டூயட் -2

“ப்ரித்விக்கு ஒண்ணுமே இல்ல க்ரிஷ். மென்டல் ஸ்ட்ரெஸ் தான் அதிகம் போலிருக்கு.  அதிகமா குடிக்க ஆரம்பிச்சிருக்கார், சாப்பாட்டுலயும் கவனம் இல்லை போலிருக்கு. அதனாலயும் உடம்பு ரொம்ப வீக்கா இருந்திருக்கு..எல்லாம் சேர்ந்து தான் இப்படி ஒரேயடியா விழுந்துட்டார். அவரோட பேரன்ட்ஸ் இல்லன்னா அவருக்கு ரொம்ப வேண்டியவங்களை வரச் சொல்லுங்க. அவர் குணமாக அவங்களோட உதவி ரொம்ப தேவைப்படும்” பேசிக்கொண்டே ப்ரித்வியின் மெடிக்கல் ரெக்கார்டை க்ரிஷிவ்விடம் கொடுத்தார் டாக்டர்.

என்னமோ ஏதோ என்று பதறிக்கொண்டு வந்திருந்த க்ரிஷிவ்வுக்கோ அவர் சொன்னது முதலில் பெருத்த ஆசுவாசத்தை உண்டுபண்ணியது.

“அவனுக்கு வேண்டியவங்க நாங்கள் ரெண்டு பேர் மட்டும் தான் டாக்டர் இப்போதைக்கு” உதடு மறுபடியும் கோடாக இறுகியது அவனுக்கு

புரிந்து கொண்டேன் என்ற பாவனையில் தலையசைத்த டாக்டர் “உடம்பு குணமானதும் கவுன்சிலரிடம் இரண்டு தடவை சிகிச்சை எடுத்துக்கொண்டதும் ப்ரித்வியை டிஸ்சார்ஜ் செய்து  விடலாம்.” என்றார் மென்மையாக

“தாங்க்ஸ் டாக்டர்” என்ற படி எழுந்த க்ருஷிவ் வெளியே வந்து லிப்டுக்குள் தொற்றிக்கொண்டு ப்ரித்வி வைக்கப்பட்டிருந்த அறையின் கண்ணாடித்தடுப்பு வழியே எட்டிப்பார்த்தான்.

இப்போதும் பலவீனமாய் உடலை அசைத்தபடி அரைமயக்க நிலையில் தான் இருந்தான்.

சின்ன வயதில் இருந்தே அவனுக்கு நான், எனக்கு அவன் என்று வாழ்ந்து பழகியவர்கள் அல்லவா,, இப்படிப்பார்க்க மனம் வலித்தது அவனுக்கு.

“நான் இவ்வளவு நேரமும் உள்ளே தான் இருந்தேன். இடையில் ஒரு தடவை லேசாய் முழிப்பு வந்தது அவனுக்கு. ஏன்டா என்ன இங்க வச்சுருக்கீங்க. அறிவில்லன்னு திட்டிட்டே திரும்ப மயங்கிட்டான்!!!” துருவ் காதருகே அறிவிக்க லேசான புன்னகையோடு அவன் புறம் திரும்பியவன் “இவன் முழுசா குணமாகற வரை மயக்கத்திலே தான் வச்சிருக்கணும் போலிருக்கே!” என்று அலுத்துக்கொண்டபடி “வா முதல்ல சாப்பிட்டு வந்துருவோம். டாக்டர் எதுக்கும் பயப்படத்தேவையில்லன்னு சொல்லிருக்கார்.” என்று துருவ் பின் தொடர கான்டீன் நோக்கி நடந்தான்.

மீண்டும் ஒருமுறை புரண்டான் ப்ரித்வி.

ஹனி…

எனக்கு நீ வேணும்..எங்கிருக்கே நீ? கோபத்தில் தவறு செய்தேன் தான் அதற்காக? மன்னிக்க முடியாத தவறாடி அதெல்லாம்? ஹனி…

மீண்டும் இமைகள் மூடிக்கொள்ள அரைகுறை மயக்கம் கருந்துளையாய் அவனை இழுத்துக்கொண்டது.

தூக்கமும் இல்லாத விழிப்பும் இல்லாத இடைவெளியில் அவன் மிதக்க மனக்கிணற்றில் அமிழ்ந்து கிடந்த பாசியாய் மெல்ல மெல்ல ஹனி மேலெழுந்து கொண்டிருந்தாள்

எனையறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி

நிஜம் புரியாத நிலை அணிந்தேன் எதுவரை சொல்லடி..

