நேற்று நான் இருந்தேன்..

மழைத்துளிகள் நிலம் தொட்டுப்புதையுமுன் தெறித்துத் தப்பிக்கும் சில துளிகளைப்போல உன் நினைவுகளை நெஞ்சக்குளத்தில் அமிழ்த்துமுன் இறுதியாய் ஒருதடவை மீட்டுப்பார்க்கிறேன் குளத்தில் விழுந்த கல்லென உன்ஞாபகங்கள் என் இருப்பினை அலைக்கழிக்க நீரில் ஆடும் அந்த வான் நிலவின் நிழலாய் ஒருமுறை ஆடி அடங்குகிறது என் உயிரும் உயிர் கொண்ட காதலும்…

சூரிய புத்திரர்கள்

இவர்களின் தலையில் ஒளிவட்டம் இருப்பதாக யாரும் கற்பனை செய்ய வேண்டாம் ! மிகவும் அரிதாய் அதுவும் நீங்கள் யாரும் இல்லாத தருணங்களில் அணிந்திருக்கக்கூடும் தலைப்பா! சூரியன் உலாப்போகும் மதியங்களில் வெம்மையும் ஒளியும் உடலில் பட்டு கரு நிற உடல் தகதகக்க அள்ளித்தெளித்த நீராய் வியர்வையுடன் உங்கள் வயல்களில் இவர்களை காணலாம்! அடுத்த நாள் கஞ்சிக்காய் காலையிலும் மாலையிலும் மதியச்சூட்டில் வேகுபவனை வெயிலில் பேட்டி காணப்போயிருந்தேன் தொற்றிக்கொண்ட தலை வலிக்கு இன்னுமே முடிவில்லை! சில நேரம் இவர்களோடு சூரியனும்Continue reading “சூரிய புத்திரர்கள்”

பெண்மை

நீ நீந்திப்போனதால் கலைந்து போன என் கடலில் அலைகள் இன்னும் ஓயவில்லை! நீர்க்குமிழ்களாய் எட்டிப்பார்த்து ஏங்கி உடைகின்றன என் கனவுகள்! உன் ஸ்பரிசம் தேடி கரையில் மோதி களைத்துக்கிடக்கின்றன என் கைகள்! அனைவருக்கும் மரணக்கடல் என்னை, உனக்கு சவாலாகவே இல்லை என்றாயாம்! காதல் மயக்கத்தில் அலைக்கரம் கொண்டு வாரி அணைத்தல்லவா கரை சேர்த்தேன்! அவமானம் தாங்காமல் உள்ளம் பொங்கியதில் என் தீவுக்குழந்தை ஒன்று அமிழ்ந்தே போயிற்று! கதிரவனின் கோபம் என்னை வானுக்கு நாடு கடத்த இப்போ முகிலாய்Continue reading “பெண்மை”

உயிரின் துடிப்பு

மழைக்கரங்கள் பூமியை கோடு கிழித்த ஓர் நாளில் தான் என் கண்களில் உன் உருவப்பதிவு! சொட்டும் நீர்த்திவலைகளாம் உன் ஞாபகங்களால் தான் இரவுகள் தோறும் என் கண்விழிப்பு! தலை துவட்டும் கரங்களென தேடும் உன் ஓரப்பார்வைக்காய் தான் தினமும் வீதியில் என் காத்திருப்பு! வெடித்துப்போன நிலமதை ஓட்ட வைக்கும் மழை போல உன் ஒற்றை வரி பதிலில் தானடி இருக்கும் என் உயிர்த்துடிப்பு!

எங்களை பிரிக்காதீர்கள்!

உன்னை என்னிடமிருந்து பிரித்த அக்கயவன் என் சாபம் பலித்ததால் தான் ஒவ்வோர் ஆண்டும் பரீட்சை மண்டபத்தில் நின்று கொண்டே இருக்கிறான் நிற்கட்டும் ! நீயின்றி அன்று நான் பட்ட துன்பம் சொல்லி மாளாது எந்தனது கையாலே பெருக்கிக் கூட்டி படித்ததும் தகராறாய் எத்துணை துன்பம்! நன்றாய் நிற்கட்டும் அவன். அடிக்கடி அழுத்தினால் உனக்கு வலிக்குமென்று மென்மையை கையாள்வேன் என் கணித்தல்கள் அத்தனையும் தவறென உன் விழித்திரையில் காட்டி நின்றாய்! அழுத்தவே படைக்கப்பட்டதாய் புரிய வைத்தாய்! என் விரல்கள்Continue reading “எங்களை பிரிக்காதீர்கள்!”

ஞாபகங்கள்

ஏகாந்த இரவில் விழி மூடியும் உறங்காத விந்தைப்போழுதுகளில் மட்டும் சிநதையை துளைக்கின்றது உன் ஞாபகங்கள்! நீயும் நானுமான தனிமைத்தருணங்கள்! அத்தனையும் கற்பனைகள் சேமிக்கப்படுகின்றன நினைவுகள் என்னும் குங்குமச்சிமிழ்களில்! காலங்கள் நீள்கின்றது வளர்ந்து கொண்டே போகின்றன சிமிழ்கள் அதை தானும் திறக்காமல் என்னையும் திறக்க விடாமல் ஒரு நாயாய் காவலிருக்கின்றது என் விதி! இதோ! தாக்கமும் ஓரிடத்தில் மறுதாக்கமும் அதேயிடத்தில் நியூட்டனின் விதியை உடைக்கிறது என் காதல்! என் கண்களில் நிகழ்வதோ நீரின் நிலைமாற்றம்! ஆம் பொங்கி வரும்Continue reading “ஞாபகங்கள்”

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு குட்டிக்கவிதை! படிக்கும் போதே அர்த்தம் புரிவது ஒரு சிலருக்கு மட்டும்தான்! படித்த பின் புரிந்து கொள்கிறார்கள் இன்னும் சிலர்! பலருக்கோ பலமுறை படித்த பின் தான் அர்த்தம் புரிகிறது!

நான், நீ, நாம்!

நான் தொலைந்து விட்ட நிஜங்களுக்குள் கனவுகளை தேடுபவள்! நீ கனவுப்புகைமூட்டத்துக்கு சுவரெழுப்பி நிஜத்தோட்டத்தில் ஸ்தாபிப்பவன்! நாம் இந்த மேகமூட்டத்தை இதயச்சுவர்களால் சிறைப்பிடிக்கும் முயற்சியில் உந்தனது வெற்றி!

தோல்வி!

முற்றுப்புள்ளியிலும் முகவுரை எழுதும் சின்னக்கமா தான் தோல்வி! தொட்டதனைத்திலும் தோல்வி என்கிறாயா? அனுபவம் என்னும் ஊன்றுகோல் கொண்டு அத்தனை கமாக்களிலும் முகவுரை எழுது! உலகம் என்பது முட்புதரும் அல்ல ரோஜா மெத்தையும் அல்ல விதை போடா வெறும் நிலம்! நீ எதை விதைக்கிறாயோ அதுவே முளைக்கிறது! விதை நிலத்தில் மட்டும் விதை போட நினைக்காதே அது எவனுடையதோ உழைப்பு! தரிசு நிலத்தில் சிரிக்கும் ஒற்றை நெல்மணிதான் உன் உழைப்புக்கு சிறப்பு! ஆற்றின் போக்கில் மணலாய் இராதே உந்தன்Continue reading “தோல்வி!”