களாக இம்சையான பாராட்டுக்களின் முன் அமர்ந்திருக்கும் கமலைக்கண்டு கமல் ரசிகையான எனக்கே கொஞ்சம் அலுப்புத்தட்டியதால் எப்படி இருக்கப்போகிறதோ என்ற மனத்துடனே உத்தமவில்லன்Continue reading “உத்தம வில்லன்”

நானும் சமையலும் :p

திருமணமாகி ஒருவருஷ நிறைவு நாள் அன்று என் தலையில் உதித்த ஒப்பற்ற பதிவு இது! 😀 இந்த ஒரு வருஷத்துல நான் என்னத்தை சாதிச்சேன்னா ஒரு மண்ணுமே இல்லன்னு என் மனசாட்சி சொன்னாலும் நம்பாம ஞாபகங்களை உருட்டினதுல யூரேக்கா!!! சமையல் தாங்க அது! என்னையும் சமையலையும் கனெக்ட் பண்ண முடியலையா? சில விஷயங்கள் அப்படித்தாங்க.. எதிர்த்துருவங்கள் ஈர்க்கும்னு சொல்வாங்களே! அப்படி நானும் சிக்கிட்டேன் கிச்சன்ல! நான் படிக்கும் போது பரபரப்பா ஓடித்திரிஞ்சதுல அம்மாக்கு ஹெல்ப்லாம் பெருசா பண்ணறதுContinue reading “நானும் சமையலும் :p”

முகப்புத்தகத்தின் முகங்கள்- A fun analisis

பணம் , மகிழ்ச்சி, பொன், பெண் எல்லாவற்றையும் தாண்டிக்கொண்டு மனிதனின் உள்ளார்ந்த தேடலில் முதலிடத்தில் இருக்கிறது அடையாளம்! ஒவ்வொரு மனிதனும் தான் சார்ந்த கூட்டத்தில் somebody ஆக அறியப்பட விரும்புகிறான். அவனை அறியாமலே உழைக்கிறான். அந்த கூட்டத்தில் அவனது நகர்வுகள் எல்லாமே அதை நோக்கித்தான் இருக்கும்! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ராணித்தேனீ இருக்கிறது. அவன் சார்ந்த வட்டத்தில் அவன் ராணித்தேனீயாகவே இருக்கிறான். அந்த கூட்டத்தில் அவனுக்கு ஒரு தொழிலாளி, நண்பன் புகழ்பாடி எதிரி இப்படி பலவகைகள் இருக்கும்.Continue reading “முகப்புத்தகத்தின் முகங்கள்- A fun analisis”

மனோதைரியம் யாருக்கு அதிகம்?ஆணுக்கா பெண்ணுக்கா?

பெண்மையின் நீயா நானா Talk show வில் இடம் பெற்ற என் வாதம். முதலில் மனோ தைரியம் என்பது என்ன? ஒரு நேர்மையான செயலை செய்து முடிப்பதற்கான உறுதி, வெற்றி அடையும் வரை தொடர்ச்சியான முயற்சியை செய்யக்கூடிய பொறுமை, அந்த செயலின் விளைவை அது நல்லதோ கெட்டதோ, தானே ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்வு இத்தனையையும் இணைத்த கூட்டு இயல்பே மனோ தைரியம்! கெட்ட அழிவுக்குரிய செயலை செய்பவனை/ளை மனோதைரியம் மிகுந்தவனாக /ளாக நாம் குறிப்பிடுவதில்லை. அடுத்ததாக ஆண் பெண்Continue reading “மனோதைரியம் யாருக்கு அதிகம்?ஆணுக்கா பெண்ணுக்கா?”

நானும் தமிழும்

பெண்மையின் தமிழ் புத்தாண்டு போட்டிக்காக!…. நான் தமிழன்/ தமிழச்சி என்றெண்ணி பெருமை கொள்ளும் தருணங்கள் வீதியில் வரும் திருப்பங்கள் போல! வந்து கொண்டே இருக்கும்! நான் புரிந்து கொள்ளும் வயதுக்கு வந்தபோது அப்பா தமிழைப்பற்றி தந்த அறிமுகத்தில் ஆரம்பித்தது அது! இத்தனை ஆண்டுகள் பழமையான மொழி, என் அப்பா எனக்கு தந்ததை நான் உனக்கு தருகிறேன் என்று சொன்னபோது நான் என்னப்பா செய்யவேண்டும்? என்று கேட்டேன், எதுவுமே செய்யாமல் ஒப்படைக்க வேண்டியவர்களிடம் அப்படியே கொடுத்தாலே போதும் என்றுContinue reading “நானும் தமிழும்”