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

கனவெல்லாம் நீதானே..

விழியே உனக்கே உயிரானேன்..

பதினொரு மாதங்களுக்கு முன் ஒரு மாலை

வியர்வையால் ஈரமாகி விட்ட தலைமுடியை ஒருதடவை சிலிர்த்து துளிகளை பறக்க விட்ட ப்ரித்வி பந்தை பலமாக கோல் கம்பத்தை நோக்கி உதைத்து விட்டு ஓட முயல,

சட்டென சறுக்கி வந்து பந்தை கையில் லாவகமாக பிடித்து இடுப்பில் வைத்த படி “துருவ் போய் ரெடியாகு. PV நீ போய் ஒருதடவை மயூருடன் ரிஹர்சல் பார்த்துவிடு, நேரம் ஆகிவிட்டது” என்று விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான் க்ரிஷிவ்

விளையாடறியா? என்றபடி பின் புறம் நடந்து கொண்டிருந்தவனின் இடுப்பில் ப்ரித்வி உதைக்க வர அதை நொடியில் கணித்து விலகிக்கொண்டவனின் உதட்டில் கள்ளச்சிரிப்பு ஜனித்திருந்தது.

“ஒவ்வொரு தடவையும் நாங்கள் தானே போய் ரிஹர்சல் பார்ப்போம். இந்த தடவை நீ தான் போகிறாய்!” துருவ் சொல்லிவிட்டு முன் ஜாக்கிரதையாக ஓடிப்போய் க்ரிஷிவ்வின் முன்னே நின்று கொண்டான்

“மயூருடன் நாம் எதற்காக அங்கே போய் ரிஹர்சல் பார்க்க வேண்டும்! ஆப்சர்ட்! அவன்களுக்கு டெவில்சை தெரியாதா? நீ எதற்காக ஒத்துக்கொண்டாய்? சொந்தமாக பான்ட் வைத்து பிரபலமான தங்களின் தொழிலில் பிறர் தலையிடுவது போன்ற அந்த கோரிக்கை ப்ரித்விக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

“நாங்கள் ஒன்றும் வெளியார் இசையில் பாடப்போவதில்லை. எங்களுடைய இசை. எங்கள் கலைஞர்கள்! ஒவ்வொரு செக்கனும் யார் விரல் எங்கே இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் நாங்கள். மேடை மட்டுமே எங்களுக்கு மாறும். திரை விலகும் ஐந்து நிமிடத்தில் செய்யவேண்டிய தயார்படுத்தலை நிகழ்ச்சி தொடங்க எட்டுமணி நேரம் முன்னரே வந்து செய்யச்சொன்னது அவனுக்கு தங்களுடைய சுயமரியாதையை சீண்டி விட்டது போலிருந்தது. சும்மாவே இந்த மாதிரி மேடைத்தயார்படுத்தல்களை க்ருஷிவ்வே செய்து விடுவதால் அவனுக்கு இந்த சமாளித்தல் வேலைகள் எல்லாம் செய்ய நேரந்ததே இல்லை!

“டேய்..இது அரசாங்க விழா..அவர்களுடைய ஒழுங்கமைப்பாளர்களுடன் நாங்கள் ரிஹர்சல் செய்ய வேண்டுமாம். நாங்கள் ஒன்றும் முழுதாக செய்து காட்ட வேண்டியதில்லை. ஜஸ்ட் யார் யார் எங்கே நிற்க வேண்டும் என்று பெயருக்கு கைகாண்பித்து விட்டு வந்து விடு. அதைத்தான் நாங்கள் வழக்கமாக செய்வோம்.”

“அப்படியானால் நீங்களே போக வேண்டியது தானே..என்னை ஏன் தொல்லை பண்ணுகிறாய்! நான் ரிஹர்சல் எல்லாம் போய் பார்க்க மாட்டேன். பேசாமல் கான்சல் பண்ணிவிடு.”

“ஓ..கான்சல் பண்ணலாமே?. அவர்கள் ஜாஸ்பரை பர்போர்ம் பண்ணக்கூப்பிடுவார்கள். அதன் பின் world cup opening செரிமனியிலும் ஜாஸ்பரே பர்போர்மான்ஸ் பண்ணுவான்..பரவாயில்லையா?” போகிற போக்கில் தேவையான குண்டை தூக்கிப்போட்டு விட்டு க்ரிஷிவ்வின் பந்தை பறித்து பவுன்ஸ் செய்தபடி முன்னே நடந்தான் துருவ்

பல்லைக்கடித்தபடி அவனை முறைத்த ப்ரித்வி நீங்கள் இருவரும் எங்கே கிளம்புகிறீர்கள் என்று கேள்வி கேட்டான்.

