Published novels

1. நீள்கிறதென் பாதை உன் விழிவழியே:

கவிதைகள் மட்டுமே எழுத்தென்று நம்பிய எனக்கு நாவல் எழுத கற்றுத்தந்தது! எப்படி எழுதக்கூடாது என்று இதில் கற்றுக்கொண்டேன்  என்று சொல்வது தான் பொருத்தம்! 😀

2. மீளாதோ என் வசந்தம்

முதலாவதாக பதிப்பிக்கப்பட்ட நாவல். இதன் மின்னூல் இணைப்பும் கீழே தரப்பட்டிருக்கிறது.

3.வரம் தேடும் தேவதை

போரினை வடுக்களை நினைவுறுத்தாமல் யாழ்மண்ணின் இனிமையை மட்டும் தர வேண்டும் என்று பிடிவாதமாய் எழுதிய நாவல் இது. முழுக்க முழுக்க யாழ்ப்பாணப்பேச்சு வழக்கில் எழுதிஇருந்தேன்.

4. கனவு தேவதை குறுநாவல்

மீண்டும் ஒரு காதல் கதை! அதை தவிர வேறொன்றும் இல்லை! 🙂

5. சிந்தூரி

சரித்திரப்பின்னணியில் நான் முயற்சித்த காதல் நாவல்

6. நீ நான் அவன்

இதுவும் இன்னொரு காதல் கதைதான் ஆனால் இரட்டை சகோதரிகளின் ஆதமார்த்தமான பிணைப்பை தொட்டுச்செல்ல முயன்றிருந்தேன்

7. உனக்கெனவே உயிர் கொண்டேன்

இது என் மனதுக்கு மிக மிக நெருக்கமான நாவல். இற்றைக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு பின் வரும் சமூகம் சார்ந்த காதல்.

8. சஹி வெட்ஸ் சஞ்சு

கலகலப்பான லைட்டான ஒரு காதல் நாவல் இது.

9. மெர்குரி நிலவு

பெண்மை e-magazine இல் தொடராக வந்த குறுநாவல்

Advertisements