லேசான சிரிப்புடன் திரும்பி பார்த்த துருவ் girls காலேஜ் ல fan மீட்டிங் ஒண்ணு என்று கண்ணடித்தான்.

வெறுப்பில் உதடுகளை சுழித்தான் ப்ரித்வி

“PV ஒன்று செய்வோமா?  நீ fan மீட்டிங்குக்கு போ. நான் ரிஹர்சலுக்கு போகிறேன். ஏதாவது ஒன்றுக்கு நீ போயே ஆகவேண்டும்” துருவ் இன்னும் தூண்டில் போட

ஆளைவிடு சாமி, நான் ரிஹர்சலுக்கே போய்த்தொலைக்கிறேன் என்றவன் வியர்வையில் நனைந்து போயிருந்த டிஷர்ட்டை கழற்றி கையில் சுழற்றியபடி மாடிப்படிகளில் ஏறினான் ப்ரித்வி

அவன் fan மீட்டிங்க்ஸ் ஐ எவ்வளவு வெறுப்பான் என்று தெரியுமாதலால் அவனது பதிலை எதிர்பார்த்தே இருந்தவர்கள் ஹைபைவ் கொடுத்துக்கொண்டு சிரித்தது புரிந்தாலும் கண்டுகொள்ளாமல் படிகளை தாவிக்கடந்தான் அவன்

world cup opening இல் devils perform செய்வது ப்ரித்வியின் நீண்ட நாள் கனவு. இங்கே மக்களாதரவு நன்றாக இருந்தால் இலகுவாக அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற திட்டத்தினால் மட்டும் தான் அரசாங்கத்திடம் இருந்து இந்த சுதந்திர தின விழாக்கொண்டாட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள் அவர்கள்.  அவர்களின் எதிரி பான்ட் ஜாஸ்பர் குழுவும் அதற்காகத்தான் முயற்சி செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும். ஜாஸ்பர் மிகவும் செல்வாக்கு மிகுந்த குடும்ப வாரிசு என்பதால் இறுதி முடிவு வரும் வரை எதையும் கணிக்க முடியாத நிலைமைதான் devils பணிந்து போக வேண்டியதன் காரணம்!

மயூரை மற்ற குழுவினருடன் நிகழ்ச்சி நடைபெறும் தாமரைத்திடலுக்கு வருமாறு போனில் பணித்தவன் குளியலறைக்குள் நுழைந்தான்

ஷவர் எடுத்து விட்டு ஈர முடியை லேசாய் டவலில் ஒற்றி விட்டு நெற்றியில் இருந்து பின்னோக்கி வாரி ஒரு நெளி நெளியாய் கம்பி போலிருந்த ஹேர் பான்ட் ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டவன் கழுத்து வரை வந்து விழுந்த முடியை கண்ணாடியில் ஒரு தடவை ஆட்டிபார்த்து விட்டு படிகளில் இறங்கினான்.

பக்கவாட்டு அறையில் மைத்ரி மற்ற இருவருக்கும் மேக் அப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஹேர் ட்ரையர் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.

அவன் நிகழ்வு நடைபெறும் திடலை சென்றடைந்த போது ஏற்கனவே மயூர் மற்றக்குழுவினருடன் நின்று கொண்டிருந்தான்.

சீக்கிரம் இதை முடித்து விட்டு வந்து விடலாம் என்றபடி ஓரப்புன்னகையோடு வேகமாய் நடந்த ப்ரித்வி மேடையை பார்த்ததும் வாய்க்குள் சபித்தபடி தன் நடைக்கு பிறேக்கிட்டான்

மேடையில் ஒரு நாடகக்குழு பயிற்சி செய்து கொண்டிருந்தது!

“கொஞ்சம் வெயிட் பண்ணவேண்டும் போலிருக்கிறது PV” என்ற மயூருக்கு தலையசைத்தவன் கடுப்பாய் மேடையை நோக்கினான்.

ஒரு பான்டசி நாடகம் போலிருக்கிறது. கொஞ்சம் பிரமாண்டமாய் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். சும்மா சொல்லக்கூடாது மிக உயரமான நீள அகலங்கள் உள்ள மேடைதான்

கருப்பாய் முதுகில் நீளமான துணி போர்த்திய ஒருவன் வந்து வந்து போய்க்கொண்டிருந்தான். அவன் பேயாக இருக்க வேண்டும்.

பல்லைக்கடித்தபடி ஒரு பதினைந்து நிமிடம் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ப்ரித்வி அவர்கள் ஒரே சீனையே கிட்டத்தட்ட ஐந்து தடவைக்கு மேலாக திரும்ப திரும்ப நடித்துக்கொண்டிருந்ததில் வெகுவாக கடுப்பாகிப்போனான்.

பேயின் ஆதிக்கத்துக்குள் உலகம் வருவதை குறியீடாக சொல்வது போல அந்த இளைஞனின் முதுகில் இருந்த கருப்புப்பட்டுத்துணி கீழிருந்த மனிதர்களை மொத்தமாக மூட மூடப்பட்டவர்கள் உள்ளே இரு நடன அசைவுகளை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு இன்னும் கோர்டினேஷன் சரியாக வரவில்லை. திரும்ப திரும்ப அதையே செய்து பார்த்துக்கொண்டிருக்க கீழே இருந்து பார்த்தபடி பொறுமை இழந்து கொண்டிருந்தவனோ ஒரு கட்டத்தில் “தட்ஸ் இட்.” என்றபடி எழுந்திருந்தான்.

“மயூர்” என்ற படி அவன் மேடையை நோக்கி நடக்க புரிந்து கொண்ட சோம்பல் புன்னகையுடன் அவனை தொடர்ந்தான் மயூர்.

மேலே அந்த பேய் இளவரசன் ஓட ஆரம்பிக்க மற்றவர்களை பட்டுத்துணி மூடிக்கொண்டிருந்தது.

அவர்களுக்கு முனே வந்து நின்ற ப்ரித்வி “மயூர் நீ இங்கே.. ராஜ்.. சந்தோ..என்று சடசடவென ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் இடங்களை கையால் காண்பிக்க மற்றவர்களும் தாங்கள் நிற்கப்போகும் இடம் தங்கள் வாத்தியங்களுக்கான கரண்ட் இணைப்பு எங்கே வரும் என்றெல்லாம் அவசரமாய் குறிப்பெடுத்தார்கள்.

நாடகத்தின் நடுவில் வந்து நின்று கடகடவென அவர்கள் உத்தரவிட்டதை கண்ட பேய் இளவரசன் என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒரு கணம் அப்படியே நின்றான்.

பட்டுத்துணி மூடிக்கொண்டிருந்தவர்களோ இம்முறை அச்சுப்பிசகாமல் தங்கள் நடன அசைவுகளை செய்ய மேடையின் பின் புறம் இருந்த பயிற்றுவிப்பாளர் முன்புறம் ப்ரித்வி செய்து கொண்டிருந்த வேலை தெரியாமல் மகிழ்ச்சியில் பட்டென கைதட்டி நெகஸ்ட் என்றார்

அடுத்த நிமிடம் திரையின் உச்சியின் இருள் மறைவான மூலையில் இருந்து தன்னுடைய இடுப்பில் கேடரால் தன்னை உச்சியில் இருந்து கம்பியோடு பிணைத்துக்கொண்டிருந்த பெண்ணொருத்தி  மெல்ல மெல்ல பாடிய படி அந்தரத்தில் மிதந்து கீழே வந்து கொண்டிருந்தாள்

ஏதோ கடவுளின் தூதர் அல்லது தேவதை வேஷம் போலும் அவளுக்கு!

“போகாதே என் மானுடமே..

உனக்காக உலகு செய்தேன்..

உனக்காகவே” என்று சோகமாய் பாடிய படி அவள் இறங்கிக்கொண்டிருந்தாள்.

பலநாள் பயிற்சி ஆக இருக்க வேண்டும். கொஞ்சம் கூட நிதானம் தப்பாத இறக்கம். தைரியசாலி தான்!

ட்ராக் சூட் போட்டுக்கொண்டு ஒரு கையில் மாங்கோ பார் வைத்துக்கொண்டு கண்ணை மூடி உருக்கமாய் பாடிய படி கீழிரங்கிக்கொண்டிருன்தவள் கால்வாசித்தூரம் இறங்கிய போதுதான் கண்ணைத்திறந்து மேடையில் நின்றவர்களை கண்டு குழம்பி நிதானமிழந்து வேகமாய் ஐயோ என்றபடி கீழே வர ஆரம்பித்தாள்

சில கணங்களில் நடந்து விட்டவைகள் பேரும் சிரிப்பை உண்டு பண்ண கண்ணில் பொங்கி வரும் சிரிப்போடு கீழே வந்து கொண்டிருந்த அந்த பெண்ணை வேடிக்கை பார்த்தான் ப்ரித்வி.

அதற்குள் பயிற்சியாளர் இவர்களை கண்டு “ ஹேய் நீங்க இங்கே என்ன பண்றீங்க.. என்று திகைத்து பின் ப்ரித்வியை விலகிக்கொள்ளும் படி கத்தினார்.

அந்தப்பெண் சரியாக தான் நிற்கும் இடத்தில் தான் தரைக்கு வருவாள் என்று புரிந்தாலும் விலகவேண்டும் என்று மூளைக்கு எட்டாமல்  அப்படியே நின்றவன் “மூவ்! என்று கத்தியபடி வந்து தன்னை மோதியவளோடு தரையில் சரிந்து விழுந்தான்.

அவன் முதுகு தரையில் பட விழுந்து கிடக்க அவன் நெஞ்சில் விழுந்து விட்டவள் வாய்க்குள் கோபமாய் முணுமுணுத்த படி எழுந்திருக்க முனைந்து மீண்டும் தடுமாறி அவன் நெஞ்சில் விழுந்து விட்டாள்

கண்ணில் சிரிப்போடு அவன் அசைவுகளையே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஹாயாக படுத்திருந்தவனை நெருப்பாய் முறைத்தவள் “திமிர் பிடிச்சவன்” என்று வாய்க்குள் திட்டியபடி ஒரு வழியாக எழுந்து கொண்டு இடுப்பில் பிணைத்திருந்த கொக்கிகளை முதலில் கழற்றி விட்டாள்.

யாரோ தண்ணீர் கொண்டு வந்து அவளுக்கு கொடுத்தார்கள்

தன்னை அடையாளம் கண்டு கொண்டாலும் ஒரு இதுவாகக்கூட மதிக்காமல் அவள் பாட்டுக்கு தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் அவனை ஒரு பாட்டம் முறைத்து வாய்க்குள் திட்டிக்கொண்டே விலகிப்போனவளை கண்டு ஒரு இமையை ஏற்றி இறக்கியவன் ஹேய் மாங்கோ.. என்று குரல் கொடுத்தான்

விழிகளுக்கு தணலிட்டாளோ என்று ஒரு கணம் சந்தேகம் கொள்ளுமளவுக்கு நின்று அவனை முறைத்தாள் அவள்.

சாரி. நான் நீ அப்படி வருவேன்னு எதிர்பார்க்கல.. என்று வழக்கமில்லாத வழக்கமாய் தன்னிலை விளக்கம் கொடுத்தான் ப்ரித்வி.

உன் சாரி எனக்கு தேவையில்லை. முடிஞ்சா மத்தவங்க கிட்ட சாரி சொல். கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா உனக்கு? நாங்களும் ஆர்ட்டிஸ்ட் தான். எங்களுக்கும் ரிஹர்ஸ் பண்ண ரைட்ஸ் இருக்கு! உனக்கு மட்டும் தான் எப்போவுமே முன்னுரிமை கிடைக்கணுமா? மக்கள் சப்போர்ட் இருக்குன்னு ஆணவத்துல ஆடுற நீயெல்லாம் ஒருநாளைக்கு பட்டுத்தான் திருந்துவ!

படபடவென பொறிந்து விட்டு அவள் விலகிச்செல்ல குழப்ப முகம் கோப முகமாக மாற விறுவிறு என மேடையை விட்டு இறங்கி நடந்தான் ப்ரித்வி

 

 

Advertisements

டூயட்- 1

டெ…வி…ல்…ஸ்

டெ…வி…ல்…ஸ்…..ஸ்…ஸ் இளஞ்சிட்டுக்களின் ஆரவாரம் திரையின் பின்னேயும் காதுகளை அதிர வைத்துக்கொண்டிருந்தது.

வழக்கம் போல அந்தப்பரபரப்பினால் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் மென்மையான அவன் முகத்தில் நிரந்தரமாய் தேங்கி நிற்கும் புன்னகையுடன் மேடையில் இசைக்கலைஞர்களுடனான கடைசிக்கட்ட சரிபார்த்தல்களை செய்து கொண்டிருந்தான் க்ரிஷிவ்.

“க்ரிஷ்..”

மிக லேசாய் மையிட்ட விழிகள் லேசான பதட்டத்தில் பள பளக்க நெற்றிமுடியை மைக் பிடித்திருந்த வெள்ளி மோதிர விரலால் ஒதுக்கிவிட்ட படி அவசரமாய் நடந்து வந்து கொண்டிருந்தான் துருவ்.

கேள்வியாய் திரும்பிய க்ரிஷிவ்விடம் “இன்னிக்கும் நாம ரெண்டு பேரும் மட்டும் தான் போலிருக்கு” லேசான படபடப்பை முகத்தில் காண்பித்த படி முறையிட்டான் துருவ்

ஷ்.. என்றபடி திரைப்பக்கமாய் அவனுக்கு கைநீட்டிகாட்டிய க்ருஷிவ் துருவ்வின் தோளில் கைபதித்தான்.

“நம்மேல் நம்பிக்கை வச்சு வந்திருக்காங்க. அதைமட்டும் மனசுல வச்சுக்க” என்றபடி லேசான பதட்டம் தொற்றிக்கொண்டிருந்த சின்னவனின் விழிகளுக்குள் பார்த்தவன் கண் சிமிட்டிவிட்டு பறப்பது போல அபிநயம் செய்து கொண்டே  “வீ வில் வீ வில்” என்று ஆரம்பிக்க, தன் கன்னக்குழி சிரிப்போடு முழங்கால் மடித்து உடலை முன்னோக்கி வளைத்த படி “ராக் இட்!” என்று முடித்து வைத்தான் துருவ்!

வாத்தியக்கலைஞர்கள் தங்கள் தங்கள் வாத்தியங்களோடு தயார் நிலையில் நின்றுகொண்டிருக்க துருவ்வும் தன்னுடைய கிட்டாரை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொள்வதை குறிப்பெடுத்துக்கொண்ட கிருஷிவ் தானும் போய் கீபோர்டின் முன்னே அமர்ந்தான்.

மாபெரும் கரகோஷங்களிடையே திரை விலகியது. உற்சாக நடனமொன்றுடன் வணக்கம் சொன்ன துருவ் கிட்டாரை மீட்டியபடி பாட ஆரம்பித்தான். குழந்தைக்குதூகலமும் துள்ளல் ஆட்டமும் கொண்டு எப்போதுமே devils இன் முதல் பர்போர்மன்சை ஆரம்பித்து வைப்பவன் அவன்தான்.

“தமிழே என் அழகே.. உயிராய் உறவாய் என் உலகாய் என்றும் நீ” என்று துருவ்வினுடைய மாயக்குரல் ஆரம்பித்து ராக் இசைக்குள் நுழைய மொத்தக்கூட்டமும் இசையெனும் மாய உலகில் மெல்ல மெல்ல நுழையத்தொடங்கியது.

போட்டுக்கொண்டிருந்த ஜெர்சியை கழற்றி வீசிவிட்டு கிட்டாரை சுழற்றி ஆடியபடியே பாடிக்கொண்டிருந்த துருவ்வோடு கிருஷிவ்வின் மெலோடிக்குரலும் சேர்ந்து கொள்ள கூட்டம் கிறங்கித்தான் போனது. ஆங்காங்கே devils என்ற சொல்லுக்கான ஆங்கில எழுத்துக்கள் தாங்கிய பதாகைகளோடு மக்கள் ஆடிக்கொண்டிருக்க அடுத்த பாடலுக்காய் ஹம்மிங்கை ஆரம்பித்த படி முன்னே வந்தான் கிருஷிவ்.

கண்களை மூடி இசையை உள்வாங்கியபடி அவன் தொடர்ந்து ஹம் செய்து கொண்டிருக்க கூட்டம் திடும்மென ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது.

ப்ரித்வி..ப்ரித்வி.. ப்ரித்வி!

எப்படி ஆரம்பித்ததென்றே தெரியாமல் அரங்கம் முழுவதும் “ப்ரித்வி” என்ற ஒரு பெயரே கேட்டுக்கொண்டிருக்க சின்னப்புன்னகையுடன் விழி திறந்தான் கிருஷிவ்.

விறு விறுவென பின் புறமிருந்து மேடையின் நடுப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தவனோ பட்டென அங்கிருந்த மைக்கொன்றை உருவி எடுத்துக்கொண்டு முன்னேற உள்ளே லேசாய் துணுக்குற்றதை காண்பித்துக்கொள்ளாமல் முன்னே வரும் படி துருவ்வுக்கு சமிக்கை செய்தான் க்ரிஷிவ்.

இறுதியில் புயல் கரை சேர்ந்து விட்டதா? அடக்கவியலாமல் உதட்டில் புன்னகை முளைவிட கண்களோ அவசரமாய் நண்பனை அளவிட்டது.

கழுத்து வரை நீண்டு கிடக்கும் கூர் முடியை அவன் வழக்கமாய் கட்டிக்கொள்ளும் கியூட் போனிடெயில் இல்லை, அவனது லேசான முறைப்பும் துள்ளலுமான நடை இல்லை, உடையிலும் நேர்த்தி இல்லை, ஏன் இந்த அரங்கத்துக்காய் தயாரான ஒரு அடையாளம் கூட இல்லை. மொத்தத்தில் ப்ரித்வி அவனாகவே இல்லை!  துருவ்வும் கவலையாய் அவனையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இவர்களை கவனித்தானில்லை ப்ரித்வி. லேசாய் தடுமாறி நடந்தாலும் இத்தனை வருஷப்பழக்கத்தினால் மேடையில் அவனது அசைவுகளில் எந்த தயக்கமும் தெரியவில்லை.

நின்று ஒரு நிமிடம் ஆழ மூச்செடுத்தவன் ஆஆ…. ஆகாரமாய் ஆரம்பித்தபடி நேரே எதையோ விழிகளால் துளாவினான். எதிரே இருந்த கூட்டம் வெறுமனே அசையும் மின்விளக்குகளாய்த்தான் பட்டது.

அவளை மட்டுமே கண்களுக்குள்ளும் மனதினுள்ளும் நிரப்பிக்கொண்டவனுக்கு வேறு எப்படித்தெரியும்? இசைக்கலைஞர்களை கிரிஷிவ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் அவர்களை திரும்பிக்கூட பாராமல் அவன் பாட ஆரம்பித்து விட்டான்.

சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்

ஏனோ கோபங்கள் சொல்லடி

அவன் பாடப்பாட பதாகைகளும் ரிதத்துக்கு ஏற்ற படி அசைந்தன.

கண்ணீர் திரண்டு கண்களை மறைக்க தன்மேலேயே பொங்கி வந்த ஆத்திரம் அவனை கையாலாகாதவனாய் செய்ய கைகளிலும் உடல்மொழியிலும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியபடி முழங்காலில் மடிந்து விழுந்தான் அவன்..

உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்

கொஞ்சிப்பேசாமல் கண்ணில் தூக்கமில்லை

என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்

விட்டுச்செல்லாதே இது நியாயமில்லை

சோகமயமான பாடலை உணர்வுபூர்வமாய் அவன் பாடுவதாய் எண்ணிக்கொண்ட கூட்டமோ அவன் குரல் கடத்திய உணர்வுகளை தாங்கமுடியாமல் கண் கலங்கியது

இதோ இப்படியொரு மேடையில் தானே அவளை நான் முதன்முதலில் கைகளில் ஏந்தினேன்…..

கைகளை நீட்டி அந்தக்கணத்தை மீண்டும் கொண்டுவர முனைந்தான் ப்ரித்வி.

இதோ இங்கே தான்.. இதே இடத்தில் அவர்கள் மூவருடனும் சேர்ந்து கூட்டம் முழுவதற்கும் ஒரு உற்சாக அலையை அவள் கடத்திக்கொண்டிருப்பாள்

ஓஒ என் ஹனி???

அவன் வாய் விட்டு சொல்ல முயன்ற கணம் பாடலின் இடையில் வந்த ஹம்மிங் ஒன்றை பாடுவதை போல அவனை மறைத்தபடி க்ரிஷிவும் துருவ்வும் பாட ஆரம்பித்தனர்.

ப்ரித்விக்கு அதெல்லாம் கவனத்தில் படவே இல்லை!

எதிரே தெளிவின்றித்தெரிந்த காட்சிகளை மறக்கடித்து ஹனியுடனான ஞாபகங்களுக்கு இசை அவனை கொண்டுபோய்க்கொண்டிருந்தது.

அவன் சொற்களால் காயம் பட்ட அவளின் கலங்கிய கண்கள் மட்டுமே  அவளின் இறுதி நினைவாய் இன்னும் அவனிடம்..

என் கைகளில் ஏந்தியபோதே எனக்குப்புரிந்திருக்க வேண்டாமா? அவள் என்னை பூரணப்படுத்த வந்தவள் என்று! குத்திக்கிழித்து காயப்படுத்தி அநாதை போல அனுப்பி வைத்து விட்ட நான் பாவியடி!!! உள்ளிருந்து பொங்கி வந்த அழுகை பாவமாய் பாடலில் கலந்திருக்க வேண்டும். மேடையே அவன் குரலுக்கு அழுவது போல மாறியிருந்தது.

எந்தன் உயிர்க்காதலை உந்தன் காதோரம்

ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்!

ஹனி எங்கே இருக்கிறாய்!!!!!!!!! தடுமாறும் உடலோடு  எழுந்திருக்க முனைந்த ப்ரித்வி அப்படியே நினைவிழந்து மேடையில் விழுந்தான்

கூட்டம் ஒருநிமிஷம் அதிர்ச்சியில் நிசப்தமானது

நிலைமை புரிந்து மேடையின் விளக்குகள் அனைத்தும் ஒளிரச் செய்யப்பட்டு உதவி வர முன்னரே மின்னல் வேகத்தில் அவனை தூக்கிக்கொண்ட துருவ்வும் க்ரிஷிவ்வும் மேடையின் பின்புறம் நோக்கி வேக வேகமாய் விரைந்தனர்

“பாடகர் ப்ரித்வி மேடையிலேயே மூர்ச்சையாகி வைத்தியசாலையில் அனுமதி. ஹனி devils ஐ பிரிந்தது தான் காரணமா? வைத்தியசாலைக்கு வெளியே ஏராளம் ரசிகர்கள் கண்ணீருடன் பிரார்த்தனை!

மீண்டு வருவார்களா டெவில்ஸ்?”

அன்றைய இரவை ஊடகங்களுக்கு பரபரப்பானதொன்றாக மாற்றி விட்டு எதுவுமே தெரியாமல் வைத்தியசாலையில் நினைவின்றி படுத்திருந்தான் ப்ரித்வி.

P.S: makkale..இது rock band ஒன்று பற்றிய கதை, devils எப்போதுமே தாங்களே எழுதி இசையமைத்து வெளியிட்ட பாடல்களையே மேடையில் பாடுவார்கள். நான் தான் உங்களோடு கனெக்ட் ஆவதற்காக தமிழ் சினிமா பாடல்களை பயன்படுத்துகிறேன் என்பதை நினைவில் கொள்க. :p 😀

மக்களே.. ஒரு நாவல் முடிந்ததும் நான் லிங்க்குக்கு கொடுத்த காலம் முடிந்தாலும் உங்கள் மெயில் ஐடிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். என் வாசகர்களை ஏமாற செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நான் அப்படி செய்வேன். ஆனால்  நாவல் முடிந்து பலகாலம் ஆனபிறகும் pdf கேட்பது நன்றாக இல்லை! புத்தகத்தை பதிப்பகத்துக்கு கொடுத்த பின்னர் நான் ப்ரீ லிங்க் கொடுப்பது நன்றாக இருக்காது என்பதற்கு மேலாக எனக்கு நாவல் எழுதுவது வெறும் பொழுது போக்கு மட்டும் தான் மக்களே.. நான் எழுதவும் வேண்டும் தனித்தனியாக உங்களுக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும் என்றால் நேரத்திற்கு நான் எங்கே போவேன்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். என் நாவல்களை பல தளங்களில் அப்லோட் செய்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் ஒரு பெரிய விடயமாக நான் எடுத்துக்கொண்டது கிடையாது. சில நிமிடம் செலவிட்டு கூகிளில் சர்ச் செய்தால் எல்லா நாவலுமே கிடைக்கும். அப்படி முயற்சிக்கலாமே? கூல் ட்ரின்கையும் கொடுத்து அதை வாயிலும் ஊற்றவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. நோ offense!

புதிய வெளியீடு

ஹலோ மக்களே!!! 😀 வித் லவ் மைதிலி நாவல் காதலுடன் மைதிலி என்ற தலைப்பில் மூவர் நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..றேன் …றேன்ன்ன்ன்ன்!

18835472_1456649454398431_161355899_n (1)

உங்கள் பிரதியை இணையம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொள்ள கீழ்வரும் இணைப்பை பார்க்கவும். நன்றி!!

To get your copy

ஆழி -அர்ஜூனா full link

Alia-Bhatt-for-Dabboo-Ratnani-Calendar-2017-Featured-Image-877x509

“தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம் 
கண்டு கொள்ளாத ஒருவன் 
நான் போதும் போதும் என்னும் வரையில் 
புதுமை செய்யும் ஒருவன்..
நான் தேடும் ஸ்ருங்காரன்
இங்கு ஏனோ ஏனில்லை ..
ஒரு நதி ஒரு பௌர்ணமி 😀

ஆழி-அர்ஜூனா Full link